திங்கள், ஜூன் 16, 2014

வெற்றி பெற இன்னும் முன்னேற்றம் தேவை: மெஸ்சி

உலகக்கோப்பை கால்பந்து பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு 'எப்' பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினாவும் முதல் முறையாக உலகக்கோப்பை போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ள போஸ்னியாவும் மோதின.
இந்த உலகக்கோப்பையில் வலுமையான அணியாக கருதப்படும் அர்ஜெண்டினா, போஸ்னியாவை எளிதில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அர்ஜெண்டினாவிற்கு புதுமுக அணியான போஸ்னியா எல்லா வகையிலும் ஈடுகொடுத்து விளையாடியது. இப்போட்டியில் அர்ஜெண்டினா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

என்றாலும் இதில் ஒரு சேம் சைடு (ஓன் கோல்) ஆகும். மெஸ்சி அடித்த கோலால்தான் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது. இதனால் மெஸ்சி ஆட்ட நாயகன் விருது பெற்றது.

போட்டிக்கு பின் மெஸ்சி கூறியதாவது:-

இந்த போட்டி முக்கியமானது. சரியான இலக்கை நோக்கி நாங்கள் செல்கிறோம். இந்த வெற்றி மூலம் 3 புள்ளிகள் கிடைத்துள்ளது. ஆனாலும், இன்னும் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நினைக்கிறோம்.

நாங்கள் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றாலும், முதல் பாதி ஆட்டம் எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. எல்லா நேரமும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை விட வெற்றி பெறவேண்டும் என்பதே முக்கியம்.

இரண்டாவது பாதியில் பந்து எங்கள் வசம் இருந்தது. அதனால் சிறப்பாக விளையாட முடிந்தது. இதோபோல் மற்ற போட்டிகளிலும் விளையாடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக