திங்கள், ஜூன் 30, 2014

டெல்லியில் தெருநாய் கடித்து 2 மாத குழந்தை பலி: ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் பாதிப்பு

டெல்லியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இங்கு கடந்த வியாழக்கிழமை தெரு நாய் கடித்துக் குதறியதில் 2 மாத கைக்குழந்தை உயிரிழந்தது.

இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி ரமலான் நோன்பு வாழ்த்து

ரமலான் நோன்பை கடைபிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரயில் கட்டணத்தையும், சர்க்கரை விலையையும் உயர்த்துவதற்குத்தான் மோடி கடுமையாக உழைத்துள்ளார்

ஆட்சிப் பொறுப்பேற்று 30 நாள்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது வலைதளத்தில் எழுதியுள்ள அறிக்கை குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து வெளியிட்டுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து: கோஸ்டாரிகா வெற்றி

உலக கோப்பை கால்பந்து தொடரின் ‘நாக்–அவுட்’ சுற்றில் கிரீஸ் அணியை எதிர்கொண்ட கோஸ்டரிகா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

சனி, ஜூன் 28, 2014

6 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சியின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

எஸ்.டி.பி.ஐ கட்சியின் 6 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ராயபுரத்தில் அக்கட்சியின் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முத்தலிக் மீது வழக்குப் பதிவுச் செய்ய காங்கிரஸ் மனு!

"வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய ஸ்ரீராம் சேனைத் தலைவர் பிரமோத் முத்தாலிக் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று வலியுறுத்தி பனாஜி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கோவா காங்கிரஸ் கமிட்டி வியாழக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளது.

2-வது சுற்றுக்குள் நுழைந்து வரலாறு படைத்தது அல்ஜீரியா

20-வது உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு குரிடிபா மைதானத்தில் நடந்த கடைசி லீக்கில் அல்ஜீரியாவும், ரஷியாவும் (எச் பிரிவு) மோதின.

ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து 14 பேர் பலி

ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்ததில் 14 பேர் பலியாகியுள்ளனர். பலர் உள்ளேயே சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மாசாயில் நகைக்கடையில் கொள்ளை: பாராங்கத்தியுடன் நுழைந்த கொள்ளயர்கள்

மாசாயில் 4 பேர் அடங்கிய கும்பல் ஒன்று  பாராங்கத்தி, கோடரியுடன் ஒரு நகைக்கடையில் கொள்ளையிட்டனர்.

வியாழன், ஜூன் 26, 2014

நீலாயில் அதிரடி நடவடிக்கை: 41 சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்கள் கைது

நேற்று பின்னிரவில், மந்தினில் உணவகம் ஒன்றில் உலகக் கிண்ணப் போட்டியின் நைஜீரியா, மற்றும் அர்ஜெண்டினா அணிகள் களமிறங்கிய ஆட்டத்தை 100க்கும் மேற்பட்ட அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

5 டெஸ்ட், 4 ஒருநாள், ஒரு 20 ஓவர் கொண்ட நீண்ட தொடர் புதிய சவாலாக இருக்கும்: டோனி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு நீண்ட நாள் பயணமாக சென்றுள்ளது. 5 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடும் இந்தியாவிற்கு இது புதிய சாவாலாக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.

ஷாருக்கானுக்கு பிரான்ஸ் அளிக்கும் உயரிய விருது

ஹிந்தித் திரையுலகின் பிரபல நட்சத்திர நடிகரான ஷாருக்கானுக்கு பிரான்ஸ் தேசத்தின் உயரிய விருது அளிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

துவாரகா பீட சங்கராச்சாரியார் மீது மேலும் ஒரு புகார்

ஷீரடி சாய்பாபாவுக்கு எதிரான கருத்துக்கள் தெரிவித்த துவாரகா பீட சங்கராச்சாரியார் மீது மேலும் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

செவ்வாய், ஜூன் 24, 2014

விஷ்ணு அவதார அட்டைப்பட விவகாரம்: டோனிக்கு கைது வாரண்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியை இந்துக் கடவுள் விஷ்ணுவின் அவதாரமாக சித்தரித்து, அவரது கையில் ஷூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்திருப்பது போல் பிசினஸ் டுடே கடந்த ஆண்டு ஏப்ரல் அட்டைப்படம் வெளியிட்டது. இந்த அட்டைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டது

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாலர் அப்துல்ஹமீது இன்று ( 24.06.2014) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி


பாலிங்-கிரிக் நெடுஞ்சாலையின் அருகே இரு கார் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளனர். இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சனி, ஜூன் 21, 2014

தேவாலயம் மீது தாக்குதல்: ஞானதேசிகன் கண்டனம்



தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொல்லப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே இதற்கு முன்னர் இப்படிப்பட்ட கொலை சம்பவம் தொடர்ந்து நடை பெற்றுள்ளன.

சமூக ஊடகங்களில் இந்தியை திணிக்கும் மோடி அரசு: கருணாநிதி கண்டனம்!

மத்திய உள்துறை அமைச்சகம், அரசும் அரசு அதிகாரிகளும் சமூக வலைத்தளங்களில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று சமீபத்தில் ஆணை பிறப்பித்துள்ளதாக வந்த செய்தியை கண்டித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

வியாழன், ஜூன் 19, 2014

பொதுபல சேனா பொதுச் செயலரின் பேச்சே வன்முறைக்கு காரணம்: இலங்கை அமைச்சர் ஃபவுசி!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலரின் மத உணர்வுகளைத் தூண்டும் பேச்சே அளுத்கமப் பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு காரணம் என்றும் அமைச்சர் ஃபவுசி தெரிவித்தார்.

ராஜினாமா செய்ய மாட்டேன்: கற்பழிப்பு புகாரில் சிக்கிய மத்திய மந்திரி பிடிவாதம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையில் ரசாயனம் மற்றும் உரத்துறை இணை மந்திரியாக பதவி வகிப்பவர், நிஹால்சந்த் மேக்வால். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் மீது கடந்த 2011-ம் ஆண்டு 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார்.

உலகக் கிண்ணம்: ஸ்பெய்ன் கனவு கலைந்தது

பிரேசிலில் நடந்து வரும் 2014-உலக கோப்பை கால்பந்து போட்டியின் 'பி' பிரிவு ஆட்டத்தில் இன்று ஸ்பெயினை எதிர்கொண்ட சிலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

புதன், ஜூன் 18, 2014

கோயிலுக்குள் பெண்ணுக்கு நிர்வாண பூஜை: பரிகாரம் என்ற பெயரில் அத்துமீறல்

பரிகார பூஜை என்று கூறி இளம்பெண்ணை  நிர்வாணப்படுத்தி சில்மிஷம் செய்த, தேவிபட்டினத்தை சேர்ந்த  அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட் டம், தேவிப்பட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர்  கணேசமூர்த்தி (35).

செவ்வாய், ஜூன் 17, 2014

ரூ.500க்கு பெங்களூரு-கொச்சி இடையே விமான சேவை: ஏர்ஆசியா அறிமுகம்

பெங்களூரு-சென்னை, பெங்களூரு-கோவா ஆகிய நகரங்களுக்கிடையே குறைந்த கட்டண விமான சேவையை அறிமுகம் செய்துள்ள 'ஏர்ஆசியா' நிறுவனம், தற்போது 500 ரூபாய் கட்டணத்தில் பெங்களூரு-கொச்சி நகரங்களுக்கிடையே இடையே மற்றொரு வழித்தடத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

கோமாவிலிருந்து மீண்டார் மைக்கல் ஷூமாக்கர்

F1 கார்பந்தய சாதனையாளர் மைக்கல் ஷூமாக்கர் கோமாவிலிருந்து மீண்டு விட்டதாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

திங்கள், ஜூன் 16, 2014

இஷ்ரத் ஜஹான் வழக்கு: டயரியை ஒப்படைக்கமாட்டோம் - சி.பி.ஐ!

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் கேஸ் டயரியை பரிசோதிக்கவேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை சி.பி.ஐ நிராகரித்துவிட்டது.

வெற்றி பெற இன்னும் முன்னேற்றம் தேவை: மெஸ்சி

உலகக்கோப்பை கால்பந்து பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு 'எப்' பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினாவும் முதல் முறையாக உலகக்கோப்பை போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ள போஸ்னியாவும் மோதின.

நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது: விலைவாசி மேலும் உயர வாய்ப்பு

கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கம் 5.20 சதவிகிமாக இருந்த நிலையில், அது மே மாதத்தில் 6.01 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

ம.பி.யில் பயங்கரம்: பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கணவர் உள்பட 10 பேர் கைது

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் உள்பட 10 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார்.

சனி, ஜூன் 14, 2014

வண்டலூர் அப்துர் ரஹ்மான் பல்கலையில் ‘இளம் மேதை’

மிகக்குறைந்த வயதில் எம்.சி.ஏ. படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர், பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பிஹெச்.டி. படிப்பில் சேர்ந்துள்ளார்.

இராக்கில் (ஐஎஸ்ஐஎல்) படை முன்னேறுகிறது: அமெரிக்க ஆதரவு அரசு முடங்குகிறது

இராக் நாட்டில் சன்னி முஸ்லிம் களின் படை முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதால், ஷியா முஸ்லிம்களால் நடத்தப்படும் பிரதமர் நூரி அல் மாலிக்கி தலைமையிலான அரசு முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

கோடம்பாக்கம் மேம்பாலம் ஜூலை 15-ல் திறப்பு

கோடம்பாக்கம் மேம்பாலத்தின் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து, ஜூலை 15-ம் தேதி மீண்டும் திறக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ணம்:ஸ்பெய்ன் அதிர்ச்சித் தோல்வி


பிரசிலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் பி பிரிவின் இரண்டு போட்டிகள் இன்று அதிகாலை நடைபெற்றன. அதிகாலை 3 மணிக்குத் தொடங்கிய முதல் ஆட்டத்தில் ஸ்பெய்ன் மற்றும் நெதர்லாந்து களமிறங்கியது.இப்போட்டியில் ஸ்பெய்ன் நெதர்லாந்திடம் 1-5 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்றது.

வெள்ளி, ஜூன் 13, 2014

வசுந்தரா ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: பைலட்

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே அரசு பதவியேற்ற பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் குற்றம் சாட்டியுள்ளார். 

பலாத்காரத்தை தடுக்க ஒவ்வொரு வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போட முடியுமா?

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரத்தை தடுக்க ஒவ்வொரு வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போட முடியாமா என்று பேசி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் மகாராஷ்டி மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல்.

காதலர்களுக்காக மீண்டும் பூட்டு பாலம் திறப்பு

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் தலைநகரில் செய்னே மற்றும் லோரே ஆறுகளின் நடுவில் மரப்பாலம் ஒன்று உள்ளது. இந்த மரப்பாலத்துக்கு ‘பாண்ட் டெஸ் ஆர்ட்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

உயர்க்கல்வி பிரிவுக்குத் தலைமையேற்கும் முதல் பெண்

கல்வியமைச்சின் உயர்க்கல்வி பிரிவின் தலைமைச் செயலாளராகப் பேராசிரியர் டத்தோ டாக்டர் அஸ்மா இஸ்மாயில் பொறுப்பேற்றுள்ளார்.

புதன், ஜூன் 11, 2014

தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரம் அடைந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இது வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின், நிலப்பரப்பின் மேல் அடுக்கில், தென்மேற்கு பருவக்காற்று வடகிழக்கு நோக்கி வேகமாகவும், கனமாகவும் வீசுவதால், மேகங்கள் கலைவதுடன், வங்க கடல் பகுதியில் உள்ள ஈரக்காற்று நிலப்பரப்பை நோக்கி வீசுவதில்லை.

நிலப்பரப்பின், மேல் அடுக்கில் வீசும் காற்றின் வேகமும், கடினத்தன்மையும் குறையும் போது, தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் மேற்கு பருவ மழையின் சாரல் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கன மழையோ பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிரீமியாவிற்கு குறைந்த செலவில் விமான சேவையை வழங்குகிறது ரஷ்யா

உக்ரைன் நாட்டின் அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச் ரஷ்யாவுடன் பொருளாதார உறவை ஏற்படுத்திக்கொண்டதால் அந்நாட்டில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டது.

வெங்காய விலை உயர்வு எதிரொலி: ஏற்றுமதிக்கு தடை விதிக்க அரசு பரிசீலனை

பருவ மழை குறைவாக பெய்யும் என்று கூறப்பட்டு வரும் நிலையை கருத்தில் கொண்டும், உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் முடிவு செய்துள்ள மத்திய அரசு தற்போது அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக அதன் ஏற்றுமதியை ரத்து செய்யவும் பரிசீலனை செய்யும் என தெரிகிறது.

செவ்வாய், ஜூன் 10, 2014

பார்முலா-1 கார் பந்தயம்: 7-வது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் வெற்றி

இந்த ஆண்டுக்கான பார்முலா-1 கார் பந்தயம் 19 சுற்றுகளை கொண்டதாகும். இதன் 7-வது சுற்றான கனடா கிராண்ட்பிரீ பந்தயம் மாண்ட்ரியலில் நடந்தது. 305 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் 22 வீரர்கள் பங்கேற்று மின்னல் வேகத்தில் காரை செலுத்தினார்கள். 

ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் அரசியலைப் பரப்பக் கூடாது- கல்வி அமைச்சு

ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்த கருத்துக்களைப் பரப்புவது ஆரோக்கியமான செயல் அல்ல. மாறாக அச்செயலானது ஆசிரியர் தொழில் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும் என கல்வி இயக்குனர் டத்தோ டாக்டர் காயிர் முகமது யூசோப் தெரிவித்தார்.

சிம்புவிடம் மன்னிப்புக் கேட்டார் சௌந்தர்யா ரஜினிகாந்த்

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்சிகளில் ஒன்று தான் “காப்பி விட் டிடி”. தொகுப்பாளினி டிடி இந்நிகழ்ச்சியினைத் தனக்கே உரிய சாயலில் மிகவும் அர்புதமாக நடத்தி வருகிறார்.ஒவ்வொறு வாரமும் பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்வர்.

திங்கள், ஜூன் 09, 2014

எம்பிஏ மாணவர் போலி என்கவுண்ட்டர்: 17 போலீசாருக்கு ஆயுள் தண்டனை

உத்தராகண்ட் மாநிலம், காசியாபாத்தை சேர்ந்த ரன்பீர் சிங் என்ற எம்.பி.ஏ மாணவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தனது உடல் முழுவதும் 29 துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் டேராடூனில் உள்ள மோகினி சாலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். அவர் வழிப்பறியில் ஈடுபடுபவர் என்று போலீசார் குற்றம் சாட்டினர்.

அமலாபால்- விஜய் நிச்சயதார்த்தம் கொச்சியில் உள்ளசெயிண்ட் ஜூட்தேவாலயத்தில் நடந்தேறியது


எதிர்வரும் ஜூன் 12ஆம் தேதி இயக்குனர் விஜய்கும் நடிகை அமலாபாலுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று இவர்களது நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற்றது. பல பிரபலங்கள் இவர்களது நிச்சயதார்த்தத்தில் கலந்துக் கொண்டு இந்த ஜோடிகளை வாழ்த்தினர்.

பூனையை உயிரோடு தின்ற பணிப்பெண்:முதலாளி அதிர்ச்சி

சிபுவில், மனநிலை பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் பணிப்பெண் ஒருவர் முதலாளி வீட்டுச் செல்லப் பிராணியான பூனையை உயிரோடு கடித்துத் தின்ற சம்பவம் அக்குடும்பத்திலுள்ளவர்களை உறைய வைத்துள்ளது.

நடுத்தர வர்க்கத்தினரும் வைர நகை வாங்கலாம்

ஒரு காலத்தில் கோடீஸ்வரர்களின் ஆபரணமாகக் கருதப்பட்ட வைர நகைகளை இன்று நடுத்தர பிரிவு மக்களும் வாங்கிப் பயன்படுத்தலாம். ரூ. 10 ஆயிரத்துக்குக் கூட வைர நகைகள் கிடைப்பதாக கீர்த்திலால் காளிதாஸ் நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்வராஜ் தெரிவித்தார்.

பிரெஞ்ச் ஓபன்: 2ஆம் முறையாக சாம்பியன் ஆனார் ஷரபோவா

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார் ரஷ்ய் வீராங்கனை மரியா ஷரபோவா.

முஸ்லிம் வேட்டை: அரசின் மவுனம் கெட்ட அறிகுறி - மஜ்லிஸே முஷாவரா!

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து அரசும், பொது சமூகமும் கடைப்பிடிக்கும் மவுனம் கெட்ட செய்திக்கான அறிகுறி என்று ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவரா தலைவர் டாக்டர் ஸஃபருல் இஸ்லாம் கான் தெரிவித்தார்.

சனி, ஜூன் 07, 2014

ருபாப் என்ற பெண்ணை திருமணம் செய்யும் சோயிப் அக்தர்

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். அதிவேகமாக பந்து வீசும் இவர் இவர் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்பட்டார். இவரது திருமணம் ஜூன் மாதம் நடக்க இருக்கிறது. 

தேனாம்பேட்டை பள்ளிவாசலில் சினிமா பிரபலங்கள்

சமீப காலமாக சினிமா பிரபலங்கள் இஸ்லாத்திற்கு வருவது அதிகரித்துள்ளது. வெறுமென பெயருக்கு இஸ்லாத்திற்கு மாறாமல் அதில் ஈடுபாடுனும் இருக்கின்றார்கள்.
சமீபத்தில் இஸ்லாத்தை தழுவிய பிரபல சினிமா இசை இயக்குனர் யுவனும் , நடிகர் ஜெய்யும்  சென்னை தேனாம்பேட்டை பள்ளிவாசலில் மக்களோடு மக்களாக சேர்ந்து ஜும்ஆ தொழுகையில் இன்று (6-6-2014) கலந்து கொண்டுள்ளார்கள்.
இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜும்ஆ தொழுது விட்டு இருவரும் வெளியே வரும் காட்சி.