இந்த நிலையில்தான் இன்னொரு வங்கியின் கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினான் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனும், முன்னாள் பொறியியல் மாணவனுமான வினோத்குமார்.
அந்த வீடியோ பதிவில் இருந்த வினோத்குமாரின் படத்தை பிரிண்ட் போட்ட போலீஸார் நேற்றுதான் பத்திரிக்கையாளர்கள் மூலம் மக்கள் பார்வைக்கு விட்டனர். மேலும், வினோத்குமாரின் படத்தை பிளக்ஸ் போர்டு மற்றும் டிஜிட்டல் பேனர்கள் மூலம் பெரிதாக பிரசுரித்து அதை சென்னையில் உள்ள வங்கிகள் முன்பு வைத்து பொதுமக்களிடமிருந்து தகவலைப் பெறவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக கிட்டத்தட்ட ஆயிரம் டிஜிட்டல் பேனர்களுக்கு ஆர்டரும் கொடுத்திருந்தனராம். மேலும் வங்கிகள் முன்பு வைக்க அனுமதியும் பெறப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்குள்ளாகவே வினோத்குமாரும், அவனது கும்பலைச் சேர்ந்தவர்களும் போலீஸாரிடம் சிக்கி கொல்லப்பட்டு விட்டனர்.
ஒருவேளை டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்ட முதல் கொள்ளைக் கூட்டத் தலைவன் என்ற பெயர் வினோத்குமாருக்குக் கிடைத்திருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக