ஞாயிறு, டிசம்பர் 29, 2013
பேஸ்புக் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்யப் படுவது கட்டுப்படுத்தப் படும்: பிரவீன்குமார்
சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற அனைத்துக் கட்சி கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தலைமை தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். மேலும், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்யப் படுவது கட்டுப்படுத்தப் படும் என அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தலைமையில் நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில்...
சனி, டிசம்பர் 28, 2013
சட்டவிரோத இஸ்ரேல் காசா மீது, ஆக்கிரமிப்பு தாக்குதல் - 3 வயது பலஸ்தீன குழந்தை வபாத்
இஸ்ரேல் பிரஜை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பதில் தாக்குதலாக பலஸ்தீனின் காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தீவிர வான் தாக்குதலில் மூன்று வயது பெண் குழந்தை உட்பட குறைந்தது இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.அல் மகாசி அகதி முகாம் மீது நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட இந்த வான் தாக்குதலில் ஹலா அபு ஸ்பைக் என்பவர் கொல்லப்பட்டிருப்பதோடு அவரது தாய் மற்றும் சகோதரர்கள் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சர் அஷ்ரப் அல் கித்ராவை மேற்கோள் காட்டி பலஸ்தீன செய்திச் சேவையான ‘மான்’ குறிப்பிட்டுள்ளது.
மோடிக்கு எதிரான ஸாக்கியா ஜாஃப்ரியின் மனு தள்ளுபடி! ஸாக்கியா மேல்முறையீடு! -
அஹ்மதாபாத்: குஜராத் இனப்படுகொலைகளை மோடி முன்னின்று நடத்தினார் என்று கூறப்பட்டும் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக அஹமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி, குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இந்திய வரலாறு காணாத முஸ்லிம் இனப்படுகொலையின் சூத்திரதாரியாக செயல்பட்டார் என்று வலுவான குற்றச்சாட்டு எழுந்தது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரண்டு இடங்களில் போட்டியிட பரிசீலிக்கும்
திருச்சி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரண்டு இடங்களில் போட்டியிட பரிசீலிக்கும் பணி நடைபெற்று வருவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.இது குறித்து அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது."முஸ்லிம் லீக் கட்சிக்கு தேசிய அளவில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்து முதல் முறையாக இóந்தத் தேர்தலில் தனித்த அடையாளத்துடன் ஏணி சின்னத்தில் போட்டியிட இருக்கிறோம். எனவே, தமிழ்நாட்டில் இரு இடங்களில் போட்டியிடவும், தொகுதிகளைத் தேர்வு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பி.ஜே.பி-யின் மாநிலத் துணைத் தலைவர் ஹெச்.ராஜா பல்வேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்?
பி.ஜே.பி-யின் மாநிலத் துணைத் தலைவர் ஹெச்.ராஜா பல்வேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்’ என்று தமிழக பி.ஜே.பி. தலைவர்களுக்கு ஓர் அதிரடிக் கடிதம் வந்துள்ளது.நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சூடு கிளப்பியிருக்கிறது இந்த சீட்டிங் விவகாரம்!பழனியப்பன் என்பவரும் அவருடைய மனைவி ரேவதியும் காரைக்குடியில் உள்ள ராஜா வீட்டின் முன்பு தங்கள் பணம் வேண்டி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவர்களைச் சந்தித்தோம்.பழனியப்பன் நம்மிடம் பேசினார். ''நான் 85-ம் ஆண்டு முதல் பி.ஜே.பி-யில் இருந்து வருகிறேன். எனது சொந்த ஊர் காரைக்குடி அருகே உள்ள கண்டனூர். ராஜா எனக்கு நெருக்கமான நண்பர். ராஜா என்னிடம் காரைக்குடியில் லோட்டஸ் பெனிஃபிட் ஃபண்ட் என்று சிட் ஃபண்ட் ஆரம்பித்திருப்பதாகக் கூறினார். அதில் 97-ம் ஆண்டு நவம்பர் மாதம் 50,000 ரூபாய் முதலீடு செய்தேன். அதற்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வட்டி அளித்தனர்'' என்றதும் அருகில் இருந்த அவருடைய மனைவி ரேவதி பேசத் தொடங்கினார்.
வியாழன், டிசம்பர் 26, 2013
மச்சில் : போலி என்கவுன்டர் ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவு
ஜம்மு : மச்சில் போலி என்கவுன்டர் வழக்கில், ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் நதிகால் கிராமத்தை சேர்ந்தவர்கள் முகமது சபி, செசாத் அகமது, ரியாஸ் அகமது. இவர்கள் கடந்த 2010ம் ஆண்டு மாயமாகினர். இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போனவர்களை தேடி வந்தனர்.இந்நிலையில், 2010 ஏப்ரல் 30ம் தேதி, வடக்கு காஷ்மீரின் மச்சில் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நுழைய முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேரை சுட்டுக் கொன்றதாக ராணுவத்தினர் தெரிவித்தனர். அவர்களின் உடல்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
எகிப்து தாக்குதலை காரணம் காட்டி இஃக்வானுல் முஸ்லிமீனை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது எகிப்திய சர்வாதிகார ராணுவ அரசு!
கெய்ரோ: ஜனநாயக அரசை சதிப் புரட்சி மூலம் கவிழ்த்துவிட்டு ராணுவ சர்வாதிகார அரசு ஆட்சி நடத்தும் எகிப்தில் போலீஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். 120 பேருக்கு காயம் ஏற்பட்டது. கொல்லப்பட்டவர்களில் உயர் போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர். தாக்குதலுக்கான பொறுப்பை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
புதன், டிசம்பர் 25, 2013
காங்கிரஸ் தலைவர்களின் ஊழல்களை விசாரிப்போம்: ஆம் ஆத்மி உறுதி
டெல்லி: தங்கள் ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்க வேண்டாம் என்று டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ள ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. எங்களது அரசு கவிழ்ந்தாலும், காங்கிரஸ் தலைவர்களது ஊழல்கள் குறித்து விசாரிப்போம் என்றும் அக்கட்சி கூறியுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ், கூறியதாவது:
திருச்சியில் டிசம்பர் 28ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் விழிப்புணர்வு மாநாடு- பேரணி
திருச்சி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு டிசம்பர் 28ம் தேதி சனிக்கிழமை மாநிலத் தலைவரும், தேசியப் பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம். காதர் மைதீன் தலைமையில் திருச்சியில் நடைபெறுகிறது. இம் மாநாட்டையொட்டி திருச்சி மாநகரில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இம் மாநாட்டின் துவக்க நிகழ்வாக பயங்கரவாதத்தை எதிர்த்தும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், இளம் பிறை எழுச்சி பேரணி நடைபெறுகிறது.
முல்லாக்கள், ஸியோனிஸ்டுகளின் கூட்டுச் சதியில் எகிப்தில் கருவருக்கப்படும் இஹ்வான்கள்
“கொல், அழி, ஈவிரக்கமின்றிப் படுகொலை செய். என்ன விலை கொடுத்தாவது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை கருவருத்துவிடு”. எகிப்திய இராணுவத் தளபதி அப்துல் பத்தாஹ் அல்-ஸிஸிக்கு வழங்கப்பட்டுள்ள் தெளிவான அறிவுறுத்தல் இதுதான். ஸியோனிஸ, அமெரிக்க, ஐரோப்பிய எஜமானர்களினதும், இராணுவப் புரட்சிக்கு நிதியுதவி வழங்கிய சவூதி, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத் போன்ற நாடுகளின் பாசிச முல்லாக்களினதும் மோசமான சாத்தானிய நிகழ்ச்சி நிரலை முன்கொண்டு செல்லும் வகையில், அல்-ஸிஸி இவ்வுத்தரவுகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றி வருகிறார் என்பதையே தற்போதைய எகிப்திய நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன. ஏழாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வரலாற்றையும், மத்திய கிழக்கில் மிக அதிக சனத்தொகையையும் கொண்ட எகிப்தை அவர் ஒரு கொலைக்களமாகவே மாற்றி வருகின்றார்.
அங்கோலா அரசாங்கம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல: பள்ளிவாசல் இமாம் உஸ்மான் பின் ஸைத்
அங்கோலாவில் இஸ்லாம் சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளதோடு, பள்ளிவாயல்களை தகர்க்குமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லை என அந்த செய்தியை அந்நாட்டு பள்ளிவாயல் இமாம் ஒருவர் முழுமையாக மறுத்துள்ளார். வழிப்பாட்டுத் தலங்கள் அமைக்கவென நியமிக்கப்பட்ட பகுதிகளில் அல்லாமல் அதற்கு வெளியில் அமைக்கப்பட்டமையே குறித்த சில மஸ்ஜித்கள் உடைக்கப்பட்டமைக்கான காரணம் எனவும் அவர் தெளிவு படுத்தியுள்ளார்.
செவ்வாய், டிசம்பர் 24, 2013
முஸஃபர் நகர்: குளிரை தாக்குப் பிடிக்க பாப்புலர் ஃப்ரண்ட் உதவி!
முஸஃபர் நகர்: உத்தர பிரதேச மாநிலம் முஸஃபர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள முகாம்களில் துயரமான சூழல் கடுமையான குளிரால் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அங்கு நடத்தி வந்த துயர் துடைப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக முகாம்களில் நிவாரணப் பணிகளுக்கு தலைமை வகிக்கும் மவ்லானா முஹம்மது ஸதாப் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி, இன்று நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம்!
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் இன்று(22.12.2013) சென்னையில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் பி. அப்துல் ஹமீது, நிஜாம் முஹைதீன், மாநில பொருளாளர் ஏ. அம்ஜத் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் எஸ்.எம். ரபீக் அகமது அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர்கள் செய்யது அலி, அமீர் ஹம்சா, அப்துல் சத்தார், ரத்தினம் ,அபுதாகிர் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொணடனர்.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அரசியல் சூழல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வெள்ளி, டிசம்பர் 20, 2013
ராஜ்நாத்சிங்குடன் அன்புமணி சந்திப்பு!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கை பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் வலுவான அணி அமைக்கும் முயற்சியில் அக்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 15-ந் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அக்கட்சி அறிவித்தது.
வியாழன், டிசம்பர் 19, 2013
இலங்கை : கொழும்பில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்த தடை
இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையிலுள்ள மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகள் நடத்த வேண்டாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை தொழுகை நேரத்துக்கு சற்று முன்னர் காவல்துறையினர் அந்த குறிப்பிட்ட பள்ளிவாசல்களில் தொழுகையை நடத்த வேண்டாம் என்று கூறியதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
வகுப்புக் கலவர தடுப்பு மசோதா: அமைச்சரவை அங்கீகாரம்! - பாராளுமன்றத்தில் தாக்கல்
வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முக்கிய பிரிவுகளை நீக்கிவிட்டு அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.பா.ஜ.க உள்ளிட்ட சில எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே இம்மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இன்று மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.
ஓரினசேர்க்கை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்! ஆதரவாளர்களை வன்மையாக கண்டிக்கிறோம்! நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில தலைவர் அறிக்கை!
ஓரினசேர்க்கை என்ற மிகக்கொடிய ஒழுக்கக்கேடான செயலுக்கு டெல்லி சுப்ரீம் கோர்ட் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 ன் கீழ் ஓரின சேர்க்கை கொள்வது கிரிமினல் குற்றம் என்றும் இந்த குற்றத்திற்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) வரவேற்கிறது.இந்த கிரிமினல் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வழங்குவது மட்டுமல்லாமல் அதிகபட்ச தண்டனையான மரணதண்டனை வழங்குவதற்கு தகுதியான ஒரு மோசமான அருவருக்கத்தக்க செயல்தான் இந்த ஓரின சேர்க்கை.
செவ்வாய், டிசம்பர் 17, 2013
காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணியா ? கருணாநிதி :
சென்னை: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். நம்பிக்கை துரோகம் செய்த காங்கிரசுடன் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த வகையிலும் திமுக கூட்டணி சேராது என்று கட்சியின் பொதுக்குழுவில் பேசிய கருணாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
திராவிட மண்ணில் மதவாத பா.ஜ.க.வை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தி்ண்டுக்கல்: “திராவிட மண்ணில் மதவாத பா.ஜ.க.வை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்” என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கடந்த டிசம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் தி்ண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழுவிற்கு மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். தேசிய பொதுச் செயலாளர் ஓ.எம்.ஏ. சலாம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் ஏ. காலித் முஹம்மது விடுத்துள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது:
திங்கள், டிசம்பர் 16, 2013
முஸஃபர்நகர் கலவரம்:என்.சி.எச்.ஆர்.ஒ உண்மை அறியும் குழு அறிக்கை
ஹிந்துத்துவவாதிகளின் பிடியில் மத்திய உள்துறை அமைச்சகம்! – சமூக ஆர்வலர்கள்
புதுடெல்லி: இந்தியாவில் அதிகார மையங்கள் காவிமயமாக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், மத்திய அமைச்சகமும் கிட்டத்தட்ட ஹிந்துத்துவா சக்திகளின் பிடியில்தான் உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோதும் முஸ்லிம் இளைஞர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்படுவது தொடருவதற்கு காரணம் இதுவாகும் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் பா.ஜ.க.வில் சேர்ந்தது இதற்கான தெளிவான ஆதாரமாகும். உள்துறை அமைச்சகம் தவிர இதர துறைகளிலும் இதே நிலைதான் காணப்படுவதாக சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார்.
சனி, டிசம்பர் 14, 2013
ராமநாதபுரம் அருகே ஆள் இல்லா உளவு விமானம் விபத்து!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆள் இல்லா உளவு விமானம் விபத்துக்குள்ளானது.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். பருந்து விமான தளம் இயங்கி வருகிறது. தமிழக கடலோர பகுதிகளில் அந்நியர் ஊடுருவலை கண்காணிக்கவும், ஆபத்துகளில் சிக்கும் மீனவர்களை மீட்கவும் இங்குள்ள கடற்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் குட்டி விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், கடந்த ஆண்டு பருந்து கடற்படை விமான தளத்தில் ஆள் இல்லா உளவு விமானம் புதிதாக சேர்க்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக உச்சிப்புளி கடற்படை விமான தளத்தில் இருந்து ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் நடுவழியில் பழுதடைந்த நிகழ்வுகள் நடந்தன.
பாட்னா குண்டுவெடிப்பு: ஆயிஷா பானு குற்றவாளி இல்லை!-என்.ஐ.ஏ!
பெங்களூர்: அக்டோபர் 27-ஆம் தேதி நிகழ்ந்த பாட்னா குண்டுவெடிப்புக்கும் ஹவாலா பண பட்டுவாடாவுக்கும் தொடர்பு இருப்பதாக பீகார் போலீஸ் கூறுவது தவறு என்று தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கூறியுள்ளது.குண்டுவெடிப்புக்கு பணம் உள்ளூரிலேயே திரட்டப்பட்டுள்ளது என்று என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.பாட்னா குண்டுவெடிப்புக்காக சில இடைத்தரகர்கள் மூலம் பணம் கிடைத்ததாக பீகார் போலீஸ் கூறியிருந்தது.இது தொடர்பாக மங்களூர்,பீகாரில் சிலர் கைதுச் செய்யப்பட்டனர்.
ராஜ்நாத் சிங்குடன் வைகோ சந்திப்பு: பா.ஜ. - ம.தி.மு.க. கூட்டணி உறுதி!
புதுடெல்லி: பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். இதனால் பா.ஜ.க.-ம.தி.மு.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பின், அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும் 5 மாநிலங்களிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து, 4 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் பார்வை பா.ஜ.க. மீது திரும்பியுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர் தப்பினார் என்பது பொய்!ஏ.டி.எஸ் கடத்திச் சென்றதாக யாஸீன் உஸ்மானி!
மும்பை: செப்டம்பர் மாதம் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிச் சென்று பின்னர் கைதுச் செய்யப்பட்டார் என்ற செய்யப்பட்டதாக கூறப்படும் யாஸீன் உஸ்மானி தற்போது அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.நீதிமன்றத்திற்கு அளித்த கடிதத்தில் யாஸீன் உஸ்மானி கூறியிருப்பது: நான் தப்பிச் என்று பின்னர் பிடிபட்டது மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை தயாரித்த நாடகமாகும்.ஏ.டி.எஸ் அதிகாரிகள் என்னை நீதிமன்ற வளாகத்தில் இருந்து கைதுச் செய்து அழைத்துச் சென்றனர்.செப்டம்பர் 20-ஆம் தேதி நீதிமன்ற வளாகத்திற்குள் எனது உறவினருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது இரண்டு ஏ.டி.எஸ் அதிகாரிகள் வந்து எங்களைக் கைதுச் செய்து அழைத்துச் சென்றனர். தாங்கள் யார்? என்பதை தெரிவித்த அவர்கள்,
முஸஃபர் நகரில் இனி ஒரு குழந்தை கூட மரணிக்கக் கூடாது – உச்சநீதிமன்றம்!
முஸஃபர் நகர் அகதிகள் முகாமில் நிலவும் துயரமான சூழல்குறித்து உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.முகாம்களில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவுக்குள் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உ.பி மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.முஸஃபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்கியுள்ள முகாம்களில் குளிரை தாங்க முடியாமல் 40 குழந்தைகள் பலியான.....
இந்திய தூதரக அதிகாரி கைது: அமெரிக்க தூதருக்கு இந்தியா சம்மன்
நியூயார்க்கில் இந்தியத் துணைத் தூதர் கைது செய்யப்பட்டதற்கு அதிர்ச்சி வெளியிட்டுள்ள வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், அது தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவலுக்கு சம்மன் அனுப்பினார்.விசா மோசடி தொடர்பான குற்றச்சாட்டில், இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ராகடே பொது இடத்தில் கைவிலங்கிட்டு கைது செய்யப்பட்டதற்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ள வெளியுறவுச் செயலர்,
வெள்ளி, டிசம்பர் 13, 2013
டெல்லி:தலித் கிறிஸ்தவ-முஸ்லிம் அமைப்புகள் நடத்திய பேரணியில் போலீஸ் தடியடி!
தலித் கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் அட்டவணை சாதியினர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கக்கோரி பல்வேறு தலித் கிறிஸ்தவ,முஸ்லிம் அமைப்புகள் டெல்லியில் நடத்திய பேரணியில் போலீஸ் அராஜகத்தை அரங்கேற்றியுள்ளது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது போலீஸ் தடியடிநடத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்தது.
வியாழன், டிசம்பர் 12, 2013
பிரான்சில் ஹலால் உணவை விற்கும் சூப்பர் மார்கட்டை இனவாத கும்பல் தாக்குதல்
பிரான்சின் ரோபியாஹ் என்ற நகரில் அமைந்துள்ள சூப்பர்மார்கெட் ஒன்று இஸ்லாமிய முறைப்படி அறுக்கப் பட்ட இறைச்சி வகைகளை சந்தைப் படுத்தி வருகிறது. இதன் காரணமாக குறித்த சந்தையை இனம் தெரியாத ஆயுதமேந்திய இனவாத கும்பல் ஒன்று முகமூடி அணிந்த நிலையில் தாக்கி, கொள்ளையடிக்க முயட்சித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் அரசியல் சூழ்நிலை பற்றி குவைத்தில் SDPI கட்சியின் மாநில தலைவர் எழுச்சி உரை:
குவைத்தில் இந்தியா ஃப்ரடர்நிட்டி ஃபாரம் (KIFF) சார்பாக கடந்த 06-12-2013 வெள்ளிகிழமை அன்று குவைத் ஜமியதுல் இஸ்லாஹி அரங்கத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாலை 6.45 மணிக்கு மௌலவி சம்சுதீன் திருக்குரான் ஓதி நிகழ்ச்சியை இனிதே துவங்கிவைத்தார். குவைத் இந்தியா ஃப்ரடர்நிட்டி ஃபாரம் (KIFF)-ன் தமிழ் பிரிவு செயலாளர் உஸ்மான் அலி வரவேற்புரை நிகழ்த்தினார், அதை தொடர்ந்து பொதுக்கூட்டத்தை தலைமை பொறுப்பேற்று நடத்திய குவைத் இந்தியா ஃப்ரடர்நிட்டி ஃபாரம் (KIFF)-ன் தமிழ் பிரிவு தலைவர் ராஜிக் ரஹ்மான் தலைமை உரை நிகழ்த்தினார்.
எஸ் டி பி ஐ தமிழக அரசிற்கு கோரிக்கை : நிதாகத் சட்டத்தினால் தமிழர்கள் பாதிப்பு
சென்னை: நிதாகத் சட்டத்தினால் சவூதி அரேபியாவில் வேலை இழந்து தவித்து வரும் தமிழர்கள் தாயகம் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) மாநில பொதுச்செயலாளர் நிஜாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவிலிருந்து வேளி நாடுகளுக்கு வேலைவாய்ப்புத்தேடி பல்வேறு மாநில மக்கள் சென்றுள்ளனர். சவூதி அரேபியா நாட்டிலும் வேலை வாய்ப்பிற்காக தமிழகத்தை சேர்ந்தவர்களும் சென்றுள்ளனர். சவூதி அரேபியாவில் “நிதாஹத்” என்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதன், டிசம்பர் 11, 2013
பொதுமக்களை சோதனை எலிகளாக மாற்று டாக்டர்கள் !!!
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் பெரும்பாலானவைகளால் எந்தப் பிரயோஜனமும் இல்லாததோடுஅவை மக்களுக்கு அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அதிர்ச்சி ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.டாக்டர் வினய் பிரசாத் அவர்கள் தலைமையில் நியு இங்லண்ட் ஜர்னல் ஆப் மெடிசின் என்ற புகழ் பெற்ற பத்திரக்கையில் பிரசுரமான 1,344 கட்டுரைகளை அலசி ஆராய்ச்சி செய்யப்பட்டது. அந்த ஆராய்ச்சியின் முடிவில், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகள், அவர்கள் அளிக்கும் சிகிச்சை முறைகள் பாதிக்கு மேல் பயனற்றவை; பல சிகிச்சைகள் உண்மையில் நோயின் பாதிப்பை அதிகப்படுத்துகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லி : 25 புதிய எம் எல் ஏ மீது கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 70 உறுப்பினர்களில் 25 பேர் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 17 பேர் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஆவர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப் பெற்ற 22 பேர் மீண்டும் எம்.எல்.ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 15 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளார் ஹர்ஷவர்தன் உள்ளிட்ட 50 சதவீதத்திற்கும் அதிகமான எம்.எல்.ஏக்களின் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. பா.ஜ.கவின் 31 எம்.எல்.ஏக்களில் 12 பேர் மீது கிரிமினல் குற்றமும், கொலைக் குற்றமும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் மற்றுமொரு பொய் நாடகம் சிரியா ரசாயன குண்டு
சிரியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் மரணத்திற்கு காரணமான இரசாயன ஆயுதம் பிரயோகிக்கப்பட்டதை உலக மக்களை திசை திருப்ப அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.சிரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கான சூழலை உருவாக்க ஒபாமா இந்நடவடிக்கையை மேற்கொண்டார் என்று பிரபல அமெரிக்க பத்திரிகையாளரும் புலிஸ்டர் விருது பெற்றவருமான ஸைமூர் ஹெர்ஷ் தனது நூலில் எழுதியுள்ளார்.
155 பெண்கள் விடுதலை எகிப்தில்
எகிப்தில் ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடிய 155 பெண்கள் விடுதலைச் செய்யப்பட்டனர். இவர்கள் மீது சுமத்தப்பட்ட போலீஸ் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.ராணுவ சதிப் புரட்சியின் மூலம் எகிப்தின் முதல் ஜனநாயக அதிபர் முஹம்மது முர்ஸி பதவி நீக்கம் செய்யப்பட்டு ரகசிய இடத்தில் சிறைவைக்கப்பட்டார்.
மதக் கலவரத் தடுப்புச்சட்ட எதிர்ப்புகள் சரியா?
மதக் கலவரத் தடுப்புச் சட்டம் வரும் நாடாளுமன்றத் தொடரில் முன்வைக்கப்படலாம் என மத்திய அரசு அறிவித்தவுடன், எதிர்பார்த்த முனைகளிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பா.ஜ.க. இதனை இந்துக்களுக்கு எதிராகவும் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் கொண்டுவரப்படுவதாகக் குற்றம்சாட்டுகிறது. இன்னொரு பக்கம், மாநிலக் கட்சிகள் இது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் முயற்சி என எதிர்க்கின்றன. வழக்கம்போல இதில் ஜெயலலிதா முன்நிற்கிறார். எதிர்ப்புத் தெரிவிக்கும் மூன்றாவது பிரிவினர் உயர் அதிகாரவர்க்கத்தினர்.தாம் அரசியல்ரீதியாகப் பழிவாங்கப்பட இது ஒரு கருவியாக அமையும் என்கின்றனர்.
செவ்வாய், டிசம்பர் 10, 2013
திங்கள், டிசம்பர் 09, 2013
மூட நம்பிக்கை எதிர்ப்பாளர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் இருவர் கைது
மஹராஷ்ட்ரா மாநிலத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்துவந்த சமூக ஆர்வலர் நரேந்த்ர தபோல்கரைக் கொலைச் செய்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்த, துல்லியமாக துப்பாக்கி சுடும் திறன் பெற்ற அவர்கள் இருவரையும் கோவாவுக்கு அருகே விருந்து நடைபெற்ற ஓரிடத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி கைது செய்ததாகவும், உடனடியாக புனேவுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஓ.பி. மிஷ்ரா தெரிவித்தார். இருப்பினும் அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
ஆம் ஆத்மி அலையில் காங்கிரஸ் படு தோல்வி - மக்கள் விரோத ஆட்சிக்கு கிடைத்த பரிசு
டெல்லி, இராஜஸ்தான். ம.பி., மற்றும் சட்டீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. முதன்முதலாக தேர்தலில் களம் கண்ட ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் சிறந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆளும் பா.ஜ.க ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. ம.பியில் உள்ள மொத்தத் தொகுதிகள் 230, இதில் பாஜக 165 இடங்களியும், காங்கிரஸ் 58 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.சட்டீஸ்கரில்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)