மலேசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 31, 2015

மலேசிய பிரதமருக்கு எதிராக இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்

ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள மலேசிய பிரதமருக்கு எதிராக போலீசின் தடையை மீறி அந்நாட்டு தலைநகரில் இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் நடைப்பெற்றது. 

சனி, ஜூன் 20, 2015

கடற்கொள்ளையர்கள் கடத்திய மலேசிய எண்ணெய் கப்பல் மீட்பு: கடற்படை அதிரடி நடவடிக்கை

மலேசிய கடற்படை சுற்றி வளைத்ததால் தாங்கள் கடத்திய எண்ணெய் கப்பலை விடுவித்துவிட்டு கடற்கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

மலேசிய அரசுக்கு சொந்தமான ‘ஓர்கிம் ஹார்மனி’ என்ற கப்பல் கடந்த 11-ந்தேதி மலேசியாவின் தான்ஜூங் சேதிலி துறைமுகத்தில் இருந்து 50 ஆயிரம் பீப்பாய் எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

திங்கள், மார்ச் 23, 2015

மலேசியாவில் கொத்தடிமையாக நடத்தப்பட்ட இந்திய இளைஞன் மீட்பு : இன்று விசாரணை!!!

சென்னை கிருஸ்ணாநகரை சேர்ந்த பர்விஸ் மாலிக் என்னும் முஸ்லிம் இளைஞனை சிவா என்னும் நபர் மலேசியாவில்  உள்ள உணவகம ஒன்றிற்க்கு  வேலை  தருவதாக கூறி  அழைத்து சென்று தனது வீட்டில் கொத்தடிமையாக வைத்து சித்தரவதை செய்துள்ளார் .

ஞாயிறு, மார்ச் 08, 2015

239 பேருடன் மலேசிய விமானம் மாயமாகி ஓராண்டு நிறைவு

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி சீனதலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. இவ்விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகினர்.

விபத்தை தொடர்ந்து அந்த விமான பாகங்களை இந்திய பெருங்கடலில் தேடும் பணி தீவிரமாக நடந்தது. இப்பணியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஈடுபட்டன. இருந்தும் விமானத்தின் உதிரி பாகங்களோ அல்லது விபத்தில் இறந்தவர்களின் உடலோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

திங்கள், டிசம்பர் 29, 2014

மலேசியா, தாய்லாந்தில் கனமழைக்கு 24 பேர் பலி

மலேசியா மற்றும் தாய்லாந்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்.

மலேசியாவில் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் தங்களது வீட்டை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டனர். மேலும் அங்கு மழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, டிசம்பர் 27, 2014

மலேசியாவின் வடக்குப் பகுதியில் கனமழை: வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

மலேசியாவின் வடக்குப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014

சிலாங்கூரில் ஆட்சியை இழக்கிறது பி.கே.ஆர்?:6 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நீக்கம்

கடந்த சனிக்கிழமை பி.கே.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிலாங்கூர் மந்திரி புசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம், இன்று மாலை பி.கே.ஆர் மற்றும் ஜ.செ.க-வைச் சேர்ந்த 6 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை உடனடி பதவி நீக்கம் செய்தார்.

வியாழன், ஜூலை 24, 2014

பல முக்கிய நெடுஞ்சாலைகளில் சாலை போக்குவரத்து சுமூகமாக உள்ளது

எதிர்வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படவிருக்கும் ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு பலர் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ள போதிலும் நெடுஞ்சாலைகளில் சாலை போக்குவரத்து சுமூகமாகவே உள்ளது. 

செவ்வாய், ஜூலை 22, 2014

பேராக்கில் புகைமூட்டம்: பள்ளிகள் மூடப்படுகின்றன

பேராக், சித்தியவான் மாவட்டத்தில் கடுமையான புகைமூட்டம் நிலவுவதால் அங்குள்ள பல பள்ளிகள் மூடப்படுகின்றன.
இன்று மதியம் 1.10 நிலவரப்படி, சித்தியவான் பகுதிகளின் காற்றுத் தூய்மைக்கேட்டின் அளவு 239-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலையில் IPU எனும் காற்றுத் தூய்மைக்கேடு 250-ஆகப் பதிவாகியுள்ளது.

சனி, ஜூலை 19, 2014

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரம்: ரஷ்யா மீது ஒபாமா குற்றச்சாட்டு

மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.-17 விமானம் நேற்று உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த 298 பேரும் இறந்தனர்.

ஞாயிறு, ஜூலை 06, 2014

4 தமிழ் ஈழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது

நாடளாவிய நிலையில் போலீசார், LTTE எனப்படும் தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கத்தைச்  சேர்ந்த முக்கியத் தலைவர்கள் என நம்பப்படும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சனி, ஜூலை 05, 2014

மலேசியாவில் விடுதலைப்புலி தலைவர்கள் 4 பேர் கைது

இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வந்த விடுதலைப்புலிகளின் 30 ஆண்டு கால போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து இலங்கை அரசு இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.

வெள்ளி, ஜூலை 04, 2014

பொதுச்சேவைத்துறைக்கு SPA இணையத்தளம் வழி மட்டுமே மனு செய்க

பொதுச்சேவைத் துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் SPA எனப்படும் பொதுச் சேவைத்துறையின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வியாழன், ஜூன் 26, 2014

நீலாயில் அதிரடி நடவடிக்கை: 41 சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்கள் கைது

நேற்று பின்னிரவில், மந்தினில் உணவகம் ஒன்றில் உலகக் கிண்ணப் போட்டியின் நைஜீரியா, மற்றும் அர்ஜெண்டினா அணிகள் களமிறங்கிய ஆட்டத்தை 100க்கும் மேற்பட்ட அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

செவ்வாய், ஜூன் 24, 2014

கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி


பாலிங்-கிரிக் நெடுஞ்சாலையின் அருகே இரு கார் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளனர். இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, ஜூன் 13, 2014

உயர்க்கல்வி பிரிவுக்குத் தலைமையேற்கும் முதல் பெண்

கல்வியமைச்சின் உயர்க்கல்வி பிரிவின் தலைமைச் செயலாளராகப் பேராசிரியர் டத்தோ டாக்டர் அஸ்மா இஸ்மாயில் பொறுப்பேற்றுள்ளார்.

செவ்வாய், ஜூன் 10, 2014

ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் அரசியலைப் பரப்பக் கூடாது- கல்வி அமைச்சு

ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்த கருத்துக்களைப் பரப்புவது ஆரோக்கியமான செயல் அல்ல. மாறாக அச்செயலானது ஆசிரியர் தொழில் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும் என கல்வி இயக்குனர் டத்தோ டாக்டர் காயிர் முகமது யூசோப் தெரிவித்தார்.

புதன், ஜூன் 04, 2014

மகளுக்காக பிரச்சாரம் செய்வதா? டியானாவின் தாய்க்கு அம்னோ விளக்கம் கோரும் கடிதம்

தெலுக் இந்தான்  இடைத்தேர்தலில் ஜ.செ.க சார்பாக போட்டியிட்ட தமது மகள் டியா சொஃபியாவுக்காகப் பிரச்சாரம் செய்த கம்போங் தெர்சூசுன் தாவாஸ் தம்பாஹான் அம்னோ கிளை உறுப்பினருமான யாம்மி சாம்மாட்டுக்கு அம்னோ விளக்கம் கோரும் கடிதம் அனுப்பியுள்ளது.

செவ்வாய், ஜூன் 03, 2014

இந்தியத் தூதரகத்தின் மேலும் 3 அயலாக்க விசா மையங்கள்

மலேசியாவுக்கான இந்தியத் தூதரகம், மேலும் மூன்று விசா அயலாக்க (Outsource) மையங்களை அமைத்துள்ளது. ஈப்போ, சிரம்பான் மற்றும் மலாக்கா ஆகிய இடங்களில் செயல்படும் இந்த அயலாக்க விசா மையங்கள்  ஜூன் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.