திங்கள், ஜூன் 30, 2014

டெல்லியில் தெருநாய் கடித்து 2 மாத குழந்தை பலி: ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் பாதிப்பு

டெல்லியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இங்கு கடந்த வியாழக்கிழமை தெரு நாய் கடித்துக் குதறியதில் 2 மாத கைக்குழந்தை உயிரிழந்தது.

மத்திய டெல்லி, நபி கரீம் பகுதி யின் ஏ.பி. பிளாக்கில் வசிப்பவர் ரேணு. இவர் வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு தனது 2 மாத கைக்குழந்தையை முதல் மாடி யில் உள்ள தனது வீட்டில் படுக்க வைத்துவிட்டு, எதிரில் உள்ள கடையில் காய்கறி வாங்கச் சென்றி ருந்தார். அப்போது திறந்திருந்த ரேணுவின் வீட்டில் தெருநாய் ஒன்று புகுந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கொடூரமாகக் கடித்துக் குதறி விட்டது. இதனால், அதே இடத்தில் அந்தக் குழந்தை உயிரிழந்தது.

இது குறித்து குழந்தையின் தாய் ரேணு கூறுகையில், “கடைக்கு போகும்போது, பக்கத்து வீட் டின் 5 வயது சிறுமி சீத்துவிடம் எனது குழந்தையை கவனித்துக் கொள்ளும்படி கூறினேன். ஆனால் அவள் செல்வதற்குள் நாய் எனது குழந்தையை கடித்துக் குதறி விட்டது” என்று கண்ணீர் விட்டார்.
இதில் வழியில் கண்ட சீத்துவை யும் அந்த நாய் கடித்ததுடன், கடைக்குச் சென்று திரும்பி வந்த ரேணுவையும் கடிக்க முயற்சித்தது. இதனால் கடும்கோபம் கொண்ட தெருவாசிகள் அந்த நாயை பிடித்து அடித்துக் கொன்றனர். இந்த நாய் அந்தப் பகுதியில் இதுவரை 6-க்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியின் தெருக்களில் சுமார் ஐந்தரை லட்சம் நாய்கள் திரிவ தாக மாநகராட்சி புள்ளி விவ ரம் கூறுகிறது. டெல்லி மருத்துவ மனைகளில் ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் நாய்கடிக்கு சிகிச் சைக்கு வருகின்றனர். சிகிச்சைக்கு வராதவர்களையும் சேர்த்து, நாளொன்றுக்கு சுமார் 1,500 பேர் நாய்கடிக்கு ஆளாவதாக கூறப்படு கிறது. டெல்லியில் 2012-ல் நாய் கடிக்கு 13 பேரும் 2013-ல் 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.

போதிய பலன் இல்லை
தெருநாய்கள் மீது அக்கறை கொண்ட சிலர் தொடுத்த வழக்கின் மீது உச்ச நீதிமன்றம் சில உத்தரவு களை பிறப்பித்துள்ளது. இத னால் தெருநாய்களை அவற் றின் வசிப்பிடத்தில் இருந்து அகற்ற முடியவில்லை. மாநகராட்சி சார்பில் தெருநாய் களுக்கு கருத்தடை செய்வது தொடர்கிறது. என்றாலும் நாய்கள் இடும் குட்டிகளின் எண்ணிக்கை காரணமாக, இதற்கு போதிய பலன் இல்லை என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக