புதன், பிப்ரவரி 29, 2012
ஈரானின் அடுத்த எச்சரிக்கை. உலக வரை படத்திலிருந்து இஸ்ரேலை அழித்து விடுவோம்.
உலக வரை படத்திலிருந்து இஸ்ரேலை அழித்து விடுவோம், ஈரான் கடும் எச்சரிக்கை.எங்கள் நாட்டின் மீது போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போய்விடும்" என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் அணு உலைகள் மீது கட்டுப்பாடு விதிக்க அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டதால் ஈரான், அமெரிக்கா இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது
திறந்த மனதோடு ஜெயலலிதாவை சந்திக்கிறோம் - உதயகுமார்
திறந்த மனதோடு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளோம்'' என்று கூடங்குளம் அணுஉலை போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.
தனியார் செய்தி சேனலுக்கு அவர் இன்று அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய தமிழக நிபுணர் குழு அறிக்கை மக்களின் கருத்தை பிரதிபலிப்பதாக இருக்காது என்று உதயகுமார் கூறியுள்ளார்.மோடிக்கு ரத்தக்கறை படிந்த குர்தா பரிசு !
புதுடெல்லி:நரமோடியால் முன்னின்று நடத்தப்பட்ட குஜராத் கலவரம் நடைபெற்று தற்போது ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் அதனுடைய நினைவுதினம் இறைவணக்கங்கள், மெழுகுவத்தி ஏற்றுதல், கருத்தரங்கங்கள் மற்றும் மாநாடுகள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நினைவுபடுத்தப்பட்டு வருகிறது ஆனால் டெல்லியைச் சேர்ந்த பேஷன் டிசைனரான அசீமூர் ரஹ்மான்
சரத்பவாரை அடித்தவருக்கு கிடைத்தது தர்ம அடி !
மத்திய மந்திரி சரத்பவாரை அடித்தவர், மர்ம மனிதர்களால் கடத்திச்சென்று தாக்கப்பட்டார். மிரட்டல் காரணமாக தலைமறைவாக வாழ்கிறார். முன்னாள் தொலைபேசி துறை மந்திரி சுக்ராம் மற்றும் விவசாயத்துறை மந்திரி சரத்பவார் ஆகியோர் பொது இடத்தில் வைத்து தாக்கப்பட்டனர். இவர்கள் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, கடந்த நவம்பர் மாதம் ஹர்விந்தர்சிங் என்ற இளைஞர்
இஸ்ரேலிய சிறையில் பலஸ்தீனப் பெண் உண்ணாவிரதம் !
30 வயதான ஹனா ஷலபி 12 நாட்களாக சாப்பிடுவதற்கு மறுப்புத் தெரிவித்து வருகிறார். இஸ்ரேலிய சிறையில் தடுத்துவைக்கப்பட்டு உண்ணாவிரதம் இருக்கும் இரண்டாவது கைதி இவர் என அவரது சட்டத்தரணியும், பலஸ்தீன சிறைக் கைதிகளது அமைப்பும் தெரிவித்துள்ளமை கவனிக்கத்தக்கது ஹமாஸுடன் இஸ்ரேல் ஏற்படுத்திக் கொண்ட கைதிகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட பெண் ஒருவர், இஸ்ரேலினால் மீண்டும் இம்மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கெதிராக
10 வருடங்கள் ஆகியும் இரத்தக்கரையோடு இருக்கும் குஜராத் !
அஹமதாபாத் பாப்பு நகர் நிவாரண முகாமில் தங்கியிருக்கும் முஸ்லிம்கள் |
சென்னை: குஜராத் இனப்படுகொலை நடைபெற்று நேற்றோடு 10 வருடங்கள் கடந்து விட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குஜராத் கலவரத்தால் வீட்டை இழந்து, குடும்பத்தினரை இழந்து தவித்து வரும் அனைத்து குடும்பங்களுக்கும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
தங்களை மதச்சார்பற்ற கட்சிகள் என்று கூறிக்கொண்டு சிறுபான்மை மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த எந்த அரசாங்கமும் நரவேட்டை நாயகனான நரேந்திர மோடியிடம் இருந்து குஜராத் மக்களை இன்று வரை பாதுகாக்க இயலவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றாகும்.
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான் என்று
கூடங்குளம்: மன்மோகனுக்கு உதயகுமார் வக்கீல் நோட்டீஸ் !
கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் பற்றி குற்றச்சாட்டு தொடர்பாக தன் மீது குற்றம் சுமத்தியதாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு உதயகுமார் வக்கீல் நோட்டீசு விடுத்துள்ளார்.கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடத்தும் போராட்டம், வெளிநாட்டு பணத்தை வைத்து நடைபெறுவதாக அவதூறாகக் கூறியதாக குற்றம்சாட்டி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வக்கீல் நோட்டீசு
சிரியா ராணுவம் வெறிச்செயல்: ஒரே இடத்தில் 62 பிணங்கள் மீட்பு !
சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது. அவர் பதவி விலக கோரி ஹோம்ஸ் நகரில் பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். போராட்டத்தில் திரளும் மக்கள் மீது அதிபரின் தூண்டுதலால் ராணுவம் துப்பாக்கி, பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே இடத்தில் 62 பேர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் பேருந்து மீது துப்பாக்கிச்சூடு: 18 பயணிகள் பலி !
பெஷாவர்:வடக்கு பாகிஸ்தானில் பேருந்து மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 18 பயணிகள் பலியானார்கள். எட்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. கொஹிஸ்தான் மாவட்டத்தில் ஹர்பன் நளா கிராமத்தில் செவ்வாய்கிழமை காலை இந்த அக்கிரம சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேருந்து ராவல்பிண்டியில் இருந்து கில்ஜித்திக்கு செல்லும் வழியில் இச்சம்பவம்
குஜராத் குல்பர்கா சொசைட்டி விரைவில் நினைவுச் சின்னமாக !
அஹமதாபாத்:’ககன் சேதி’ எனும் சமூக நீதி மையம் அஹ்மதாபாத்தில் ஆர்.சி. தொழில்நுட்பக் கல்லூரியின் எதிரில் குஜராத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் இதுவரை நடந்துள்ள மோதல்கள் குறித்த அரங்கம்(conflictorium) ஒன்று துவங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இதற்கு தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவை அளித்த பார்சி
காஸ்ஸாவில் ஊடுருவும் இஸ்ரேலிய போர் விமானம்
காஸ்ஸா:கடந்த வாரம் மட்டும் மூன்று முறை இஸ்ரேல் போர் விமானம் காஸ்ஸாவில் ஊடுருவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று இஸ்ரேல் போர் விமானத்தின் மூலம் ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளால் தென் காஸ்ஸாவின் ரஃபா பகுதியில் உள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலை பயங்கர சேதம் அடைந்துள்ளது. இதேபோல் கடந்த வெள்ளிக் கிழமையன்றும் இஸ்ரேல்
ராணுவ தலைமை தளபதி இஸ்ரேல் செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு !
புதுடெல்லி:ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் இஸ்ரேல் செல்ல மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. மார்ச் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் செய்ய வி.கே.சிங் திட்டமிட்டிருந்தார் மேற்காசியாவில் நெருக்கடியான சூழல்கள் நிலவுவதை தொடர்ந்து வி.கே.சிங்கிற்கு அனுமதி மறுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம்
ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
ஓரினச் சேர்க்கை பழக்கம் ஒழுக்கக் கேடானது என்று கடந்த வாரம் மத்திய உள்துறை சார்பில் வக்கீல் தெரிவித்த நிலையில், ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக மத்திய சுகாதார துறை வக்கீல் உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தார். அரசு திடீர் பல்டி அடித்ததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்திய தண்டனை சட்டத்தின் 377வது பிரிவின் கீழ் ஓரினச் சேர்க்கை குற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்கும். இந்த நிலையில், ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்கும்படி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘ஒரே பாலினத்தை
இத்தாலி சொகுசு கப்பலில் தீ விபத்து 1050 பயணிகள் கதி என்ன?
தி கோஸ்டா அல்லீக்ரா” என்ற இத்தாலி சொகுசு கப்பல் இந்திய பெருங்கடலில் உள்ள மடாகாஸ்கர் என்ற தீவில் இருந்து செசெல்ஸ் தீவுக்கு புறப்பட்டு சென்றது. அதில் 1050 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 636 பேர் பயணிகள். 413 பேர் கப்பல் ஊழியர்கள். செசெல்ஸ் தீவு அருகே சென்றபோது கப்பலில் உள்ள ஜெனரேட்டர் அறையில் திடீரென தீப்பிடித்தது. எனவே கப்பலில் உள்ள மின் விளக்குகள், ஏர்கண்டிஷன், அவசர தேவைக்கு பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர்கள் என அனைத்து
சீன ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து 12 பேர் பலி !
சீனாவில் ரசாயன ஆலையில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 40 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஹிபி மாகாணத்தில் உள்ள ஹிபி கீப்பர் ரசாயன லிமிடெட் எனும் ஆலையில் இந்த விபத்து நடந்தது.
இந்த வெடிவிபத்தில் ஏற்பட்ட வெடிச் சத்தம் தொழிற்சாலைக்கு அருகே உள்ள மூன்று கிராமங்களுக்கு
செவ்வாய், பிப்ரவரி 28, 2012
கோத்ரா நினைவு தினத்தில் மோடியை புகழும் பாஜக !
புது டெல்லி : கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் பத்தாம் ஆண்டு நினைவு நாளான இன்று, குஜராத் முதல்வரும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற முஸ்லீம்களின் மீதான இனக்கலவரங்களைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்படுபவருமான நரேந்திர மோடியை வளர்ச்சியின் நாயகன் என்று பாஜக வானளாவ புகழ்ந்துள்ளது.
நரேந்திர மோடி வளர்ச்சி பாதையில் குஜராத்தை எடுத்து சென்றவர் என்றும் சர்வதேச அளவில்
திருவாரூரில் எஸ்டிபிஐ ரயில் மறியல் போராட்டம் !
திருவாரூர்:காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை தற்போது உள்ள மீட்டர் ரயில் பாதையை அகல ரயில்பாதையாக மாற்றக்கோரி எஸ்டிபிஐ சார்பில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நேற்று மதியம் 1.30 மணியளவில் திருவாரூர் ரயில்வே நிலையத்தில் நடைபெற்றது இப்போராட்டத்திற்கு எஸ்டிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக்
நாடு தழுவிய வேலைநிறுத்தம் துவங்கியது !
புதுடெல்லி:மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து தொழிலாளர் யூனியன்கள் நடத்தும் 24 மணிநேர நாடு தழுவிய வேலை நிறுத்தம் இன்று துவங்கியது.
11 தேசிய அளவிலான தொழிலாளர் யூனியன்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளன.சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், பி.எம்.எஸ் உள்ளிட்ட தொழிலாளர் யூனியன்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்த
சங்கரன்கோவில்: 'பவர் கட்' நேரமாக பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் !
நெல்லை: சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியக்குமார் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். நெல்லையில் மின்வெட்டு நேரம் அமலில் இருந்த நேரம் பார்த்து தனது வேட்புமனுவை திமுக வேட்பாளர் தாக்கல் செய்தது அனைவரையும் கவர்ந்தது. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை திமுக வேட்பாளர்
மீடியாக்கள் மீது கிங்ஃபிஷர் தலைவர் விஜய் மல்லையா கடும் தாக்கு !
கிங்பிஷர் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளப் பாக்கி வைத்துள்ளது என்னை தனிப்பட்ட முறையில் வேதனைப்பட வைத்துள்ளது. இதை சரி செய்யவும், நிதியாதாரங்களைத் திரட்டவும் ஏற்பாடு செய்து வருகிறேன். ஆனால் இந்த விவகாரத்தை மீடியாக்கள் அணுகும் முறை பொறுப்பற்றதாக உள்ளது என்று கிங்பிஷர் நிறுவன தலைவர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.
நாடு முழுவதும் நதிகளை இணைக்க அனுமதி வழங்கியது சுப்ரீம் கோர்ட் !
இந்தியாவில் வடமாநிலங்களில் வெள்ளப்பெருக்கு தென் மாநிலங்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்க நதிகளை தேசியமாக்கி ஒன்றாக இணைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. நிபுணர் குழுவும் இதுபற்றி ஆராய்ந்து நதிகள் இணைப்பு திட்டம் சாத்தியமே என்று அறிக்கை அளித்தது. இந்த திட்டத்தை நிறைவேற்ற பல ஆயிரம் கோடி செலவாகும் என்பதால் நதிகள் இணைப்பு திட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்தது. மத்திய அரசு இதில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறது. இதற்கிடையே நதிகள் இணைப்பு திட்டத்துக்கு அனுமதி வழங்க கோரியும், இது தொடர்பாக மத்திய அரசு கமிட்டி அமைக்க உத்தர விடக்கோரியும் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தைவான் நாட்டில் 6.1 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் !
தைவானின் தென் பகுதியில் நேற்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதை தொடர்ந்த பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். இதற்கிடையே 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக் கப்பட்டது. பிங்டங் மாகா ணத்தில் வுடாய் டவுன்ஷிப் பகுதியை மையமாக கொண்டு கடலுக்கு அடியில் 20 கி.மீட்டர் ஆழத்தில் இது உருவானது.
அமெரிக்காவின் 50 லட்சம் ரகசிய இமெயில்களை வெளியிட்டது விக்கிலீக்ஸ் !
சிறிது காலம் அமைதியாக இருந்த விக்கிலீக்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் ‘ஸ்டிராட்ஃபோர்’ உளவு நிறுவனத்தின் 50 லட்சம் ரகசிய இமெயில்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜூலியன் அசாஞ்ச் (40) நடத்திவரும் இணைய இதழ் ‘விக்கிலீக்ஸ்’. ஈராக் போர், ஆப்கன் போர் தொடர்பாக அமெரிக்க அரசு மிகமிக ரகசியமாக வைத்திருந்த
ரஷ்ய பிரதமர் புடினுக்கு எதிராக 34 ஆயிரம் பேர் மனித சங்கிலி போராட்டம் !
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின். அதிபராக 2 முறை இருந்தவர். தொடர்ச்சியாக ஒருவரே 3-வது முறை அதிபராக முடியாது என்பதால், பிரதமர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். மார்ச்சில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மக்கள் நலனுக்கு எதிராக புடின் செயல்படுவதாக கூறி தலைநகர் மாஸ்கோவில் நேற்று 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
குரான் எரிப்பு சம்பவத்திற்கு ஒபாமா மன்னிப்பு கேட்டது தவறு : நியூத் ஜிங்க்ரிச்ன் திமிர் பேச்சு
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா ராணுவத் தளத்தில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு, அதிபர் ஒபாமா மன்னிப்புக் கோரியிருக்கக் கூடாது என்று குடியரசு கட்சியின் மூத்தத் தலைவர் நியூத் ஜிங்க்ரிச் சாடியுள்ளார்.
திங்கள், பிப்ரவரி 27, 2012
இஸ்ரேலை ஜெயிச்சுட்டோம்ல.. ஈரானின் 'ஆஸ்கர்' பெருமிதம் !
டெக்ரான்: சர்வதேச திரைப்பட விருதான ஆஸ்கர் விருது சர்வதேச அரசியல் விவகாரங்களையும் எதிரொலித்திருப்பது ஆச்சரியப்பட வைக்கக் கூடிய ஒன்று! இன்று அறிவிக்கப்பட்ட சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது ஈரான் திரைப்படமான "தி செபரேஷன்". ஆஸ்கர் விருதைவிட ஈரானியர்களுக்கு இதில் அளவில்லா மகிழ்ச்சி புதைந்திருக்கிறது.. ஆம், ஈரானின் தி செப்பரேசன் படம்
முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு !
அங்காரா:இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு(ஈஸா நபி) முன்னறிவிப்புச் செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது. பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும் இந்த நூல் 12 ஆண்டுகளாக துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் பர்ணபாஸ்
ஈராக் இந்தியாவிடம் பாஸ்மதி அரிசி வாங்குவதை நிறுத்த வேண்டும் – அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள்
ஹூஸ்டன்/டெக்ஸாஸ்:அமெரிக்காவில் அதிகம் அரிசி விளையக்கூடிய மாகாணங்களைச் சேர்ந்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈராக் இந்தியாவிடம் பாஸ்மதி அரிசி வாங்குவதை நிறுத்திவிட்டு தங்கள் நாட்டில் விளையும் அரிசியை வாங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மேலும் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பிரதிநிதி ‘டெட் போ’ கூறும்போது அமெரிக்கா ஈராக்கை சர்வாதிகார ஆட்சியிலிருந்து விடுவிக்கவும்?!!! மற்றும் அந்நாட்டை புனர் நிர்மாணம் செய்யவும் பல பில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டின் அவதூறு: பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்
புதுடெல்லி:டெல்லி இஸ்ரேல் தூதரகத்தின் வாகனத்தில் குண்டுவெடித்த சம்பவத்தில் பாப்புலர் ஃப்ரண்டிற்கு தொடர்பிருப்பதாக நியூ சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வந்த அவதூறு செய்தி அடிப்படையற்றதும், கண்டித்தக்கதுமாகும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
எகிப்து:பாராளுமன்ற துணை சபைக்கான தேர்தலிலும் இஃவான்களுக்கு மகத்தான வெற்றி !
கெய்ரோ:எகிப்து பாராளுமன்ற கீழ் சபைக்கான தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டி பாராளுமன்ற துணைச் சபையான ஷூரா(ஆலோசனை) கவுன்சில் தேர்தலிலும் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. மேலும் இன்னொரு இஸ்லாமிய கட்சியான அந்நூர் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
சென்னைவாசிகளே, உங்க ஏரியாவில் எப்போது மின்வெட்டு என்று தெரியுமா?
சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் இன்று முதல் 2 மணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது. இன்று காலை 8 மணிக்கு முதல் மின்வெட்டு தொடங்கியது. மொத்தம் 5 ஷிப்ட்களாக, மாலை 6 மணி வரை மின்வெட்டு அடுத்தடுத்து அமல்படுத்தப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் எந்த நேரத்தில் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்பது குறித்த விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
வரி ஏய்ப்பிலும் பல ஆயிரம் கோடி பார்த்திருக்கும் 2ஜி நிறுவனங்கள் !
டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்ற நிறுவனங்களில் சில மோரிஷஸ் நாட்டு பதிவைப் பயன்படுத்தி பல ஆயிரம் கோடி வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. வோடஃபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய 11,000 கோடி வருமான வரி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ""வெளிநாடுகளில் நடந்த பரிமாற்றத்துக்கு இந்தியாவில் வரி செலுத்த வேண்டியதில்லை'' என்று
மின்வெட்டை கண்டித்து எஸ்.டி.பி.ஐ யினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்
சென்னை: சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் தென் சென்னை மாவட்டம் சார்பாக தமிழகம் முழுவதும் ஏற்படும் மின்வெட்டை கண்டித்து ஆர்பாட்டம் 16.02.12 அன்று மாலை 4 மணி அளவில் சைதாபேட்டை பனகல் மாளிகை அருகில் மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அஹமது அலி அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் அஹமது ரிபாய், மாவட்ட செயலாளர்கள் சாகுல் ஹமீது, அனீஸ் முஹம்மது மற்றும் தொகுதி
துணை முதல்வராக இருந்த போது ஊழல்: எடியூரப்பா-மகள் மீது மோசடி வழக்கு
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா சட்டவிரோத சுரங்க ஊழல், நிலமோசடி என அடுக்கடுக்கான ஊழல் புகார்களில் சிக்கிக் கொண்டு உள்ளார்.
லோக் ஆயுக்தா கோர்ட்டிலும், போலீசிலும் அவர் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது புதியதாக வீட்டு மனை ஒதுக்கீடு மோசடி புகார் எழுந்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த வக்கீல் பி.வினோத் என்பவர் எடியூரப்பா அவரது மகள் அருணாதேவி
லோக் ஆயுக்தா கோர்ட்டிலும், போலீசிலும் அவர் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது புதியதாக வீட்டு மனை ஒதுக்கீடு மோசடி புகார் எழுந்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த வக்கீல் பி.வினோத் என்பவர் எடியூரப்பா அவரது மகள் அருணாதேவி
அரசு பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் !
பள்ளிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்கப்படும். அவ்வாறு வழங்க முடியாத இடங்களில், பள்ளிகளே ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம். அதற்கு ஆகும் கூடுதல் செலவை அரசே ஈடுசெய்யும் என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் மின் உற்பத்தியை பெருக்க, முந்தைய தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்காததால், தமிழகம் தற்போது மின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.
உலகின் பணக்கார நாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் !
உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் கத்தார் முதலிடத்தை பிடித்துள்ளது.இது குறித்து சர்வே ஒன்றை அமெரிக்காவின் போர்பஸ் பத்திரிகை கருத்து கணிப்பு நடத்தியது. இதில் கத்தார்,துபாய், குவைத் உட்பட 15 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன.
இதில் 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு தனி நபரின் ஆண்டு வருமானம் சுமார் 88 ஆயிரம் அமெரிக்கக டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது. அதற்குஅடுத்த
BSNL -ன் மிகக் குறைந்த விலை டேப்லெட்: பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்யலாம் !
பிரபல டெலிகாம் நிறுவனமான BSNL மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை வெளியிட்டுள்ளது. BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் இணைந்து வெறும் Rs.3250 விலையில் இந்த மலிவு விலை கணினிகளை வெளியிட்டுள்ளது.
உலகிலேயே மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை ஆகாஷ் நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டது. சில பிரச்சினைகளால் இந்த கணினிகள் வருவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. ஆகவே ஆகாஷ் கணினிகளுக்கு முன்பதிவு செய்து காத்திருக்காமல் அதே விலை உள்ள புதிய T-PAD IS701R
சனி, பிப்ரவரி 25, 2012
எகிப்து:அதிபர் தேர்தலில் போட்டியிடும் இஸ்லாமிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்: கவலைக்கிடம் !
கெய்ரோ:ஆயுதம் ஏந்திய மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் எகிப்தின் இஸ்லாமிய கட்சி அதிபர் வேட்பாளர் டாக்டர் அப்துல் முனீம் அப்துல் ஃபத்தாஹிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கெய்ரோவில் தீவிரகண்காணிப்பு பிரிவில் அவருக்கு சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய மூளைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உதவியாளர்களும், போலீசாரும் கூறுகின்றனர்.
முனூஃபியாவில் பிரச்சாரம் முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த அப்துல் முனீமின் காரை தடுத்து நிறுத்திய மூன்று நபர்களை கொண்ட முகமூடி கும்பல் அவரது தலையில் பல தடவை தாக்கியுள்ளனர். பின்னர் காரில் ஏறி தப்பிவிட்டனர் என்று பிரச்சார குழுவில் இடம்பெற்றுள்ள அஹ்மத் உஸாமா கூறுகிறார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)