வியாழன், மே 31, 2012
ராணுவ தளபதி வி.கே.சிங் ஓய்வு பெற்றார் !
ராணுவ தளபதியாக இருந்த வி.கே. சிங் இன்று ஒய்வு பெற்றார். இதையொட்டி அவர் டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் வழியனுப்பி வைத்தனர். வி.கே.சிங் 42 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி உயர் பதவிகளை வகித்தார். வயது பிரச்சினையால் சர்ச்சையில் சிக்கிக்
இந்தியா முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்து: புதிய தொலைத் தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் !
இந்தியா முழுவதும் செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து செய்யும் வழிமுறைகளைக் கொண்ட புதிய தொலை தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.இப்புதிய கொள்கைகளின்படி;இந்தியாவின் எந்த மாநிலத்துக்கு சென்றாலும் இனி ரோமிங் கட்டணம் கிடையாது. வேறு மாநிலத்திற்கு சென்றாலும் அதே செல்போன் எண்ணை வைத்து கொள்ள
இந்திய பொருளாதார வளர்ச்சி 5.3% ஆக சரிந்தது.. 9 ஆண்டுகளில் இல்லாத மாபெரும் வீழ்ச்சி !
டெல்லி: நடப்பு நிதியாண்டின் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.3 சதவீதமாக சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 7.8 சதவீதமாக இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது மாபெரும் சரிவாகும்.ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி உள்பட பல்வேறு காரணங்களால் 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி விகிதம் வெகுவாகக்
பெட்ரோல் விலை உயர்வு: தமிழகத்தில் 'பாரத் பந்த்' பிசுபிசுத்தது !
சென்னை: பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து பாஜக அழைப்பு விடுத்த பாரத் பந்த் தமிழகத்தில் படுதோல்வியடைந்தது. பஸ்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. பள்ளி, கல்லூரிகள் திறந்துள்ளன.
அரசு, தனியார் அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படுகின்றன.இன்று பஸ், ரயில்கள் வழக்கம் போல் ஓடும் என்றும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முழு
உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ்-பில்கேட்ஸ் சந்திப்பு !
ஒருநாள் பயணமாக உத்தரப் பிரதேசம் வந்த மைக்ரோசாப்ட் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், முதல்வர் அகிலேஷ் யாதவை புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
தலைநகர் லக்னெüவில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். இந்தத் தகவலை சமாஜவாதி கட்சித் தலைவர் அனுப்ரியா படேல்
உலக செஸ் சாம்பியன்: விஸ்வநாதன் ஆனந்திற்கு குவியும் பாராட்டுகள்
மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேல் வீரரான போரிஸ் கெல்பாண்டை வீழ்த்திய இந்திய செஸ் வீரரும், நடப்பு சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த், ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இச்சாதனை படைத்த விஸ்வநாதன் ஆனந்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம்
பத்திரிகையாளர் சோலை மரணம் !
சென்னை:தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான சோலை மரணமடைந்தார். அவருக்கு வயது 81. திண்டுக்கல் மாவட்டம் அய்யன் பாளையத்தில் பிறந்தவர் சோலை. அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதுவதில் தனக்கென ஒரு இடத்தை பதிவுச் செய்தவர். பிரபல வார இதழான நக்கீரன் உட்பட பல்வேறு இதழ்களில் பரபரப்பு கட்டுரைகள் எழுதியவர்.துவக்கத்தில் கம்யூனிஸ்ட்டாகவும், பின்பு எம்.ஜி.ஆரின் அரசியல் ஆலோசகராகவும் விளங்கியவர். மேலும் அதிமுக பொதுச் செயலாளரும்,
இட ஒதுக்கீடு:தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகும் !
புதுடெல்லி:உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் சிறுபான்மை சமூகத்தினருக்கு 4.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு தடை விதித்த ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடுச் செய்ய உள்ளது.வேலைவாய்ப்புகளிலும், கல்வித்துறையிலும் சிறுபான்மை
சார் பெட்ரோல் இல்ல, லீவு வேணும்.. வீட்டுல இருந்தே வொர்க் பண்ணுங்க..''- ஐடி நிறுவன ஐடியாக்கள் !
சென்னை: சென்னையில் நிலவும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு சாப்ட்வேர் நிறுவனங்களையும் விடவில்லை. சென்னையில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஜெனரேட்டர்களை வைத்துத் தான் சாப்ட்வேர் நிறுவனப் பணிகள் சமாளிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏசி, லிப்ட்களின் இயக்கமும் அடக்கம்.
ஆனால், கடந்த சில நாட்களாக டீசலுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் அட்மின் மேனேஜர்களும்,
ஆனால், கடந்த சில நாட்களாக டீசலுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் அட்மின் மேனேஜர்களும்,
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு - நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து முறையீடு
மத்திய அரசுப் பணிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 4.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசு ஆணையினை ஆந்திர உயர் நீதிமன்றம் 28.05.2012 அன்று ரத்து செய்தது.”இந்த ரத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறை செய்யப்போவதாக” மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். ”சிறப்பு மனுவினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் எனத் தெரிவித்த குர்ஷித், அட்டர்னி
பெட்ரோல்': மத்திய ஆட்சியில் இருந்து விலகுவோம் என்று சொல்லவில்லை: கருணாநிதி பல்டி !
சென்னை: பெட்ரோல் விலை உயர்வை குறைக்காவிட்டால் மத்திய அரசிலிருந்து வெளியேறுவோம் என்று கூறவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து இன்று திமுக சார்பில் மாநிலம் முழுவதும் மத்திய அரசு அலுவலங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கருணாநிதி பேசுகையில், பெட்ரோல் கட்டணம் கிட்டத்தட்ட 7.50 ரூபாய்
நித்தி காரில் செருப்பு வீச்சு... தட்டிக் கேட்ட சீடருக்கு மக்கள் தர்ம அடி !
கஞ்சனூர்: நித்தியானந்தா கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கு வந்தபோது அவரது கார் மீது செருப்புவீசி தாக்கப்பட்டது. இதைத் தட்டிக் கேட்ட அவரது சீடரை மக்கள் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வர சாமி கோவில் எனப்படும் சுக்கிரன் கோவில் மதுரை ஆதீன மடத்திற்குட்பட்டது. இங்கு வந்து கணக்கு கேட்ட நித்தியானந்தாவின் இரு சீடர்கள் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில்
பாக்.கில் 59 ரூபாய், பங்களாதேஷில் 43 ரூபாய், இந்தியாவில் மட்டும் 78 ரூபாயா... ஸ்டாலின் கேள்வி !
சென்னை: பாகிஸ்தானில் 1 லிட்டர் பெட்ரோல் 59 ரூபாய். சீனாவில் 37 ரூபாய், வங்காள தேசத்தில் 43 ரூபாய் 40 பைசா, அமெரிக்காவில் 67 ரூபாய், இந்தியாவில் மட்டும் 1 லிட்டர் பெட்ரோல்விலை 78 ரூபாய் என்பது முறைதானா? மத்திய அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டு பெட்ரோல் விலையை குறைக்க முன்வர வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம்
புதன், மே 30, 2012
எதிர்ப்பையும் மீறி இலங்கை சென்றது பாரதியார் சங்க குழு !
இலங்கை அரசு சார்பாக ஜூன் 1-ம் தேதி கொழும்பில் பாரதியார் விழா நடத்தப்படுகிறது. ’தேமதுரத் தமிழோசை உலகறியச் செய்வோம்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பாரதியார் சங்கக் குழுவினர் இன்று இலங்கை புறப்பட்டு சென்றனர். கொழும்பில் நடைபெறும் விழாவில் பாரதியார் சங்க குழுவினர் பங்கேற்பதற்கு தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். விடுதலைப்
என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் !
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 15 அமைச்சர்களுக்கு ஊழலில் தொடர்பிருப்பதாக ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே குழுவினர் குற்றம் சாட்டியிருந்தனர். அதிலும் நிலக்கரி அமைச்சகம் பிரதமரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது ஊழல் நடந்ததாக, அத்துறையின் செலவு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆடிட்டர் ஆகியோர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் பிரதமர்
ஜூலை 9-ம்தேதி இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை !
கம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக வரும் ஜுலை மாதத்தில் உங்களது இணையதளம் தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று சர்ச் என்ஜின் இணையதளமான கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு வைரசால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களை நாங்கள் சரிசெய்து தருகிறோம் என்று உலகம் முழுவதும், மோசடியாக ஆன்லைன் விளம்பரம் ஒன்றை ஹேக்கர்கள் பரவவிட்டதை
கிங் பிஷேர் வங்கி கணக்குகளை மீண்டும் முடக்கியது வருமான வரி துறை
டெல்லி: வருமான வரித்துறைக்கு பாக்கி வைத்ததால் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் மீண்டும் முடக்கப்பட்டுவிட்டன.கடந்த பல மாதங்களாக கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமானது நிதிச் சிக்கலால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. ஊழியர்களின் சம்பளத்துக்கும் கூட சிக்கலாகிப் போய் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வருமான வரித்துறைக்கு ரூ342 கோடி பாக்கி வைத்திருக்கிறது கிங்பிஷர்
சிரியா நிலவரம் - பஷாரைச் சந்தித்தார் கோபி அன்னான்
ஐநா மற்றும் அரபு லீக் தூதர் கோபி அன்னான் இன்று சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸத்தை சந்தித்து பேசினார். சிரியாவில் நிலவும் கொடும் வன்முறைகள் குறித்து சர்வதேச சமூகம் கவலைக்குள்ளாகி இருப்பதை பஷாருக்கு கோபி அன்னான் தெரிவித்துள்ளதாக அவருடைய செய்தித் தொடர்பாளர் அஹமத் பவ்ஷி குறிப்பிட்டுள்ளார். நேற்று சிரியத் தலைநகர் டமாஸ்கஸ் வந்த கோபி அன்னான், முன்னதாக சிரிய வெளியுறவுத் துறை அமைச்சரையும், ஐநா பார்வையாளர்களையும் சந்தித்து
67,000 கிலோ லிட்டர் டீசலுடன் கப்பல் சென்னை வந்தது !
சென்னை: சென்னையில் ஏற்பட்டுள்ள டீசல் பற்றாக்குறையைப் போக்க கப்பல் மூலம் 67,000 கிலோ லிட்டர் டீசல் வந்துள்ளது. இதையடுத்து இன்று இரவுக்கு மேல் டீசல் தட்டுப்பாடு படிப்படியாக குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.50 என்று பெட்ரோலிய நிறுவனங்கள் உயர்த்தியது முதலே துயரம் தொடங்கி விட்டது. விலை உயர்வுக்கு முதலில் மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர்
செவ்வாய், மே 29, 2012
இத்தாலியில் கடும் நிலநடுக்கம்: 8 பேர் பலி
இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் இன்று வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பயந்து போன மக்கள் வீடுகளை விட்டு தெருக்களை நோக்கி ஓடினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்கனவே சேதமடைந்திருந்த பல கட்டிடங்கள் இன்றைய நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தன.
எடியூரப்பாவுக்கு தொடரும் நெருக்கடி: மேலும் ஒரு வழக்குப் பதிவுச்செய்ய லோக் ஆயுக்தா ஆணை!
பெங்களூர்:நில விடுவிப்பு புகாரைத் தொடர்ந்து கர்நாடகா மாநில பா.ஜ.கவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது 2 மகன்கள் மீது வழக்கு தொடர லோக் ஆயுக்தா நீதிமன்றம் நேற்று(திங்கள்கிழமை) உத்தரவிட்டது.
வழக்குரைஞர் வினோத் என்பவர் லோக் ஆயுக்த நீதிமன்றத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் பத்ராவதியில் 49 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி இருந்தது.
பா.ஜ.கவின் என்.டி.ஏ கூட்டணி விரைவில் உடைந்து சிதறும் – லாலு பிரசாத் யாதவ்!
புதுடெல்லி:பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்.டி.ஏ) விரைவில் உடைந்து சிதறும் என ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த லாலு கூறியது: ‘குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பாரதிய ஜனதா அறிவித்தவுடன் அந்தக் கூட்டணியிலிருந்து பல தோழமைக் கட்சிகள் வெளியேறும்; அந்தக் கட்சியிலேயே மோடியின் தலைமையை விரும்பாதவர்கள் இருப்பதால் அந்தக் கட்சியே பிளவுபடும்.
மியான்மர் நாட்டின் வளர்ச்சிக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கும் இந்தியா !
மியான்மர் நாட்டுக்கு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக 500 மில்லியன் டாலர்(ரூ.2,800 கோடி) கடன் வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று கையெழுத்தானது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் பயணமாக நேற்று முன் தினம் மியான்மருக்கு வந்தார். நேய்பிடாவில் அவர் மியாமன் அதிபர் தேயின் சேன்னை நேற்று
விமானிகளின் வேலை நிறுத்தத்தால் ஏர் இந்தியாவின் நஷ்டம் ரூபாய் 325 கோடி தான் !
கடந்த 21 நாட்களாக நடந்து வரும் ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்தத்தால் இதுவரை சுமார் 325 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர் இந்தியாவின் சர்வதேச விமான சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டு, சர்வதேச வழி தடங்கள் மேலும் குறைக்கப்பட்டு வருகின்றன.
நேற்று கூடிய ஏர் இந்தியாவின் மேலாண்மை குழு, விமானிகளின் வேலை நிறுத்தம் குறித்து விவாதித்ததாகவும்
சென்னைக்கு 67,000 கிலோ லிட்டர் டீசல் கப்பலில் வருகிறதாம் !
சென்னை: சென்னையில் மிகப் பெரிய அளவில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனால் டூவீலர்கள், ஆட்டோ, கார்கள், வேன்கள் என சகல தரப்பினரும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். சென்னையில் கிட்டத்தட்ட 80 சதவீத பங்குகள் மூ்டப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சொல்லணா துயரத்தை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் கப்பல் மூலம் 67,000 கிலோ லிட்டர் டீசல் வருவதாக
எகிப்து தேர்தல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: முர்ஸி- 58 லட்சம் வாக்குகள், ஷஃபீக்- 55 லட்சம் வாக்குகள் !
கெய்ரோ:புரட்சிக்கு பிந்தைய எகிப்தில் நடந்த முதல் அதிபர் தேர்தலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டு தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான எஃப்.ஜே.பியின் வேட்பாளர் டாக்டர்.முஹம்மது முர்ஸி முதலிடத்தையும், முபாரக் ஆட்சியின் இறுதிக் காலக்கட்டத்தில் பிரதமர் பதவி வகித்த அஹ்மத் ஷஃபீக் 2-வது இடத்தையும்
திங்கள், மே 28, 2012
நியூட்டன் போட்ட கணக்குக்கு தீர்வு கண்டு சாதனை படைத்த இந்திய மாணவன் !
லண்டன்: கடந்த 350 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த ஒரு கணிதப் புதிருக்கு விடை கண்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார் 16 வயதேயான இந்திய மாணவன். இந்தக் கணிதப் புதிரைப் போடட்வர் மறைந்த சர் ஐசக் நியூட்டன் ஆவர். கடந்த 350 ஆண்டுகளாக உலக கணிதவியலாளர்களை குழப்பி வந்த புதிராகும் இது. கணித மேதைகள் பலரும் கூடஇந்தப் புதிருக்கு
17 பெண்களுடன் உறவுகொள்ள ரூ.130 கோடி செலவுசெய்த இத்தாலியின் முன்னாள் பிரதமர் !
இளம் பெண்களுடனான கேளிக்கை விருந்துக்கு இத்தாலிய முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி, 130 கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளார். இத்தாலிய முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர். அவர், செக்ஸ் தொழிலாளர்கள் பலருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு, அவர்களுக்காகப் பல கோடி ரூபாய் செலவிட்டதாகப் புகார் கூறப்பட்டது. அதுமட்டுமல்லாது, 17 வயது
அரசிடம் ரூ.13 லட்சம் கோடி கேட்கிறது திவாலான ஸ்பெயின் வங்கி !
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் 4-வது மிகப்பெரிய வங்கியான பேங்கியா திவாலாகிவிட்டது.இந்நிலையில் அரசிடம் இருந்து சுமார் ரூ.13 லட்சத்து 30 ஆயிரம் கோடி (19 மில்லியன் யூரோ) நிதியுதவியைக் கேட்டுள்ளது அந்த வங்கி. முன்னதாக வங்கி கடனில் மூழ்கி வருவதை அறிந்த ஸ்பெயின் அரசு இரு வாரங்களுக்கு முன்பு சுமார் ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் கோடி நிதியுதவி அளித்து, வங்கியை பகுதியாக தேசியமயமாக்கப்பட்ட
அர்ஜெண்டினாவில் டயனோசரஸ் உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு !
உலகில் அழிந்து போன ராட்சத உருவம் கொண்ட டயனோசரஸ்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள அர்ஜெண்டினாவில் டயனோசரஸின் பல உடல் பாகங்கள் புதை படிவங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை சுபுட் நகரில் எடிஜியோ பெருஜிலோவில் உள்ள புதை பொருள் அருங்காட்சியகத்தை சேர்ந்த டைஜியோ பால் தலைமையிலான 25
என் மகன் கைதுக்கு சோனியாதான் காரணம்.. ஜெகன் தாயார் ஆவேசம் !
ஹைதராபாத்: என் மகன் அப்பாவி, அவனைக் கைது செய்ததன் பின்னணியில் சோனியா காந்திதான் உள்ளார் என்று சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகியுள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் விஜயலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெகனை மூன்று நாட்களாக விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரைக் கைது செய்தனர். இதனால் ஆந்திராவின் பல மாவட்டங்களில்
ஆன்ட்ராய்டு ஃபோன்கள் திருட்டு போனால் கண்டுபிடிக்க....
AVG ஆண்டி வைரல் ஆப்ஸை ஆண்ட்ராய்டில் நிறுவினால் இலவசமாக போனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க உதவுவதோடு, உரிமையாளர் நினைத்தால் சைரன் ஒலி எழுப்பச்செய்து திருடியவனை மாட்டச் செய்யலாம். மேலும், அதிலுள்ள டேட்டாக்களையும் அழிக்க முடியும் என்பதோடு இந்த போன் திருடப்படது என்று புதிய சிம்மைப் போட்டபிறகு அதிலுள்ள காண்டாக்ட்களுக்கு திருடன் பெயரிலேயே அவன் அறியாமல் குறுஞ்செய்தியும் அனுப்பும். எல்லாமே
இந்தியாவில் இணையதளங்களுக்கு ஹாக்கிங் அச்சுறுத்தல் – சி.இ.ஆர்.டி-இன் !
புதுடெல்லி:மிகச்சிறந்த ரீதியில் சேவையாற்றி வரும் அரசு, தனியார் இணையதளங்களுக்கு ஹாக்கிங் அச்சுறுத்தல் நிலவுவதாக இந்தியாவின் சைபர் ஏஜன்சியான இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்(CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது. டிஸ்ட்ரிப்யூட்டட் டினைல் ஆஃப் சர்வீஸ்(Distributed Denial of Service (DDoS)) மூலமாக ஹாக்கர்கள் பிறருடைய கம்ப்யூட்டர்களில் நுழைந்து ஹாக்கிங்
கொலைவெறி மணிக்கு கொலைக்கார மோடி கண்டனம்???!!!
புதுடெல்லி:கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியை துவக்கி செயல்பட்டு வந்த டி.பி.சந்திரசேகரன் என்பவர் மார்க்சிஸ்ட் தீவிரவாதிகளால் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டார். இச்சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கேரள மாநிலம்
மன்மோகன் நேர்மையானவர்: ஹஸாரே பல்டி !
சோலாப்பூர்:பிரதமர் மன்மோகன்சிங் ஒரு நேர்மையான மனுஷர் என அன்னா ஹஸாரே கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை ஹஸாரே குழுவினர் பிரதமர் உள்ளிட்ட 15 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியிருந்த சூழலில் ஹஸாரே இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. பந்தர்பூரில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் அன்னா ஹஸாரே
இலங்கைக்கு விசிட் அடித்த தேமுதிக எம்.எல்ஏ. அருண்பாண்டியன் - அதிர்ச்சியில் உளவுத்துறை !
யாழ்ப்பாணம்: தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)