சனி, ஆகஸ்ட் 30, 2014
வியாழன், ஆகஸ்ட் 28, 2014
காஸாவில் போர் நிறுத்தம்! – ஃபலஸ்தீன் காஸா போராளிகளுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி!
50 தினங்கள் நீண்ட இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களுக்கு ஒய்வு.எகிப்தின் மத்தியஸ்தத்தில் ஹமாஸும், இஸ்ரேலும் நீண்டகால போர் நிறுத்தம் உடன்படிக்கையைச் செய்துகொண்டன.காஸாவுக்கு எதிராக 2006-ஆம்
ஆண்டு இஸ்ரேல் அறிவித்த தடையை நீக்கவேண்டும் என்ற ஹமாஸின் முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் அங்கீகரித்ததை தொடர்ந்து ஒப்பந்தம் அமலுக்குவந்துள்ளது.
ஆண்டு இஸ்ரேல் அறிவித்த தடையை நீக்கவேண்டும் என்ற ஹமாஸின் முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் அங்கீகரித்ததை தொடர்ந்து ஒப்பந்தம் அமலுக்குவந்துள்ளது.
புதன், ஆகஸ்ட் 27, 2014
செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014
செவ்வாய், ஆகஸ்ட் 19, 2014
செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014
பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு இனக்கலவரங்கள் அதிகரிப்பு: சோனியா
மத்தியில் பா.ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு இனக்கலவரம் கடுமையாக அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
திங்கள், ஆகஸ்ட் 11, 2014
பிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி!
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘Road to Freedom' என்ற ஆவணப்படத்தில் வீரசவார்க்காருக்கு முக்கிய பங்கினை அளிக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.சவார்க்கார் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை இதில் உட்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
வெள்ளி, ஆகஸ்ட் 08, 2014
புதன், ஆகஸ்ட் 06, 2014
ஐ.எஸ்.ஐ.எஸ் டீ சர்ட் விவகாரம்! இராமநாதபுரத்தில் இளைஞர்கள் கைது! கண்டிக்கத்தக்கது : எஸ்.டி.பி.ஐ
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கடந்த ஈகை பெருநாள் தினத்தன்று இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சில இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் என்று அச்சிடப்பட்ட டீ-சர்ட்டுகளை அணிந்து புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தனர். இந்த புகைப்படமானது சர்ச்சைக்குரியதாக மாற்றப்பட்டு அதுதொடர்பாக சில இளைஞர்கள் உளவு மற்றும் காவல்துறையால் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது தற்போது ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய பொம்மை அரசுக்கு எதிராக போராடி வரும் போராளிகள் என கூறப்படுகிறது. எனினும் அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்கள் எதுவும் தெரியவில்லை. சமீபத்தில் அவர்கள் கைப்பற்றிய பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்த இந்தியாவை சேர்ந்த செவிலியர்களை பத்திரமாக தாய் நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதுமுதல் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பற்றிய செய்திகள் பிரபலமடைந்தன.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பின்புலம் பற்றி இதுவரை அறியப்படாத நிலையில் அவர்களின் சமீபத்திய பிரபலத்தை வைத்து தொண்டியை சேர்ந்த சில இளைஞர்கள் அந்த அமைப்பின் பெயர் பதிந்த டீ-சர்ட் அணிந்து புகைப்படம் எடுத்து முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளனர். அமைப்பின் பின்புலம் பற்றி தெரியாமல் அவர்கள் இவ்வாறு செய்தது தவறு, அங்கீகரிக்க கூடிய செயல் அல்ல. இருப்பினும் அவர்கள் எந்த உள்நோக்கமும் இன்றி, வெறும் வேடிக்கைக்காக உற்சாக மிகுதியில் அவ்வாறு அவர்கள் செய்துள்ளனர். இதனை முதலில் அவர்களை அழைத்து விசாரித்த காவல்துறை அதிகாரியே தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லையெனில் அவர்கள் அந்த புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பதிவு செய்திருக்க மாட்டார்கள்.
மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் இந்தியா உட்பட உலகில் எங்கும் தடைசெய்யப்பட்ட அமைப்பு அல்ல. ஆகவே தடை செய்யப்படாத ஒரு அமைப்பின் பெயரை பதிந்த ஆடைகளை அணிவது எந்த வகையிலும் குற்றமாகாது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பல அமைப்புகளின் தலைவர்களின் படங்கள், கொடிகள் போன்றவற்றை பலரும் பயன்படுத்தும் நிலையில், தடை செய்யப்படாத ஒரு அமைப்பின் பெயர் பதிந்த ஆடையை, எந்த உள்நோக்கமும் இன்றி வேடிக்கைக்காக உற்சாக மிகுதியில் அணிந்த இளைஞர்களை, முஸ்லிம்கள் என்பதற்காக அவர்களை பெரும் தீவிரவாதிகள் போன்று, சித்தரித்து கைது செய்து விசாரணை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக முதலில் அவர்கள் அழைக்கப்பட்டு காவல்துறையால் எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர். இந்த நடைமுறை வரவேற்கத்தக்கது. ஆனால் மீண்டும் அவர்கள் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணை செய்திருப்பது என்பது கண்டனத்திற்குரியது. ஆகவே தமிழக அரசு உடனடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ம.பி உயர்நீதிமன்ற நீதிபதி மீது பெண் நீதிபதி பாலியல் புகார்!
மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக மாவட்டக் கூடுதல் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.
ஜித்பகதூர் விவகாரத்தில் பொய் சொன்ன மோடி பேஸ்புக் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது
பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஞாயிறு, திங்கள் இரு நாட்கள் நேபாளம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்த பயணத்தின் போது நரேந்திரமோடி தன்னுடன் 26 வயது ஜித்பகதூர் என்ற இளைஞரையும் அழைத்து சென்றார்.
ஜித்பக்தூரின் சொந்தநாடு நேபாளம் ஆகும். 1998–ல் வேலை தேடி ராஜஸ்தான் வந்த அவர் வழிதவறி குஜராத் சென்று விட்டார். திக்கு தெரியாமல் தவித்த அவருக்கு அப்போது 10 வயது.அவர் ஏதேட்சையாக நரேந்திரமோடியை சந்திக்க நேர்ந்தது. பகதூர் மீது இரக்கப்பட்ட மோடி அவரை தன் கண்காணிப்பில் வளர்த்து வந்தார்.
இதைத் தொடர்ந்து ஜித்பகதூரை பிரதமர் மோடி தன்னுடன் நேபாளத்துக்கு அழைத்து சென்று அவர் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.பிரதமர் நரேந்திரமோடியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் மோடியால் ஒப்படைக்கப்பட்ட ஜித்பகதூர், ஏற்கனவே கடந்த 2012–ம் ஆண்டு தன் குடும்பத்தினருடன் இணைந்து விட்டவர் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
2012–ம் ஆண்டு தன் குடும்பத்தினரை சந்தித்ததை ஜித்பகதூர் தன் ‘‘பேஸ்புக்’’ இணைய தள புத்தகத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதில் அவர் ‘‘ஹாய் பிரண்ட்ஸ், இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். ஏனெனில் நான் இன்று என் வீட்டில் இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள ஜித்பகதூர், 2012 ஆண்டு தன் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட படத்தையும் அதில் இணைத்துள்ளார். இதன் முலம் ஜித்பகதூர் ஏற்கனவே நேபாளத்தில் உள்ள தன் குடும்பத்தினருடன் இணைந்து விட்டவர் என்பது உறுதியாகியுள்ளது.
ஆனால் 10 வயதில் ஆமதாபாத் வந்த ஜித்பகதூர் 16 வருடங்கள் கழித்து அவரது 26–வது வயதில்தான் நேபாளம் திரும்பி இருப்பதாக கூறப்பட்டது. மோடியும் தன் டூவிட்டர் பக்கத்தில் இது பற்றி பெருமையாக கூறி இருந்தார்.
இந்த தகவல் பொய் என்று பேஸ்புக் பக்கம் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்த விவகாரத்தில் பொய் சொன்னது பிரதமர் மோடி என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
திங்கள், ஆகஸ்ட் 04, 2014
காஸாவில் பலியான குழந்தைகளின் பிரேதங்களை ஐஸ்கிரீம் ப்ரீஸரில் பாதுகாக்கும் அவலம்
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களினால் பலியான பிஞ்சு குழந்தைகளின் பிரேதங்கள் அழுகாமல் இருக்க, போதுமான குளிர்சாதனப் பெட்டி வசதி இல்லாததால் அக்குழந்தைகளின் பிரேதங்களை ஐஸ்கிரீம் பெட்டியில் வைத்து பாதுகாக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலின் விமானப் படைகளின் தாக்குதல்களால் காஸாவில் ரஃபா நகரில் உள்ள நஜ்ஜார் மருத்துவமனை தரைமட்டமாகியுள்ளது. இதனிடையே, தாக்குதல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் பலியானவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வழியின்றி தவிக்கும் மக்கள், குழந்தைகளின் உடல்கள் அழுகாமல் இருப்பதைத் தடுக்க பெரும் பாடுப்பட்டு வரும் நிலை அங்கிருக்கும் மனித ஆர்வலர்களின் நெஞ்சை உருக வைத்துள்ளது.
சனி, ஆகஸ்ட் 02, 2014
வெள்ளி, ஆகஸ்ட் 01, 2014
MH17: உறவினர் அற்ற சடலங்களை அரசாங்கமே நல்லடக்கம் செய்யும்
கடந்த ஜூலை 17-ஆம் தேதி உக்ரைன் எல்லையில் சுட்டுவீழ்த்தப்பட்ட MH17 விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் சடலங்களைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் அவர்களின் சடலங்களை அரசாங்கமே அடக்கம் செய்யும் என மகளிர் குடும்பம், மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரொஹானி அப்துல் காரிம் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)