திங்கள், ஜூன் 30, 2014

உலகக் கோப்பை கால்பந்து: கோஸ்டாரிகா வெற்றி

உலக கோப்பை கால்பந்து தொடரின் ‘நாக்–அவுட்’ சுற்றில் கிரீஸ் அணியை எதிர்கொண்ட கோஸ்டரிகா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முடிவு நேரமான 90-வது நிமிட நிலவரப்படி, இரு அனிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் இருந்தன. பின்னர் அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் தங்கள் நாட்டின் சார்பில் இரண்டாவது கோலினை பதிவு செய்ய இரு அணிகளுமே அசுர முயற்சி மேற்கொண்டதால் பார்வையாளர்களிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது.

கோல் வலையை நோக்கி திரும்பிய பந்தை மேற்கொண்டு முன்னேற முடியாமல் தடுத்து நிறுத்துவதில் இரு அணிகளுமே மும்முரம் காட்டியதால் இரண்டாவது கோலினை எய்த முடியாமல் கூடுதல் நேரமும் முடிவடைந்த நிலையில் ‘பெனால்டி ஷூட்’ மூலம் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் அளிக்கப்பட்டன.

பெனால்டி ஷூட்டில் இரு அணிகளும் 3-3 என்ற சமநிலை வகித்த போது கிரீஸ் வீரர் பனிஸ் கெகாஸ் அடித்த கோலினை எதிர் அணி கோல் கீப்பர் தடுத்து வெளியே விரட்டினார். இதனயடுத்து, கோஸ்டாரிகாவின் மைக்கேல் உமனா உதைத்த ஐந்தாவது பந்து படுலாவகமாக வலைக்குள் பாய, பெனால்டி ஷூட் முறையில் 5-3 என கிரீஸை வீழ்த்திய கோஸ்டாரிகா வெற்றி பெற்றது.

இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் முதன்முறையாக காலிறுதிக்குள் நுழையும் கோஸ்டாரிகா நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக