புதன், ஜூன் 04, 2014

மகளுக்காக பிரச்சாரம் செய்வதா? டியானாவின் தாய்க்கு அம்னோ விளக்கம் கோரும் கடிதம்

தெலுக் இந்தான்  இடைத்தேர்தலில் ஜ.செ.க சார்பாக போட்டியிட்ட தமது மகள் டியா சொஃபியாவுக்காகப் பிரச்சாரம் செய்த கம்போங் தெர்சூசுன் தாவாஸ் தம்பாஹான் அம்னோ கிளை உறுப்பினருமான யாம்மி சாம்மாட்டுக்கு அம்னோ விளக்கம் கோரும் கடிதம் அனுப்பியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது யாம்மி சாமாட் தமது மகளுடன் காணப்பட்டதாக அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் தெரிவித்தார்.
அம்னோ உறுப்பினராக இருந்துகொண்டு எதிர்க்கட்சியான ஜ.செ.க-வுக்கு ஆதரவு செலுத்தியதன் காரணத்தை விளக்குவதற்கு யாம்மி சாமாட்டுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ தெங்கு அட்னான் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று, அம்னோவில் தனது பதவி குறித்து கட்சி நிர்வாகம் தாம் முடிவு செய்ய வேண்டும் என யாம்மி சாமாட் கூறியிருந்தார். “அம்னோ உயர்மட்டக் குழு என்னை நீக்கினால், என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியாது” என மலேசியா கினி செய்தி அகப்பக்கத்திற்கு வழங்கிய பேட்டியின் போது யாம்மி சாமாட் இவ்வாறு கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக