சென்னையில் வசித்து வந்த சோலைக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பிறகு அவர் தனது இல்லத்தில் காலமானார்.
சோலையின் உடல் அவரது இல்லத்தில்(எண் 11, தொல்காப்பியர் தெரு, சீனிவாச நகர், புதுப்பெருங்களத்தூர், சென்னை-63) இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டையில் உள்ள மின்சார மயானத்தில் அவரது உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.
சோலை மறைவுக்கு தமிழகத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கையாளர் சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக