![traumatised_hryna_pnkj_271x181](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_tlF1KeKhAHI_vKZ1XlVTdWuOaZTRSD5PTOttRgbJQk_XHfe2Km_Vk0OKi_EwRawoTamNE7x6Gyrlf6ExPqBWgMfutPXLMo_ECC2FoIt2VKcw431dqlqNnQgb64eJYdmiP_x-Myi4nHgpgW9moLPJ_utzPlWqTodGLQwlt3zxNdt0SDQseq=s0-d)
சட்டீஷ்கர்:வீட்டுப் பாடங்களை செய்யவில்லை என்பதால் இருட்டறைக்குள் பல மணிநேரங்கள் அடைக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் சிகிட்சை பலனளிக்காமல் இறந்து போனான். ராஜ்குல் அரசு பள்ளிக்கூடத்தில் கே.ஜி மாணவனாக பயின்று வந்தான் பங்கஜ். வீட்டுப் பாடம் செய்யவில்லை என்பதால் ஆசிரியை பல மணிநேரங்கள் இருட்டறையில் தள்ளி
பூட்டினார். இதனால் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிட்சை பலனளிக்காமல் இறந்துவிட்டான். இச்சம்பவம் நடந்து ஒரு மாத காலம் கழிந்த பிறகும் ஆசிரியை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சிறுவனின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இச்சம்பவம் குறித்து போலீஸ் வழக்கு பதிவுச்செய்து விசாரணையை துவக்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக