செவ்வாய், அக்டோபர் 29, 2013

நிலைக்கண்ணாடிகளால் சூரிய ஒளி பெரும் நார்வே கிராமம்..

நார்வே நாட்டின் தென்பகுதியில் அடர்ந்த மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள எழில் மிகும் கிராமம், ர்ஜுக்கான். 

இதர பெரிய வசதிகள் ஏதுமற்ற இந்த கிராமத்தில் உள்ள நீராதாரத்தை அடிப்படையாக கொண்டு ஒர் உரத் தொழிற்சாலையும் ரெயில் பாதையும்  மட்டும் உண்டு. 

ஒபாமாவின் டுவிட்டர் - பேஸ்புக் இணைப்புகள் முடக்கம்: 'சிரிய' ஹேக்கர்ஸ் கைவரிசை..

வாஷிங்டன், அக். 29- அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களை சிரியா ஆதரவாளர்கள் நேற்று பல மணி நேரத்திற்கு முடக்கி வைத்தனர். 


இந்த பக்கங்களை பார்வையிடுவதற்காக இணைப்புகளை கிளிக் செய்த நபர்கள், சிரியாவின் மின்னணு ராணுவம் என்ற இணைய இணைப்புக்கு திசை திருப்பப்பட்டனர்.

கல்லடி எதிரொலி: உம்மன் சாண்டிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு....

திருவனந்தபுரம், அக். 29- சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசின் மந்திரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கேரள எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 


இதனால் உம்மன் சாண்டி பதவி விலக வேண்டும் என்று இடது சாரி ஜனநாயக முன்னனி அங்கு போராட்டம் நடத்தி வருகிறது. கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி போலீஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கண்ணூர் சென்றார்.

மகாராஷ்டிரா: பாஜக-வினரின் சாதி வெறி கலவரம்..

dalitkilling_pkg
காராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள வேய்ராகட் கிராமத்தில் கடந்த அக்டோபர் 12 அன்று அம்பேத்கர் சிலைக்கு முன் கூடி நின்று வழிபாடு செய்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்டவர்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு கூடியிருந்த தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண்களை மிகவும் தரக்குறைவாக திட்டியுள்ளனர். 1956-ல் நாக்பூரில் அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறிய தினத்தை (அக்டோபர் 14) தாழ்த்தப்பட்ட மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாக்பூருக்கு வந்து ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர். அதற்கு கிளம்பிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பாஜக வை சேர்ந்தவரும், ஆதிக்க சாதியினருமான கிராம பஞ்சாயத்து தலைவர் அமோல் சாத்தே ஒரு சாதிவெறிக் கூட்டத்துடன் வந்து தாக்குதலை நடத்தினார்.

சனி, அக்டோபர் 26, 2013

குஜராத் தனியார் பள்ளியில் முஸ்லிம்களை சேர்க்க அனுமதி மறுப்பு!

குஜராத் மாநிலத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் முஸ்லிம் மாணவி படிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவருடைய தாயார், மாவட்ட கல்வி அதிகாரிக்கு புகார் அளித்துள்ளார்.

வியாழன், அக்டோபர் 24, 2013

அனைவரது வரவேற்பையும் பெற்ற IFFன் ஹாஜிகளுக்கான தன்னார்வச் சேவை!

ரியாத்: சவூதி அரேபியா முழுவதும் நல்ல பல சமூகச் சேவைகளைச் செய்து வருகிறது இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (IFF). இதன் சேவைகளில் மிக முக்கியமானதும், அனைவரது வரவேற்பையும் பெற்றதுதான் ஹாஜிகளுக்கான தன்னார்வச் சேவை.

இரண்டு ஃபலஸ்தீனியர்களை கொலை செய்த இஸ்ரேல் இராணுவம்!

ராமல்லா: ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேல் இராணுவம் இரண்டு ஃபலஸ்தீன் இளைஞர்களை அநியாயமாக சுட்டுக் கொலை செய்துள்ளது.

புரூனேயில் இனி ஷரீஆ சட்டம்!

பந்தர் செரி பகவன்: தென்கிழக்கு ஆசியாவில் தீவு தேசமான புரூனேயில் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் அமல் படுத்தப்படும் என்று ஆட்சியாளர் சுல்தான் ஹஸனுல் புல்கியா அறிவித்துள்ளார்.

செவ்வாய், அக்டோபர் 22, 2013

மலேசியா: இஸ்லாமிய நற்பணி மன்றத்தின் நிறுவனர் "அறம்" அப்துல் சுபுஹான் காலமானார்!

இஸ்லாமிய சிந்தனையாளர், எழுத்தாளர், சமூக சேவகர், சமுதாய பணியினை வற்றாத இளமையோடு செயலாற்றி கொண்டிருந்த "இஸ்லாமிய நற்பணி மன்ற" நிறுவனர் "அறம்" அப்துல் சுபுஹான் அவர்கள் நேற்று காலமானார்.

திங்கள், அக்டோபர் 21, 2013

மீடியாக்களின் மோடி வித்தை!

இந்தியாவின் 14வது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் அரசியல் கட்சிகளின் பதட்டம் அதிகரித்து வருகிறது. பிரதமர் பதவியைக் கைப்பற்றிக் கொள்வதற்காக இரண்டு தேசிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இரண்டு தேசிய கட்சிகள் இடையே பலத்த போட்டி இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

குர்பானி இறைச்சி: 12 மாநிலங்களில், 550 கிராமங்களில், 3,30,000 ஏழைகளுக்கு வினியோகம் – ரிஹாப் சாதனை!

நலிந்த சமூகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் ரிஹாப் இந்தியா பௌண்டேஷன் இந்த ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி 3,30,000 ஏழைகளுக்கு குர்பானி இறைச்சி உணவு கிட் வழங்கி சாதனை படைத்துள்ளது. மொத்தம் 12 மாநிலங்களில், 550 கிராமங்களில் ஏழைகளுக்கு குர்பானி உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பதவியை நிராகரித்த சவூதி அரேபியா!

ஜித்தா: சவூதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்றஉறுப்புரிமை கிடைத்து ஒரு நாள் கடந்துள்ள நிலையில், அந்நாட்டு அரசு அந்த உறுப்புரிமையை நிராகரித்துள்ளது. பாதுகாப்புக் கவுன்சிலின் இரட்டை நிலைப்பாடு காரணமாக அதனால் உலக அமைதிக்காகப் பணியாற்ற முடியாது என்று சுட்டிக்காட்டியே சவூதி அரேபியா அதன் உறுப்புரிமையை நிராகரித்துள்ளது.

உருவம் மாறினாலும் தனது அஜண்டாவை மறைக்க இயலாத மோடி!

பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளர் என்ற பட்டத்தை சுமந்து இந்தியா முழுவதும் வலம்வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தன் மீது படிந்துள்ள இனப்படுகொலை கறையை துடைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.

திரைப்படமானது சட்டப் போராளி ஷாஹித் ஆஸ்மியின் போராட்ட வாழ்க்கை!

2010-ஆம் ஆண்டு ஹிந்துத்துவ பாசிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்ட சட்டப் போராளி ஷாஹித் ஆஸ்மியின் போராட்ட வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் ‘ஷாஹித்’ தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. தனக்கு சரியென தோன்றியதற்காக வாழ்க்கையை அர்ப்பணித்ததற்காக ஷாஹித் தனது உயிரையே பலி கொடுக்க நேர்ந்தது. கலப்படம் ஏதுமில்லாமல் ஹன்ஸல் மேத்தா ஷாஹிதின் கதையை கூறுகிறார்.

செவ்வாய், அக்டோபர் 08, 2013

இயற்பியல் துறை நோபல் பரிசு: பிரிட்டன், பெல்ஜியம் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது

2013-ம் ஆண்டிற்கான இயற்பியல் துறை நோபல் பரிசு: பிரிட்டன், பெல்ஜியம் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது
ஸ்டாக்ஹோம், அக். 8-உலகின் மிகப்பெரிய பரிசான நோபல் பரிசு சமூக, அறிவியல் சேவைகளில் ஈடுபட்டோருக்காக ஆண்டுதோறும் நார்வே, சுவீடன் நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

மருத்துவத்துறைக்கான நோபல் பரிசுக்கு நேற்று அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் ராத்மேன், ராண்டி ஷேக்மேன் மற்றும் ஜெர்மனியின் தாமஸ் சுடாப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது. 

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டன. இதில் பெல்ஜியத்தின் இயற்பியல் விஞ்ஞானி பிராங்காய்ஸ் எங்லெர்டும், பிரிட்டன் விஞ்ஞானி பீட்டர் ஹிக்சும் இப்பரிசை கூட்டாக பெறுகின்றனர் என்று ராயல் சுவீடிஸ் அறிவியல் அகாடமி அறிவித்துள்ளது. 

இந்த இரு விஞ்ஞானிகளும்  இணை அணுத் துகள்கள் நிறையின் தோற்றம் குறித்த தத்துவார்த்த கண்டுபிடிப்புகளுகாக இது வழங்கப்படுகிறது. 

மத்திய, மாநில அரசுப் பணி: மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு:


புதுடெல்லி, அக். 8– உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு உரிமைகளும், சலுகைகளும் வழங்கக்கோரி போராடி வருகிறார்கள்.

பெரும்பாலான மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று சிறப்புத் திட்டங்கள் எதுவும் இல்லாத நிலை உள்ளது. இதனால் தகுதி இருந்தும் மாற்றுத் திறனாளிகள் உரிய வேலை பெற முடியாமல் உள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் சிறை நிரப்பும் போராட்டம்: இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!


pfiசென்னை/மதுரை: தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களையும், பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது செய்யப்படுவதையும், கருப்புச் சட்டங்களின் மூலம் பொது மக்களை அச்சுறுத்துவதையும் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மாபெரும் சிறை நிரப்பும்  போராட்டம் சென்னை மற்றும் மதுரையில் கடந்த 06.10.2013 ஞாயிறு அன்று நடைபெற்றது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்  நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாஈல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முஹம்மது ரஸீன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது ஃபக்ருதீன் துவக்க உரை நிகழ்த்தினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. முஹம்மது ஹனீஃபா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மு. வீரபாண்டியன், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் அ.ச. உமர் ஃபாரூக், சமூக ஆர்வலர் மற்றும் அரசியல் விமர்சகர் டி.எஸ்.எஸ். மணி, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) மாநில செயற்குழு உறுப்பினர் சித்தி ஆலியா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
மதுரையில் நடைபெற்ற  போராட்டத்துக்கு மாநில துணைத் தலைவர் முஹம்மது ஷேக் அன்சாரி தலைமை தாங்கினார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம். ரஃபீக் அஹமது, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். ஷெரீஃப், ஆல்  இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஆபிருதீன் மன்பயீ, நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் மாநில பொதுச் செயலாளர் ரஜியா பேகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர்  கனி  அமுதன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன் வைத்த தீர்மானங்கள்:
1. தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் மனித உரிமை மீறல்களை இப்போராட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு காவல்துறையின் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

2. தொடர்ந்து பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ள முஸ்லிம்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க  வேண்டும்.
3. நடைபெற்ற அனைத்து குற்றங்களையும், முஸ்லிம்கள்தாம் செய்திருப்பார்கள் என்ற தவறான கோணத்தில் விசாரிக்காமல், நடுநிலையான, நேர்மையான மனநிலையோடு காவல்துறையும், உளவுத்துறையும் விசாரணை நடத்த வேண்டும்.
4. கருப்புச் சட்டமான யு.ஏ.பி.ஏ. சட்டம் (சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) தமிழகத்தில் தவறாக பயன்படுத்தப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.
5. ஜனநாயக அடிப்படையிலான போராட்டங்களுக்கு தடை விதிக்கும் போக்கு மாற வேண்டும்.

6. வட  மாநிலங்களில் செயல்படுத்தி வந்த தீவிரவாத நாடகங்களை தமிழகத்தில் அரங்கேற்றும் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மீது அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7. சட்டத்திற்கு முரணாக செயல்படும் காவல்துறையினர், உளவுத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும், காவல் புகார் ஆணையம் ஒன்றை உடனே அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்களை முன்வைத்து சென்னை மற்றும் மதுரையில்  போராட்டம் நடத்திய பாப்புலர் ப்ரண்ட் தொண்டர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தொலைந்து போன வாழ்க்கைகள்..

டந்த மூன்று மாதங்களாக ஷப்பீர் அஹ்மத் வாஸியுல்லா தனது காலை நேரங்களை மாலேகானின் டி.எம் உயர்நிலைப் பள்ளியில் தான் கழிக்கிறார். அவரது மகன் மாஸின் வகுப்பறைக்கு வெளியே நான்கு மணி நேரங்கள் பொறுமையாகக் காத்திருக்கிறார். வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போதே 11 வயதான மாஸ் தனது தந்தை அமர்ந்திருப்பதை அடிக்கடி எட்டிப் பார்த்து உறுதிப் படுத்திக் கொள்கிறான்.
மாலேகான் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட முஸ்லீம்கள்.
கடந்த 2006-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ம் நாள் மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரின் நாசிக் பகுதியில் அமைந்திருக்கும் அவர்களது வீட்டுக்குள் அத்துமீறி நுழையும் போலீசார், ஷப்பீரை இழுத்துச் செல்கின்றனர். அப்போது மாஸ் நான்கு வயதுச் சிறுவன்.
ஒரே இரவில் சிறுவன் மாஸின் தந்தை பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படுகிறார். இதனால் சக மாணவர்களின் கேலி கிண்டல்களால் மாஸ் பள்ளி செல்வதையே நிறுத்தினான். சுமார் ஏழு வருடங்களாக வீட்டிலேயே அடைந்து கிடந்தான்.
2011-ம் ஆண்டு ஷப்பீர் பிணையில் வெளியே வந்தார். எனினும், அவரது மகனை மீண்டும் பள்ளியில் சேர்க்க இரண்டு ஆண்டுகள் ஆனது. ”சிறையிலிருந்து வெளியே வந்து முதன் முறையாக எனது மகனைத் கட்டித் தழுவிய போது அவன் அதிகம் பேசவில்லை. பள்ளிக்குச் செல்வது குறித்து கேட்ட போது அவன் முற்றாக மறுத்து விட்டான்”.
“நான் பள்ளிக்குச் சென்றால், போலீசு உங்களை மீண்டும் கைது செய்து விடும் என்றான். எனவே அவனது வகுப்புகள் முடியும் வரை நான் அவனது வகுப்பறைக்கு வெளியே காத்திருக்கிறேன்” என்கிறார் ஷப்பீர். முன்பு சொந்தமாக பாட்டரிகள் விற்கும் கடை ஒன்றை நடத்தி வந்த ஷப்பீர் தற்போது சிறையில் கற்றுக் கொண்ட அக்குபிரஷர் மருத்துவத்தைக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறார்.
சுவாமி அசீமானந்தா
அசீமானந்தா
விசைத்தறிகளின் நகரமான மாலேகான் முன்பொரு காலத்தில் தடை செய்யப்பட்ட இசுலாமிய மாணவர் இயக்கத்தின் மையமாக இருந்தது. மாலேகான் குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடன் கைது செய்யப்பட்ட ஒன்பது அப்பாவி இசுலாமியர்களில் ஷப்பீரும் ஒருவர். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்காக கைது செய்யப்பட்ட சுவாமி அசீமானந்தா,  தான் சார்ந்திருந்த வலது சாரி இந்துத்துவ இயக்கமே மாலேகான் குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை அடுத்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டிருந்த ஒன்பது இசுலாமியர்களும் 2011-ம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மாலேகான் வழக்கு முதலில் மகாராஷ்டிராவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாராலும், பின்னர் சிபிஐ-யினாலும் விசாரிக்கப்பட்டு வந்தது. அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலத்தை அடுத்து வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஆகஸ்டு மாத இறுதியில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் இல்லையென்றும், அவர்களின் விடுதலைக் கோரிக்கையைத் தாம் எதிர்க்கப் போவதில்லையென்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தது தேசிய புலனாய்வுத் துறை.
ஆக, கைது செய்யப்பட்டு ஏழு வருடங்கள் கழிந்த நிலையில் இவர்கள் ஒன்பது பேரும் அப்பாவிகள் என்று அறிவிக்கப்பட்டு வழக்கிலிருந்து முற்றாக விடுதலை செய்யப்படும் தருவாயில் இருக்கிறார்கள்.
இங்கிருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் நாங்கள் 56 வயதான ஷம்சுத்தா ஸோஹாவைச் சந்தித்தோம். இவர் இவ்வழக்கில் முதன் முதலாக கைது செய்யப்பட்ட நூருல் ஹூடாவின் தாய். ஹூடா நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்; இதன் விளைவாகவே இன்று வரை அவர் தாயார் இரவில் தூங்க முடியாமல் தவிக்கிறார். ”நான் கதவின் அருகாகப் படுத்துக் கொள்கிறேன். இரவு முழுவதும் அதன் இடுக்குகளின் வழியே போலீசார் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டே இருப்பேன். எனது மகனை விசாரித்து விட்டு பத்து நிமிடங்களில் அனுப்பி வைப்பதாகச் சொல்லி இழுத்துச் சென்றனர். அவன் ஐந்தரை ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தான்” என்கிறார் அந்தத் தாய்.
மகன் தீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்டிருந்த நிலையில் யாரும் அவரது மகள்களைத் திருமணம் செய்து கொள்ள முன் வரவில்லை. “பயங்கரவாதியின் சகோதரியை யாரும் கலியாணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்று என் உறவினர்களிடம் பலரும் சொல்லி விட்டனர்” கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரின் ஊடே சொல்கிறார். நூருலின் விடுதலைக்குப் பின் இப்போது ஒருவழியாக அவரது மகள்களுக்குத் திருமணமாகியுள்ளது.
ஷப்பீரின் பாட்டரி கடையில் ரூ 5,000 மாதச் சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தார் நூர். தற்போது தேசிய நெடுஞ்சாலை 3-ன் ஓரமாக ஒரு பழைய மளிகைக் கடையை நடத்தி வருகிறார். ”இந்தத் தொழிலைத் துவங்க ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி இருக்கிறேன். ஆனால், ஒரு மாதத்திற்கு 1,500 ரூபாய் தான் சம்பாதிக்க முடிகிறது” என்கிறார் நூர். இந்த தொகையைக் கொண்டு குடும்ப செலவுகளைச் சமாளிக்கவே தடுமாறும் நூரால் அவரது சொந்த சிகிச்சைக்கான செலவுகளைச் சமாளிக்கவே முடிவதில்லை. ”சிறையில் வாங்கிய அடிகளால் தலையில் இரத்தக் கட்டு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து இரத்தம் வழியும் போது யாரோ எனது தலையில் ஓட்டை போடுவதைப் போல் உணர்கிறேன்” என்கிறார் நூர்.
பாப்ரி போஸ்டர்களுக்காக கைது
மாலேகானின் உட்பகுதி ஒன்றில் நாங்கள் மௌலானா ஸாகித் அப்துல் மஜீத்தை சந்தித்தோம். முன்பொரு காலத்தில் மதகுருவாக இருந்த மஜீத், தற்போது விறகு வெட்டியாக காலம் தள்ளுகிறார். இதில் வருமானமாக அவருக்கு மாதம் 1,000 ரூபாய் கிடைக்கிறது. தார்பாலின் கூரை வேயப்பட்ட சிதிலமடைந்த வீட்டில் வசித்து வருகிறார் மஜீத். எட்டுமாத கர்ப்பிணியான அவரது மனைவி, நம் மனதைப் பிசையும் படியாக மிகவும் மெலிந்திருக்கிறார்.
விடுவிக்கப்பட்ட போது
நவம்பர் 2011-ல் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட போது. (படம் : நன்றி தி ஹிந்து)
மௌலானா ஸாகித் 1998-ம் ஆண்டு முதன் முதலாக போலீசு கண்காணிப்பின் கீழ் வந்துள்ளார். ”பாபரி மஸ்ஜித் (இடிப்பைக் கண்டித்து) போஸ்டர் ஒட்டியதாக என்மீது வழக்குப் பதியப்பட்டது. அதன் பின் என்னை சந்தேகத்துரியவனாக கருதிய போலீசு பல முறை முன்னெச்சரிக்கையாக கைது செய்துள்ளது” என்று சொல்லும் மஜீத்தின் வாழ்க்கை அவரது 2006-ம் ஆண்டு கைதுக்குப் பின் முற்றிலும் மாறிப் போனது. ”எனது தந்தை என்னை தலை முழுகி விட்டார். 2006 அவுரங்காபாத் ஆயுத வழக்கில் எனது சகோதரன் கைது செய்யப்படுவதற்கு என்னை பழி சொல்கிறார்” என்றார் மஜீத்.
வினோதம் என்னவென்றால் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் புனைந்த வழக்கு மொத்தமும் போலீசு ஆள்காட்டி அப்ரார் அஹ்மத் எனும் ஒரே நபரின் ஒப்புதல் வாக்குமூலத்தையே அடிப்படையாக கொண்டிருந்தது. அவர் தான் கைது செய்யப்பட்ட ஒன்பது நபர்களையும் இவ்வழக்கில் சிக்க வைத்தார். கடைசியில் பயங்கரவாத தடுப்புப் போலீஸ் அப்ரார் அஹ்மத்தையும் கைது செய்தது. அவர் தனது ஒப்புதல் வாக்குமூலத்தை 2009-ல் மாற்றிக் கொண்டார். எனினும், பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரும் சி.பி.ஐயும் அதைப் புறக்கணித்தனர்.
ஆனால் 2011-ல் அசீமானந்தா இந்துத்துவ இயக்கங்களுக்கு மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதை உறுதி செய்த பின் வழக்கு தேசிய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் பின்னரே ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் பிறிதிடமிருப்பு (அலிபி) கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகிறது. மாலேகானில் வெடித்த குண்டுகளில் ஒன்றை வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட மௌலானா ஸாகித், அந்தக் குறிப்பிட்ட நாளில் தான் அந்த ஊரிலேயே இல்லை என்கிறார். “சம்பவம் நடந்த அன்று நான் யாவாட்மல் நகரில் இருந்ததாக இருபதுக்கும் மேற்பட்டவர்கள் சாட்சியமளித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக தேசிய புலனாய்வுத் துறை அதை நம்பியது” என்கிறார்.
அனேகமாக இவ்வழக்கை விசாரித்து வரும் மும்பை செஷன்ஸ் கோர்ட் அக்டோபர் 19-ம் தேதியன்று இவர்களை வழக்கிலிருந்து முற்றாக விடுவிக்கும் மனு மீதான தீர்ப்பை அளிக்கலாம்.
வெறும் சம்பிரதாயமாக கருதப்படும் இந்த விடுதலையும் கூட இந்துத்துவ இயக்கங்களால் எதிர்க்கப்படலாம். அவ்வாறு நடந்தால் இவர்களின் விடுதலை மேலும் தாமதமாகக் கூடும். அது வரை ஷப்பீர் மாஸியுல்லாவும் பிறரும் காத்திருப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.
நன்றி : ராஷ்மி ராஜ்புட்  – The Hinduதமிழாக்கம் : தமிழரசன்

வியாழன், அக்டோபர் 03, 2013

ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை


ராஞ்சி, பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் முதல்–மந்திரியாக இருந்தபோது ரூ.950 கோடிக்கு கால்நடை தீவன ஊழல் நடந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. 53 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. லாலுபிரசாத் மீது மட்டும் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த 17 ஆண்டுகளாக இந்த மாட்டுத் தீவன ஊழல் வழக்கு விசாரணை நடந்தது. கடந்த 30–ந்தேதி ராஞ்சி சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு இந்த வழக்கில் தீர்ப்பு கூறியது. முன்னாள் முதல்–மந்திரிகள் லாலுபிரசாத் யாதவ், ஜெகந்நாத் மிஸ்ரா, ஜெகதீஸ் சர்மா எம்.பி. உள்பட 42 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து லாலுபிரசாத்தும் மற்றவர்களும் ராஞ்சி அருகில் உள்ள விர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகள் 42 பேருக்கும் எத்தனை ஆண்டு தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பு 3–ந்தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு கருதி காணொளி காட்சி எனும் வீடியோ கான்பரன்சிங் மூலம் தீர்ப்பு வெளியிடப்படுகிறது.

இதையொட்டி இன்று காலை வக்கீல்கள் வாதம் நடந்தது. முதலில் சி.பி.ஐ. வக்கீல் ஆஜராகி கூறியதாவது:–

குற்றம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊழல் மற்ற ஊழல்களுக்கு சிகரமாக உள்ளது. இதில் பல வி.ஐ.பி.க்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். எனவே லாலு பிரசாத்துக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு சி.பி.ஐ. தரப்பு வக்கீல் கோரினார்.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி பி.கே.சிங் தீர்ப்பை வெளியிட்டார்.

லாலு மீது ஊழல், கிரிமினல் சதி, மோசடி ஆகிய குற்றச்சாட்டுக்கள் உறுதிபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இதன் காரணமாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப அவரது எம்.பி. பதவி உடனடியாக பறிக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜகந்நாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

நடிகர் எஸ்.வி.சேகருக்கு கொலை மிரட்டல்: இந்து மகாசபா தலைவர் மீது புகார்



நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர், சென்னை பட்டினபாக்கம், கிழக்கு 5-வது தெருவில் வசிக்கிறார். இவருக்கு ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கற்களும் வீசி தாக்குதல் நடந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, இவர் பட்டினபாக்கம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், தனக்கு பெண்கள் சிலர் சுமார் 45 முறை போன் செய்து மிரட்டல் விடுத்து பேசினார்கள். தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். வீட்டை முற்றுகையிட்டு கற்கள் வீசி தாக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதோடு, உரிய போலீஸ் பாதுகாப்பும், எனது வீட்டுக்கு வழங்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார். இந்து மகாசபா தலைவர், கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவர்தான் முதலில், போனில் பேசி திட்டினார். அவரைத் தொடர்ந்துதான், பெண்கள் பலர் போனில் பேசி, மிரட்டினார்கள், என்று எஸ்.வி.சேகர், நிருபர்களிடம் பேசும் போது கூறினார்.

இது தொடர்பாக துணை கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில், பட்டினபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று எஸ்.வி.சேகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. அவரது வீடு உள்ள பகுதியில் போலீஸ் ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

புதன், அக்டோபர் 02, 2013

ஈரானை கண்டு தூக்கம் தொலைத்த இஸ்ரேல் பிரதமர்..


ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்: இஸ்ரேல் பிரதமர் கடும் தாக்கு

ஜெருசலேம், ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியுள்ளார். இனிக்க இனிக்க பேசிக்கொண்டு, சிரித்துக் கொண்டே கழுத்தை அறுக்கும் ஈரான் பிரதமரின் பேச்சில் அமெரிக்கா மயங்கி விடக்கூடாது. இந்த உண்மையை நான் கூறுவது இஸ்ரேலுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு உகந்ததாக கருதுகிறேன். 

மியான்மரில் மீண்டும் கலவரம்: 70 வீடுகளுக்கு தீவைப்பு, முஸ்லிம் பெண் படுகொலை


யன்கூன், மியான்மர் நாட்டில் ராக்கின் மாகாணத்தில் புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. அதை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் அங்கு அடிக்கடி கலவரங்கள் நடந்து வருகின்றன.