மேலும் அமெரிக்காவை சேர்ந்த 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈராக்கின் வர்த்தகத்துறை அமைச்சர் கைர் அல்லா பபக்கருக்கு மீண்டும் அமெரிக்க அரிசி வகைகளுக்கு மாற வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளனர்.
அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் ஈராக்கிற்கு அமெரிக்காவின் அரிசி விநியோகம் கடந்த 2010 மற்றும் 2011 ஆண்டிற்கு இடையில் 77% குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள ஈராக் வர்த்தகத்துறை; மக்கள் இந்திய பாஸ்மதி அரிசியை மிகவும் விரும்புவதால்தான் தாங்கள் இந்தியாவிடம் பாஸ்மதி அரிசி வாங்குவதாகவும் மேலும் இந்திய பாஸ்மதி அரிசி மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க விவசாயிகள் ஈராக் மக்கள் விரும்பும் அரிசியை உருவாக்க தவறிவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக