சனி, ஜூலை 30, 2011

மேற்குக்கரை ஆர்பாட்டத்தில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல்..

 30-07-11, மேற்குக்கரையிலுள்ள நபிஸலிஹ் கிராமத்தில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு எதிர்ப்பு  ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது, இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்தவர்களில் ஒரு வெளிநாட்டு தன்னார்வலர் பெண்ணும், இரண்டு பாலஸ்தீன் பெண்களும் அடங்குவர்,

ஆர்பாட்டம் நடைபெற்ற இடம், மேற்க்குகரயிலுள்ள பிளின் கிராமமாகும், இது ரமல்லா, நபிஸலிஹ் மற்றும் அல் மஃஸரா ஆகிய ஊர்களுக்கு அருகிலுள்ளது.  இவை பெத்லேஹம் நகருக்கு அருகில் உள்ளவையாகும்,

இஸ்ரேலிய படைகள், செய்தியாளர்களையும், மருத்துவ உதவி குழுவினரையும் அடித்து விரட்டினர் என்றும், பொதுமக்களின் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது என்றும், ரப்பர் பூசப்பட்ட எஃகு தோட்டாக்களினால் சுட்டனர் என்றும்  பாலஸ்தீன பாப்புலர் கமிட்டி கூறியது,

ஒவ்வரு வாரமும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்பும் பிளின் மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து வரும் குடியிருப்புவாசிகள், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை பகுதியில் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர், எப்பொழுதுமே இஸ்ரேலிய படைகள் அங்குள்ள ஆக்கிரமிப்பு சுவரை நெருங்க விடுவதில்லை, இம்முறை கண்ணீர் புகைகுண்டு மற்றும் ரப்பர் தோட்டவினால் பொதுமக்களை தாக்கியுள்ளனர்,

இனவெறி சுவர் (Apartheid wall)

இது அப்பகுதியில் வாசித்த பாலஸ்தீனர்களை அவர்களின் சொந்த நிலங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, ஆக்கிரமித்து அமைக்கப்பட்டதாகும், என பாலஸ்தீனர்களும், உலக அமைதி நடவடிக்கை குழுவினரும் கூறுகின்றனர்,

60 % பிளின் பகுதி நிலத்தை அபகரித்த போதும், அதை எதிர்த்து, 6 வருடங்களாக போராடிவரும் உள்ளூர் கிராமவாசிகள், இதுவரை எந்த வன்முறையிலும் ஈடுபட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது,


டெல் அவிவ் , 2000-ல், மேற்க்குகரையில் முள்வேளிகளை கொண்டு இதை அமைக்க ஆரம்பித்தது, 2004-ல், உலக நீதிமன்றம், இது சட்டத்திற்கு புறம்பானது என்றும், இது அகற்றப்படவேண்டியது என்றும், கூறியுள்ளது.

திரிபோலி நகரம் மீது மீண்டும் தாக்குதல்..

30-07-2011 திரிபோலி, நேற்றிரவு 10 மணியளவில் கடாபி வீட்டருகே உள்ள சிட்டி சென்டரில் குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன என்று AFP செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த வியாழன்று லிபிய புரட்சி குழுவின் தலைமை அதிகாரி அப்துல் பாத்தாஹ் யூனுஸ், பெங்காஜி நகரில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார் என லிபிய அரசு அறிவித்துள்ளது.

இவர் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்துள்ளார், பின்னர் அதிலிருந்து பதவி விலகி, புரட்சி குழுவை தலைமையேற்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது,

கடந்த ஏப்ரலில் பொது மக்களை, அரசு ராணுவம் கொல்வதை தடுத்து நிறுத்துவதில் நேட்டோ படை தோல்வி கண்டுவிட்டது என நேட்டோ மீது குற்றம் சுமத்தியிருந்தார்,

பொதுமக்களை காப்பாற்ற தரை படையெடுப்பை தவிர்த்து, தேவைப்பட்டால் மற்ற வழிகளில் தாக்குதல் நடத்த அதிகாரம் வழங்கும் தீர்மானத்தை கடந்த மார்ச் 17 - ம் தேதி ஐ.நா.பாதுகாப்பு சபை எடுத்தது.

அதன்படி மார்ச் 19 முதல் நேட்டோ படை லிபிய ராணுவ கேந்திரங்களின் மீது வான்வெளி தாக்குதல்களின் மூலம் குண்டுபோட ஆரம்பித்தது. அதிலிருந்து நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்,

பட்டினியால் சோமாலியாவில் 13 பேர் மரணம்


சோமாலியாவில் நிலவும் கொடும் பட்டினியை குறித்து அதிர்ச்சிகரமான செய்திகள் வந்துக்கொண்டிருக்கும் வேளையில் 13 குழந்தைகள் பட்டினியால் மரணித்துள்ளனர்.சோமாலியாவில் நிலவும் கடுமையான வறட்சியும்,பட்டினியும் நிலவுவது தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையும்ரெட்க்ராஸ் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிவாரணப் பொருட்களுடன் சென்றனர்.
தலைநகரான மொகாதிஷுவின் வடக்கு மாவட்டத்தில் ஹவதாக் முகாமில் குழந்தைகள் இறந்துள்ளதாகவும்குழந்தைகள் உள்பட ஏராளமானோர் இங்கு தீவிரமாக தளர்ந்துபோய் உள்ளனர் என முன்னாள் அமைச்சர் உஸ்மான் இப்ராஹீம் ப்ரஸ் டி.விக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்து குறைவின் காரணமாக ஏற்படும் சுகவீனம்தீவிர வயிற்றுப்போக்குதட்டம்மை ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மரணித்துள்ளனர்.
கொடும் வறட்சி மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்ட கிராமீய பகுதிகளிலிருந்து ஒருலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உணவையும்தண்ணீரையும் தேடி மொகாதிஷுவிற்கு வந்துள்ளனர். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அகதிகள் முகாமில் ஒன்றாக தங்கியிருப்பதால் கடுமையானநோய்கள் பரவுவதாக ஐ.நா அகதிகள் ஏஜன்சி கூறுகிறது.
சோமாலியாவின் தலைநகருக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும்தினமும் ஆயிரக்கணக்கான நபர்கள் தங்களது உயிரை பாதுகாக்க இங்கு வருவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த வாரம் ஐ.நா சோமாலியாவை பட்டினி பிரதேசமாக அறிவித்தது.
அல்ஷபாப் போராளிகளில் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு ஐ.நா நேற்று முன் தினம் உதவிகளை அளித்தது. சோமாலியாவுக்கு எட்டுகோடி டாலரின் உதவிகளை அளிப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. கடந்த 60 வருடங்களுக்கு இடையே மிகவும் கடுமையான வறட்சியைசோமாலியா எதிர்கொள்கிறது.
தண்ணீரையும்உணவையும் தேடி அயல் நாடுகளான கென்யாவிற்கும்எத்தியோப்பியாவிற்கும் செல்லும் சோமாலியா நாட்டு மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒரு லட்சம் நபர்கள் மட்டுமே தங்க வசதியுள்ள கென்யாவின் தாதாப் அகதிகள் முகாம் லட்சம் மக்களால் திணறுகிறது. வறுமை நிலவும் இன்னொரு நாடான எத்தியோப்பியாவிலிருந்தும் தாதாப் முகாமிற்கு மக்கள் வருகின்றனர். சோமாலியாவில் 22 லட்சம் மக்களை வறுமை கடுமையாக பாதித்துள்ளதாகவும்அதற்கு இரு மடங்கு அதிகமான மக்களை வறுமை ஓரளவுபாதித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்ட பார்டேர் நகரத்தில் நேற்று முன் தினம் லாரிகள் மூலமாக 24ஆயிரம் பேருக்கான ஒரு மாத உணவுப் பொருட்கள் விநியோகம் செய்துள்ளதாக ரெட்க்ராஸ் கூறுகிறது.

தமிழர்களின் நாக்குகளை வெட்டி எறிந்து, பெண்களை கும்பல் கும்பலாக கற்பழித்த இலங்கை ராணுவத்தினர்!


Sri lanka War Crime


கொழும்பு: இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்த போது மனிதாபிமானமற்ற கொடூர செயல்களில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

தமிழ் வாலிபர்களை நிர்வாணமாக்கி கண்களை கட்டி ஈவு இரக்கமின்றி அவர்கள் சுட்டுக்கொன்ற காட்சிகள் இங்கிலாந்து நாட்டின் `சேனல் 4' தொலைக்காட்சி ஒளிபரப்பியது.இதையடுத்து போர்க்குற்றம் புரிந்த அதிபர் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் வலுத்து வருகிறது.

இந் நிலையில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் சிங்கள ராணுவத்தினர் நடத்திய கோர தாண்டவங்களை `சேனல் 4' மேலும் அம்பலப்படுத்தியுள்ளது.

இறுதிக்கட்ட போரின் போது சரண் அடையும் விடுதலைப் லிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அதிபர் ராஜபக்சே உறுதி அளித்தார். அவரது பொய்யான வாக்குறுதியை நம்பி ஏராளமான விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். அவரது வாக்குறுதியை நம்பி சரண் அடைந்த விடுதலைப் புலிகளை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொல்லுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு, ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டதாக சேனல் 4 தெரிவித்துள்ளது.

இதையடுத்து விடுதலைப்பு லிகளை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். இத் தகவலை அப்போது இலங்கை ராணுவத்தின் 58வது படைப்பிரிவின் ராணுவ வீரர் ஒருவரே உறுதிப்படுத்தி உள்ளார்.

அதன்பிறகு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் சவேந்திர சில்வா பதவி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் துணைத் தூதராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

போரின் இறுதி நாட்களில் நடந்த கொடூரங்கள் குறித்து பெர்னாண்டோ என்ற ரா ராணுவ வீரர் `சேனல் 4' தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி, கதி கலங்க வைத்துள்ளது.

தனது பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய சக ராணுவ வீரர்கள், கண்ணில் பட்ட அப்பாவி மக்களை எல்லாம் மிருகத்தனமாக சுட்டுக் கொன்றனர். மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். துடிக்க துடிக்க அவர்களுடைய நாக்குகளை அறுத்து எரிந்தனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகளையும் கூட விடாமல் கொன்று குவித்தனர். அப்படி கொல்லப்பட்டவர்கள் யாரும் விடுதலைப் புலிகள் அல்ல. சாதாரண குடிமக்கள்தான். பெண்களை அடித்து, உதைத்து, துன்புறுத்தி கற்பழித்தனர்.

அந்த கொடூரத்தை தடுக்க முயன்ற அவர்களுடைய பெற்றோர்களை அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். மருத்துவமனையில் தமிழ் இளம்பெண் ஒருவரை எனது சகாக்கள் 6 பேர் சேர்ந்து கற்பழித்த கோரத்தை என் கண்களாலேயே பார்த்தேன்.

ராணுவத்தினரின் செயல்கள் மிருகங்களை விட மோசமாக இருந்தது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறிக் கிடந்ததை பார்த்தேன்.இவ்வாறு தனது பேட்டியின் போது சிங்கள ராணுவ வீரர் பெர்னாண்டோ தெரிவித்து உள்ளார்.

சேனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோத்தபயா

பொறுப்பற்ற வீடியோக்களை வெளியிடும் சேனல் 4 தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபயா ராஜபக்சே கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் கொலைக்களம் வீடியோவை வெளியிட்ட சேனல் 4 கடந்த 27-ம் தேதி இலங்கையில் போர்க்குற்றம் என்ற வீடியோவை வெளியிட்டது. அதில் சரண் அடைந்த விடுதலைப் புலிகளை எல்லாம் சுட்டுத்தள்ளுமாறு ராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டதாகத் தெரிவித்திருந்தது.

இதைப் பார்த்து கடுப்பான கோத்தபயா ராஜபக்சே தான் அவ்வாறு கட்டளையிடவில்லை என்று தெரிவித்துள்ளார். இறுதி கட்டப்போரின் போது என்ன நடந்தது, இனி என்ன நடக்கப் போகிறது என்று ஷவேந்திர சில்வாவே சொல்வார் என்று கோத்தபயா தெரிவித்துள்ளார். 
அவர் மேலும் கூறியதாவது,

போருக்கு முன்பு முல்லைத் தீவில் 3 ல்டசம் பேர் இருந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது. போருக்குப் பிறகு 2 லட்சத்து 94 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தனர். விடுதலைப் புலிகள் பலர் கனடா மற்றும் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டனர்.

விடுதலைப் புலிகளின் கடற்படை தளபதிகளாக இருந்த சூசை மற்றும் தமிழ்செல்வனின் குடும்பத்தார் கடல் வழியாக தப்பிச் செல்கையில் கைது செய்யப்பட்டனர். அவர்களை இலங்கை அரசு இன்றளவும் பாதுகாத்து வருகிறது. பிரபாகரனின் பெற்றோரை இலங்கை அரசு நல்லபடியாக கவனித்துக் கொண்டது.

சரண் அடைந்த 11 ஆயிரம் தற்கொலைப் படையினர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. 

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண் உறுப்பினர் ஒருவரை படையினர் 2 லட்சம் மக்கள் மத்தியில் இருந்து காப்பாற்றியது முந்தைய வீடியோ காட்சிகளில் உள்ளது என்றார்.

செவ்வாய், ஜூலை 26, 2011

மும்பை தொடர் குண்டுவெடிப்பு- புலனாய்வு ஏஜன்சிகள் மத்தியில் கருத்து வேறுபாடு...

JULY 26, மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்திவரும் புலனாய்வு ஏஜன்சிகள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

புலனாய்வு ஏஜன்சிகளிடையே பிளவு தீவிர மடைந்துள்ளதை தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜன்சி குழுவினர் மும்பையிலிருந்து திரும்பிவிட்டனர்.
புலனாய்வு ஏஜன்சிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை எனக் குற்றஞ்சாட்டி என்.ஐ.ஏ குழு திரும்பி விட்டதாக கருதப்படுகிறது. 22 பேரின் மரணத்திற்கு காரணமான தொடர் குண்டுவெடிப்பைக் குறித்து விசாரணையை ஒருங்கிணைக்க மும்பை தாக்குதலின் பின்னணியில் உருவான என்.ஐ.ஏ அதிகாரிகள் மும்பைக்கு வருகைத் தந்தனர்.

ஆனால், மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸும், க்ரைம் ப்ராஞ்சும் தேசிய புலனாய்வு ஏஜன்சியுடன் ஒத்துழைக்க மறுத்துள்ளன. ஏ.டி.எஸ், என்.ஐ.ஏ அதிகாரிகள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டு வழக்கை விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு விசாரணையை நிறைவுச்செய்ய முடியாது என ஏ.டி.எஸ் விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.

மும்பை குண்டுவெடிப்பு விசாரணையில் இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா இயக்கங்கள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்தியா முழுவதும் எழுந்துள்ளது. இதற்க்கு மும்பை மாநில புலனாய்வுத்துறை ஒத்துழைப்பு கொடுக்க மறுத்துள்ளது. இதனால் நேசனல் புலனாய்வுதுறைக்கும் மும்பை புலனாய்வு துறைக்கும் மத்தியில் கருத்துவேறுபாடு வந்துள்ளது.

ஞாயிறு, ஜூலை 24, 2011

நோர்வே தாக்குதல்கள்- 92 பேர் பலி


சம்பவம் நடந்த உடொயா குட்டித் தீவு
சம்பவம் நடந்த உடொயா குட்டித் தீவு
நோர்வேயில் தொழிற்கட்சி முகாமுக்காக இளைஞர்கள் கூடியிருந்த குட்டித் தீவு ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் கண்மூடித்தனமாகச் சுட்டதில் குறைந்தது 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் ஒஸ்லோவின் அருகே உடொயா என்ற இந்த சிறு தீவில் இளைஞர்களுக்கான தொழிற்கட்சியின் கோடை முகாம் நடந்து கொண்டிருந்த வேளையில், பொலிஸ்காரர் போல சீருடை அணிந்திருந்த நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.
ஒஸ்லோவின் மையப் பகுதியில் குறைந்தது 7 பேரை பலிகொண்ட ஒரு குண்டுத் தாக்குதலின் பின்னர் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
இந்த இரு சம்பவங்கள் 32 வயதுடைய அண்டர்ஸ் பெஹ்ரின் ப்ரெய்விக் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டுக்குள் நோர்வே பொலிசார் சோதனையும் நடத்தியுள்ளனர்.

சந்தேக நபர் பின்னணி

இவரைப் பற்றிய தகவல்களில் பெரும்பாலானவை சமூகவலைத்தளங்களான டுவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும்தான் தென்படுகின்றன. அதுவும் இந்தத் தகவல்கள் ஒரு சில நாட்கள் முன்பே சேர்க்கப்பட்டவையாக அமைந்துள்ளன.
பிரெவிக் பற்றிய இணையப் பதிவுகளைப் பார்க்கும்போது அவர் தீவிர வலதுசாரி மற்றும் முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கைகளை உடையவர் என்று குறிப்புணர்த்துவதாக பொலிசார் கூறுகின்றனர்.

ஃபேஸ்புக்கில் அவர் தன்னைப் பற்றி எழுதுகையில் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்றும் மரபு பேணுபவர் என்றும் அவர் வருணித்துள்ளார். பிரெவிக் ஒஸ்லோவில் வளர்ந்தவராகத் தெரிகிறார். பின்னர் இவர் நகரத்திலிருந்து வெளியேறி பிரெவிக் ஜியோபார்ம் என்ற ஒரு விவசாய நிறுவனத்தை ஆரம்பித்திருந்ததாகத் தெரிகிறது. காய்கறிகள் பயிர் செய்வதற்காக தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் அதுவென்று தெரிவிக்கப்படுகிறது. 
 இந்த நிறுவனத்துக்காக வாங்குவதாக காட்டிக்கொண்டு இவர் பெருமளவில் உரங்களை வாங்கிக் குவித்துள்ளார். பின்னர் இவற்றைப் பயன்படுத்தி அவர் குண்டு தயாரித்துள்ளார் என்று நோர்வே ஊடகங்கள் ஊகம் தெரிவிக்கின்றன.

இவர் சில வருடங்கள் முன்புதான் வலது சாரி தீவிரவாதக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டிருந்தாரென்று இவரது நண்பர் ஒருவர் கூறுவதாக வெர்டென்ஸ் கங் என்ற நோர்வே செய்தித்தாள் தெரிவிக்கிறது.
கருத்து பரிமாறுவதற்கான இணையதளங்களில் இவர் வலிமையான தேசியவாதக் கருத்துகளைக் கூறிவந்துள்ளார் என்றும் அப்பத்திரிகை கூறுகிறது.

நடந்த தாக்குதல்கள் 'கொடூர கனவுபோல இருக்கிறது' என நோர்வே பிரதமர் ஜென் ஸ்டொல்டன்பர்க் கூறியுள்ளார். ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பில் பிரதமரின் அலுவலகமும் சேதமடைந்திருந்தது. இவ்வெடிப்பில் கொல்லப்பட்டவர்களில் அரசாங்க அதிகாரிகளும் அடங்குவர். 

bbc