வியாழன், செப்டம்பர் 29, 2011

இன்று[செப்-30] உலக இதய நாள் [World Heart Day] : ஐந்தில் ஒருவர் மாரடைப்பால் மரணிக்கிறார்

world-heart-day-2011
துபாய்:இன்று உலக இதய நாள்(World Heart Day), ஐந்தில் ஒருவர் மாரடைப்பால் மரணிப்பதாக அமீரக ஆரோக்கியத் துறை அறிவித்துள்ளது.
19% மக்கள் மட்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உடற்பயிற்சி செய்வதாகவும் அது கூறியுள்ளது.
இன்று உலகில் மாரடைப்பே ஆட்கொல்லி நோயாக மனிதர்களை பயமுறுத்தி வருகிறது,  அதிகமான மக்கள் இருதய  சம்பந்தமான நோய்களிலாயே மரணிப்பதாக உலக சுகாதார துறையும் அறிவித்துள்ளது.
உயர் இரத்த அழுத்தம், உடலில் உள்ள சிதையா கொழுப்பு, ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள்,போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால்தான் இருதய சம்பந்தமான நோய்கள் தாக்குவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றது.
மக்களிடையே மாரடைப்பு நோய்களை பற்றிய விழிப்புணர்வு வளர வேண்டும் என்றும், தினம்தோறும்  தவறாமல்  உடற்பயிற்சி செய்து உடலில் உள்ள கொழுப்புகளை எரித்து ஆரோக்கியமாக  இருந்தால் மாரடைப்பு நோய்களை தவிர்க்கலாம் என்றும் உலக சுகாதார துறை அறிவித்துள்ளது.
உலக இதய நோயாளிகளில் 60 சதவீதம் பேர் இந்தியர்களாக இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சிக்கு உரிய விஷயமாக இருக்கிறது.
அமெரிக்க ஐரோப்பியர்களைவிட 4 மடங்கும் சீனர்களைவிட 10 மடங்கும் ஜப்பானியர்களைவிட 20 மடங்கும் இந்தியர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்கின்றனர் இதயநோய் நிபுணர்கள்.
 25 முதல் 30 வயதுள்ள இளைஞர்களை மாரடைப்பு தாக்குவது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்கின்றனர்.
இன்றைக்கு பதினைந்து வயது பிள்ளைகளுக்கு கூட மாரடைப்பு வருகிறது. அதற்கு காரணம் லைஃப் ஸ்டைல் மாறுதல் மற்றும் நம் ஃபாஸ்ட் புட் உணவு பழக்கம்தான்..!
இந்த இதய தினத்தில் நம் இதயத்தை காப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, முக்கியமாக இன்னொன்றையும் எடுக்க வேண்டும்.  இதற்கு 3 வழிகள் உள்ளன. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, பணியின் போது மன இறுக்கத்தை தவிர்த்தல்
போன்ற மூன்று விஷயங்களும் இருதய நோய் வராமல் பார்த்துக் கொள்கின்றன.
ஒரு காலகட்டத்தில் பின்லாந்து மற்றும் மொரீஷியஸ் நாட்டில் அதிகமாக இருதய நோய் உள்ளவர்கள் இருந்தனர். அந்த நாடுகள் முறையே பால் மற்றும் பாம்ஆயில் உபயோகத்தை மிகவும் குறைக்க நடவடிக்கை எடுத்ததன் விளைவாக இருதய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
இந்தியாவில் பல எண்ணெய்களை உபயோகிக்கிறோம். கொழுப்பு சத்து குறைவாக உள்ள எண்ணெயைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பத்தினரும் முடிவு செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி, திட்டமிட்ட அன்றாட வாழ்க்கை இல்லாமல் சோம்பேறித்தனமாக வாழ்ந்தால் இருதய நோய் நிச்சயம் வரும்.
சரியான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் இருதயம் 100 வருடங்களுக்கு மேலாக செயல்படும். நாம் எந்த உணவையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதை கல்லீரல் கொழுப்பாக (கொலஸ்ட்ரால்) மாற்றுகிறது. புகைபிடித்தல், அதிகமாக மது அருந்துதல், அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல், உடல் உழைப்பு இல்லாமை, டென்சன் ஆகியவற்றால் இருதயம் பாதிக்கப்படுகிறது. இதனால் இப்போது 19 வயது வாலிபருக்கு கூட மாரடைப்பு ஏற்படுகிறது.
ஆண்டுக்கு 100 மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். தினமும் இரண்டு டம்ளருக்கு மேல் தேநீர் அதிகமாக குடிக்காதீர்கள். சாப்பாட்டில் கட்டுப்பாட்டை எப்போதும் பின்பற்றுங்கள். அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். காலையில் நன்றாக சாப்பிட வேண்டும். மதியம் காலையில் சாப்பிட்டதைவிட சற்று குறைவாகவும் இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுங்கள். இரவில் குறைந்தபட்சம் 5 மணிநேரமாவது தூங்கவேண்டும். இப்படி இருந்தால் இருதயத்தை நாம் பாதுகாக்க முடியும்.

ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

நேபாள் விமான விபத்து 19 பேர் பலி

காத்மாண்டு: காத்மாண்டுவிலிருந்து கிளம்பிய புத்தா ஏர் நிறுவன விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கி விழுந்தது. இதில் 10 இந்தியர்கள் உள்பட விமானத்தில் இருந்த 19 பேரும் பலியானார்கள். இறந்தவர்களில் 8 பேர் திருச்சியைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து நேபாளத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு வாகன வசதிகள் உள்ளன. அதில் ஒன்று விமான பயணம். சிறிய ரக விமானம் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை சுற்றிக் காட்டுவார்கள். சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது இது.

புத்தா ஏர் என்ற தனியார் விமானம் இதுபோல சுற்றுலாப் பயணிகளுக்கு எவரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சுற்றிக் காட்டுவதற்காகக் கிளம்பியது. அந்த சிறிய ரக விமானத்தில் விமானிகள் உள்ளிட்ட ஊழியர்கள் மற்றும் 16 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். பயணிகளில் 12 பேர் இந்தியர்கள், இவர்களில் 8 பேர் தமிழர்கள், திருச்சியைச் சேர்ந்தவர்கள். மற்ற 6 பேர் ஐரோப்பியர்கள்.

எவரெஸ்ட் உள்ளிட் பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் விமானம் காத்மாண்டுத் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது காத்மாண்டுப் பள்ளத்தாக்கில் உள்ள திடீரென பனி மூட்டத்தில் சிக்கி விமானம் விபத்துக்குள்ளானது.

இதில் முதலில் 18 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் படுகாயத்துடன் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது 19 பேரும் பலியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 10 பேர் இந்தியர்கள். அதில் 8 பேர் திருச்சியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்களது உடல்களை அடையாளம் காணும் பணியில் இந்தியத் தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பிசகுநாராயண் என்ற கிராமத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கிராமம் உள்ளது.

மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இருப்பினும் வானிலை மோசமாக இருப்பதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து அதை நேரில் பார்த்த ஹரிபோல் போடல் என்பவர் கூறுகையில், கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மேற் கூரை மீது விமானம் விழுந்தது. பின்னர் அது உடைந்து விழுந்தது என்றார்.

ஃபலஸ்தீனத்தை ஐ.நா அங்கீகரிக்க இந்தியா தெளிவான ஆதரவு

Flag-Pins-India-Palestine
ஐ.நா.பொதுச்சபை:அமெரிக்கா ஃபலஸ்தீனத்தின் ஐ.நா சபை உறுப்பினருக்கான கோரிக்கையை நிராகரித்து வரும் நிலையில் இந்தியா ஃபலஸ்தீன உறுப்பினர் கோரிக்கைக்கு தன்னுடைய முழுமையான பகிரங்க ஆதரவை தெரிவித்துள்ளது.
கடந்த வியாழனன்று ஐ.நாவிற்கு வருகை புரிந்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 19  ஆம் தேதி ஃபலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸிற்கு அனுப்பிய கடிதத்தில் ஃபலஸ்தீனத்தின் ஐ.நா சபை உறுப்பினர் கோரிக்கைக்கு தனது முழு ஆதரவையும் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
ஐ.நா வின் இந்திய பிரதிநிதியான ஹர்தீப் சிங் தெரிவிக்கையில்  அப்பாஸ் ஐநாவின் பொதுச் சபையில் கடந்த வெள்ளியன்று தனது கோரிக்கையை வைத்ததின் மூலம் ஃபலஸ்தீன அதிகாரச் சபை தனது பொறுப்பை உணர்ந்து கொண்டுள்ளது என்று அறிகுறிகள் தெரிவதாக தாம் ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கி மூனிடம் தெரிவிக்க உள்ளதாக கூறினார்.
மேலும் அப்பாஸ் ஐ.நா வின் பொது சபையையோ அல்லது ஐ.நா பாதுகாப்பு சபையையோ அணுகாத அளவுக்கு முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இஸ்ரேல் ஃபலஸ்தீன நேரடி பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இப்பிரச்சனை ஐ.நா வில் விவாதிக்கப் படும்பொழுது அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த வேண்டாம் என்று நினைப்பதாகவும். வேறு வழியின்றி போனால் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை ஃபலஸ்தீனத்திற்கு எதிராக பயன்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் கடந்த 1988  ஆம் ஆண்டு முதல் ஃபலஸ்தீனத்தை ஆதரிக்கும் முதல் அரபு அல்லாத ஒரே நாடு இந்தியா என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் ஹர்தீப் சிங் கூறியதாவது; பிரதமர் மன்மோகன் சிங் தனது கடிதத்தில் எந்த நிலையிலும் இந்தியா ஃபலஸ்தீன தேசத்தை ஆதரிக்கும் என்று கூறியுள்ளார். வீட்டோ அதிகாரம் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டாலும் இந்தியா ஃபலஸ்தீனத்தை தொடர்ந்து ஆதரிக்குமா என்று கேட்கப்பட்டதற்கு ஃபலஸ்தீன பிரச்சனையை பொறுத்த வரை இந்தியா எந்த நிர்பந்தத்திற்கும் ஆளாகாது என்றும் நூறு சதவீதம் இந்தியா ஐ.நாவில் ஃபலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்கு அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, செப்டம்பர் 23, 2011


நியூயார்க் : ஐ.நா சபையின் கூட்டத்தில் துருக்கி பிரதமர் பேசுவதற்கு முன் பேசிய ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் வழக்கம் போல் அமெரிக்காவை கடுமையாக சாடினார். உலக பொருளாதார சிக்கல் உள்ளிட்ட உலகம் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பாவே காரணம் என்றும் சாடினார்.
மேலும் அஹ்மது நிஜாத் கூறுகையில் கடந்த மே மாதம் ஓசாமா பின் லேடனை கொலை செய்த அமெரிக்க ராணுவத்தினர் கடலில் அவர் உடலை வீசியெறிந்தது உண்மையில் செப்டம்பர் 11 சதிகாரர்களை மறைக்கும் அமெரிக்க முயற்சியே என்றும் பரபரப்பாய் குற்றம் சாட்டினார்.

அஹ்மது நிஜாத்தின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா ஐ.நா சபை கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தது. மேலும் தன் நாட்டு மக்களின் ஜீவாதாரத்தை பற்றி கவலைப்படாமல் எப்போதும் அமெரிக்க எதிர்ப்புணர்விலேயே காலம் தள்ளுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

அமைதியை குழி தோண்டி புதைக்கும் இஸ்ரேல் : ஐ.நா சபையில் துருக்கி பிரதமர் ஆவேசம்


நியூயார்க் : தனி சுதந்திர நாடாக பலஸ்தீனத்தை அறிவிக்க கோரி பலஸ்தீன பிரதமர் ஐ.நா சபையில் இன்று மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் ஐ.நா அவையில் பேசிய துருக்கி பிரதமர் எர்டோகன் மத்திய கிழக்கில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் அமைதியை குழி தோண்டி புதைக்கும் இஸ்ரேல் தான் என்று ஐ.நா சபை கூட்டத்தில் துருக்கி பிரதமர் எர்டோகன் ஆவேசமாக கூறினார்.

இஸ்ரேல் – பலஸ்தீன் பிரச்னையை தீர்ப்பதில் உலக நாடுகளுக்கு அக்கறை இருக்குமானால் இஸ்ரேலின் போக்கை இனியும் கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது என்று கூறிய எர்டோகன் இப்பிரச்னையை தீர்க்க எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் இஸ்ரேல் முறியடிப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஆக்கிரமிப்பு பகுதிகளில் அராஜகம் செய்வது முதல் அணு ஆயுதம் வரை உலகின் விருப்பங்களுக்கு மாற்றமாக இஸ்ரேல் நடப்பதாகவும் குறை கூறினார்.
ஐ.நா சபையின் பல தீர்மானங்களை இஸ்ரேல் மதிக்காமல் மீறியுள்ளதாக குற்றம் சாட்டிய எர்டோகன் தாம் ஒரு பெட்டி தக்காளிகளை பலஸ்தீனத்துக்கு அனுப்ப வேண்டுமென்றால் கூட இஸ்ரேலிடம் ஒப்புதல் வாங்க வேண்டுமென்பது நிச்சயம் மனிதத்தன்மையாக இருக்க முடியாது என்றும் கூறினார்.   இயற்கை வாயுவை கண்டுபிடிக்க கூட்டு முயற்சிகள் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் – சைப்ரஸின் முயற்சிகள் ஆபத்தானவை என்றும் தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்போம் என்றும் மறைமுகமாக மிரட்டல் விடுத்தார்.

முஸ்லிம் என்பதற்காக பள்ளி மாணவனைத் தாக்கிய ஆஸி. இனவெறியர்கள்

Aussies attack Muslim school boyசிட்னி: தான் ஒரு முஸ்லிம் என்பதற்காக உடன் பயிலும் சக மாணவர்கள் 20 பேர் தன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டி தாக்கினர் என்று சிட்னி பள்ளி மாணவன் ஹமித் மாமோசாய் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள அஸ்கித் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பவர் ஹமித் மாமோசாய் (15). அவரை அதே பள்ளியில் படிக்கும் 20 மாணவர்கள் தாக்கியுள்ளனர்.

இது குறித்து அவர் கூறுகையில்,
20 பேர் என்னைத் தாக்கினர். அடி நன்றாக அடி. அவனுக்கு இது தேவை தான். ஏய், தீவிரவாதி எங்கிருந்து வந்தாயோ அங்கேயே சென்றுவிடு. அங்கு போய் எதையாவது வெடிக்கச் செய் என்று அந்த மாணவர்கள் கூறினார்கள் என்றார். 
இந்த தாக்குதலில் ஹமித் சுயநினைவை இழந்தார். உடனே சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பெரிய காயம் ஏதும் இல்லை.

கடந்த 2 ஆண்டுகளாகவே எனது சகோதரனை இனத்தைக் கூறி திட்டி வந்துள்ளனர். இதனால் அவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளான் என்று ஹமிதின் சகோதரி நாஜியா தெரிவித்தார்.

அவன் பள்ளியில் இது குறித்து புகார் கொடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. தலைமை ஆசிரியர் ஏன் இப்படி இருக்கிறார், அவர் ஏன் இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்த முயற்சிப்பதில்லை. இந்த தாக்குதல் எதற்காக நடந்தது என்பது மற்ற பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஹமிதின் தாய் ஹஸ்னா தெரிவித்தார்.

ஒரு மாணவன் 20 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருவதாகவும் கல்வித் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஹமித் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கவுன்சிலிங் கொடுக்க பள்ளி ஏற்பாடு செய்துள்ளது. அஸ்கித் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இன வெறி தாக்குதல்களை சகித்துக்கொள்ளாது. இதற்கு முன்னதாக மாணவர்களை இனத்தின் பெயரைக் கூறி திட்டியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போலீஸ் வழக்காகிவிட்டதால் இது குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

வியாழன், செப்டம்பர் 22, 2011

மோடியின் போராட்டம் நீதியின் போராட்டம் அல்ல, அது அநீதியின் போராட்டம் – சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய்

mallika-sarabhai
கோழிக்கோடு:அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்காக என்று கூறி உண்ணாவிரதம் இருந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் செயல் ஒரு அரசியல் நாடகம் என்று பிரபல நடன கலைஞரும் சமூக ஆர்வலருமான பத்மஸ்ரீ டாக்டர் மல்லிகா சாராபாய் கூறியுள்ளார்.
‘அது நீதியின் போராட்டம் அல்ல, அது  அநீதியின்  போராட்டம். சமாதானம் அமைதியை குறித்து இப்போது பேசுவதற்கு மோடிக்கு எவ்வித தகுதியுமில்லை.
திடிரென்று இதுக் குறித்து பேசவேண்டிய அவைசியம் என்ன? இந்திய அரசியலில் முன்னிலையில் நிற்பதற்குண்டான சுய விளமபரத்திற்காகத் தான் இந்நாடக அரங்கேற்றம்’ என்றார்.
’10௦ வருடங்களாக குஜராத்தில் மோடியின் சர்வாதிகார ஆட்சிதான் நடந்து வருகிறது. அங்கு முஸ்லிம்களும் தலித் மற்றும்  பழங்குடியினரும் தினம் தினம் பயந்து வாழ்ந்து கொண்டிரிக்கிறார்கள். அவர்களின் உயிர்களுக்கு எவ்வித உத்தரவாதிததவும் இல்லை. ‘குஜராத்தில் எங்கு அமைதியும் சமதானமும் இருக்கிறது?’ என அவர் ஆவேசத்துடன் வினவினார்?
‘அமைதிக்காக உண்ணாவிரதம் இருப்பதற்கு முன் முதலில் மதக் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்திருக்க வேண்டும். இந்தியாவில் அதிகமாக கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்படும் மாநிலங்களில் ஒன்றுதான் குஜராத். இரவு 10  மணிக்கு பின் பெண்கள் வெளியில் இறங்கி நடமாடமுடியாத மாநிலம்தான் குஜராத்.
நான் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் இருந்து பின்வாங்க எனது வழக்கறிஞருக்கு 10 லட்சம் லஞ்சம் கொடுத்த மோடி இப்போது ஊழலுக்கு எதிராக வாய்கிளிய பேசுகிறார்’ என்று அவர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

புதன், செப்டம்பர் 21, 2011

ஆப்கான் முன்னாள் அதிபர் புர்ஹானுத்தீன் ரப்பானி படுகொலை

256483 burhanuddin rabbani afghan afghanistan president peace councilPHOTOREUTERS 1316529738 764 640x480 Former Afghan president Burhanuddin Rabbani Killed in Suicide Attackமுன்னாள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி புர்ஹானுத்தீன் ரப்பானி நேற்று (20.09.2011) இரவு கொலை செய்யப்பட்டார். 

தற்கொலை குண்டுதாரியால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் அவருடைய மெய்க்காப்பாளர்கள் நால்வரும் கொல்லப்பட்டுள்ளனர். மற்றொரு உதவியாளர் படுகாயம் அடைந்துள்ளார். தனது தலைப்பாகையில் குண்டை மறைத்து வைத்திருந்த  நபர் ரப்பானியின் வீட்டுக்குள் நுழைந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.ஆப்கான் அரசாங்கம் தலிபான் அமைப்பினருடன் பேசுவதற்காக அமைத்துள்ள அமைதிக்குழுவின் தலைவராக ரப்பானி செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கர்ஷாய் தனது அமெரிக்கப்பயணத்தை பாதியி்ல் முடித்துவிட்டு நாடு திரும்புகிறார். அமைதிக்கான பாதையிலிருந்து இவ்வாறான தீவிரவாத தாக்குதல்களினால் ஆப்கான் மாறிவிடாது என அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசு தனது நண்பராக செயல்பட்டு வந்த ரப்பானி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த படுகொலையைக் கண்டித்துள்ளார். ரப்பானி, தலிபான் ஆட்சி அமைப்பதற்கு முன்பாக ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்தார்.

செவ்வாய், செப்டம்பர் 20, 2011

ஜப்பானில் கடும் சூறாவளிப்புயல்! 13 லட்சம் பேர் வெளியேற்றம்

டோக்கியோ: ஜப்பானில் உள்ள தெற்கு தீவான தேனிகாஷிமாவில் இன்று பயங்கர சூறாவளிப்புயல் உருவாகியுள்ளதாகவும் மேலும் அது நாளை மதியம் டோக்கியோவை தாக்கும் என்று ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பெய்து வரும் கன மழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் 9 வயது சிறுவனும் 84 வயது முதியவர் ஒருவரும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டனர் என்று கிஃபூ காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட சூறாவளியினால் பாதிப்பினால் சுமார் 90 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூறாவளிப்புயல் அறிவிப்பினை தொடர்ந்து பதிமூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மத்திய ஜப்பானில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி ஜப்பானிய அரசு உத்தரவிட்டுள்ளது நகோவா பகுதியிதிலிருந்து மட்டும் சுமார் 80,000 பேர் உடனடியாக வெளியேற்றப்படுகின்றனர்

அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரத்தில் உறுதியாக இருப்பது என்.டி.எஃப்: விக்கிலீக்ஸ் தகவல்

imagesCA5BJNCV
கோழிக்கோடு: பல ரகசியமான தகவல்களை வெளியிட்டு வரும் அமெரிக்கரால் நடத்தப்பட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம் தற்போது பாப்புலர் ஃப்ரண்டின் நிலைப்பாட்டை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் கேரளத்தில் செயல்பட்டுவரும் என்.டி.எஃப் (பின்னர் இது பாப்புலர் ஃப்ரண்ட் ஆனது) என்ற அமைப்புதான் இந்தியாவில் அமெரிக்காவிற்கு எதிரான போராட்டங்களில் உறுதியுடன் செயல்பட்டு வருவதாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் கண்டு நடுங்கும் ஒரே இணையதளம் “விக்கிலீக்ஸ்” என்று சொல்லலாம். காரணம் அந்த அளவிற்கு பரம ரகசியமாக செயல்பட்ட, ரகசியமாக பாதுகாக்கப்பட்ட பல தகவல்களை ஆதாரத்துடன் வெளியிட்டு பலரது புருவங்களையும் உயர்த்த வைத்திருக்கின்றது.
சமீபத்தில் மிகவும் பரப்பரப்பையும் அதே சமயத்தில் உண்மை நிலையையும் வெளிக்கொண்டு வரும் முகமாக தற்போது இந்தியா முழுவதும் பரவி திடமான அஸ்திவாரத்துடன் செயல்பட்டு வரும் தேசிய இயக்கமான  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வை பற்றிய செய்தியினை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து வாஷிங்டனுக்கு ஒரு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில் கடந்த காலங்களில் தென் இந்தியாவில் நேஷன் டெவலப்மெண்ட் ஃப்ரண்ட் (N.D.F) என்ற அமைப்பு அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக செய்தி அனுப்பியுள்ளது.
என்.டி.எஃப் -ன் அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரத்தினாலும் அவர்கள் செய்யும் போராட்டங்களினாலும் காவல்துறையின் உதவியைக் கொண்டே நிகழ்ச்சிகளை நடத்த முடிகிறது என்று செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் கோயா
இந்த செய்தியினை பற்றி கருத்து தெரிவித்த பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினரும், தேஜஸ் மலையாள நாளிதழின் ஆசிரியருமான பேராசிரியர் கோயா அவர்கள் கூறும்போது “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மட்டுமே அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்படுவதாகவும், அதே சமயத்தில் உறுதியுடன் செயல்படுவதால தான் அமெரிக்க உளவு நிறுவனங்களால் பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கம் அதிகமாக கண்காணிக்கப்படுவதாக” கூறினார்.
அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கையை கடுமையாக எதிர்ப்போம். இனி வரும காலங்களிலும் இது தொடரும் என்றார். மேலும் அவர் கூறியதாவது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் எந்த தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டதில்லை, எந்த ஒரு தீவிரவாத தாக்குதலையும் நிகழ்த்தியதில்லை, எந்த ஒரு இடத்திலும் குண்டுவைத்து அப்பாவி மக்களை கொன்றதில்லை அத்தகைய செயல்களை ஒருபோதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆதரிக்காது என்று தெரிவித்தார்.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் கோழிக்கோட்டில் அமெரிக்க பிரதிநிதிகளால் “இஸ்லாம் மற்றும் பெண்ணியம்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். இதில் வழக்கம் போல் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை அங்கே பேசினார்கள். இதனை வன்மையாக கண்டித்து என்.டி.எஃப் போராடத்தை நடத்தியது, இந்த செய்தியையும் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சி நடைபெற்ற ஹோட்டல் அருகே என்.டி.எஃப் போராட்டத்தை நடத்தியது. அதில் பேராசிரியர் கோயா அவர்கள் உரையாற்றினார்கள். அதில் நூற்றக்கணக்கான் உறுப்பினர்கள் கூடி அமெரிக்காவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
விக்கிலீக்ஸ் இணையதளம் மேலும் கூறியதாவது தற்போது கேரளாவில் மிக வேகமாக என்.டி.எஃப் வளர்ந்து வருகிறது என்றும் மாநிலத்தில் என்.டி.எஃப் மற்றும் தேஜஸ் பத்திரிக்கையுமே அமெரிக்காவிற்கு எதிரான பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், மேலும் அநியாயமாக ஆஃப்கானிஸ்தான் மீது ஈராக் மீதும் போர் தொடுத்து லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த அமெரிக்கா பற்றியான உண்மையான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக என்.டி.எஃப் செயல்பட்டு வருவதாக அந்த இணையதளம் கூறுகிறது.

திங்கள், செப்டம்பர் 19, 2011

பாரத்புர்:குஜ்ஜார்களுடன் இணைந்து முஸ்லிம்களை நரவேட்டையாடிய காவல்துறை

9
புதுடெல்லி:ராஜஸ்தான் பாரத்புரில் உள்ள கோபால்கர் என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும் குஜ்ஜார்களுக்கும் இடையில் கலவரம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் பதற்றம் நிலவுகிறது. அந்த பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் காவல்துறையையோ அல்லது மற்ற அரசு துறைகளையோ நம்ப முடியாமல் பீதியில் உள்ளனர்.
முஸ்லிம்களுக்கும் குஜ்ஜார்களுக்கும் இடையில் நடந்த கலவரத்தில் போலிஸ் குஜ்ஜார்களுடன் சேர்ந்து முஸ்லிம்களை கடந்த புதன் அன்று நரவேட்டை ஆடியதால் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர்.
குஜ்ஜார்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் காவல்துறையும் அப்பகுதி அரசு நிர்வாகத்துறையும் முற்றிலுமாக ஒருதலைப்பட்சத்துடனும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் செயல் பட்டுள்ளனர் என்பதற்கு பல தெளிவான ஆதாரங்கள் உள்ளன. இக்கலவரம் ஈத்கா பள்ளி இடம் தொடர்பாக ஆரம்பித்து சிறுது நேரத்திற்குள் துப்பாக்கி சண்டை அளவுக்கு வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் காவல்துறை குஜ்ஜார்களுடன் இணைந்து முஸ்லிம்களை சரமாரியாக சுட்டதுடன் மட்டுமல்லாமல் குஜ்ஜார்கள் முஸ்லிம்களை உயிருடன் எரித்து கொலைச்செய்ததை தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.
குஜ்ஜார்களும் போலீசும் சிறுபான்மையினர் சமூகத்திற்கு எதிராக செய்துள்ள மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு தற்போது கடுமையான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்பதற்கு பல ஆதாரங்கள் கிட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
“காவல்துறை குஜ்ஜார்களுடன் சேர்ந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் நாங்கள் செய்வது அறியாது திகைத்துப் போனோம். உயிர் பிழைப்பதற்காக வேறு வழியின்றி குளங்களில் குதித்து தப்பித்து ஓடினோம். ஆனால் போலீசும் குஜ்ஜார்களும் இணைந்து மசூதியில் இருந்தவர்களின் மீது கண்மூடித்தனமாக சுட்டு கொலை செய்ததை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது” என்று கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் ஷப்னம் ஹாஸ்மி, நவைத் ஹமீத் ஆகியோர் அடங்கிய உண்மையறியும் குழுவிடம் கடந்த வியாழன் அன்று தெரிவித்தார்.
ஈத்கா பள்ளியின் அருகில் உள்ள கிணற்றில் முற்றிலுமாக எரிக்கப்பட்ட முஸ்லிம் உடல்கள் இரண்டு கிடைத்துள்ளன.
மஸ்ஜிதின் உள்ளே ஒரு பொருள் கூட உடையாமல் இல்லை. மேலும் மஜித்தின் தரையிலும் கூரையிலும் அங்கிருந்தவர்கள் அனைவரும் கடுமையாக தாக்கப் பட்டதற்கான ரத்தக் கரைகள் இருந்ததை காண முடிந்தது.
மேலும் மஸ்ஜிதின் கூரையில் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு உடல்களை இழுத்துச் சென்ற அடையாளங்கள் காணப்பட்டன.
சிலர் மஸ்ஜிதின் மேலிருந்து கீழே தள்ளப்பட்டு காயமுற்றோ அல்லது இறந்தோ  இருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் மஸ்ஜிதின் வெளிப்புறத்தில் 15  முதல் 20  வரையிலான தோட்டாக்களின் அச்சுகள் உள்ளன.
மஸ்ஜிதில் எங்கு பார்த்தாலும் குர்ஆனின் கிழிந்த பக்கங்கள், உடைந்த கண்ணாடிகள்,சுவர்கள் மற்றும் உபரி பொருட்கள் என சிதறி கிடந்தன.
மேலும் உண்மை கண்டறியும் குழு அங்கு நடந்துள்ள மனித உரிமை மீறல்களையும் போலீசும் முஸ்லிம் மக்களின் மீது தாக்குதல் நடத்தியதற்கான தடயங்களை அறிந்து கொண்டதை உணர்ந்து கொண்ட காவல்துறை உடனடியாக உண்மை கண்டறியும் குழுவினரை கைது செய்தது. மேலும் காவல்துறை தேசிய மற்றும் பிராந்திய ஊடகங்களிடம் இருந்தும் வெளி உலகத்திடம் இருந்தும் தடயங்களை மறைக்கும் வரை அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மேலும் அவர்களை அங்கு நடந்துள்ள கொடுமைகளை பார்ப்பதை விட்டும் தடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
மேலும் பல்வேறு இடங்களில் இருந்து புகை வந்து கொண்டிருந்ததை கண்டு அங்கு போக முயன்றதால் அவர்களை கைது செய்தனர். அங்கு வசித்துவரும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் இங்கு நடந்துள்ள கொடுமைகளை மறைப்பதற்காக இறந்த உடல்களை எரிக்கின்றனர் என்று கூறினர். மேலும் மனித உடல்கள் எறிவதற்கான சாட்சியாக உடல்கள் எரியும் வாடை பலமாக வீசியது.
மாவட்ட நீதிபதி குமல் கிருஷ்ணா கூறியுள்ளதாவது மிகவும் மோசமாக எரிக்கப்பட்ட நிலையில் அல்வார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவர் தன்னை கலவர கும்பல் தீ வைத்து கொளுத்தியதாகவும் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள பக்கத்தில் இருந்த குளத்தில் குதித்ததாகவும் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் போலீஸ் இதுவரை பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் சார்பாக முதல் தகவல் அறிக்கையை தயார் செய்யவில்லை என்பதுதான்.
மேலும் உண்மை கண்டறியும் குழுவுடன் உரையாடியதில் தெரியவந்ததாவது இதுவரை தீக்கு இரையாக்கப்பட்ட உடல்கள் பற்றி அப்பகுதியின் நிர்வாகத்துறை எந்த பதிலையும் கூறவில்லை மேலும் அவர்கள் இச்சம்பவத்தை இரு பிரிவினருக்கு இடையில் நடந்த கலவரம் என்றுதான் கூறிவருகின்றனர். மேலும் இறந்தவர்கள் காயமடைந்தவர்கள் குறித்த சரியான எண்ணிக்கைப் பற்றி தகவல்களைத் தர மறுக்கின்றனர் மேலும் எரிக்கப்பட்ட இரு உடல்களும் தீயினால்தான் இறந்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் குறிப்பாக ஊடகங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் செய்தி சேகரிப்பதை விட்டும் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்திய இடங்களை பார்வையிடுவதை விட்டும் தடுக்கப்படுகின்றனர். எனவே இவ்விவகாரம் தொடர்பாக போலீசின் பார்வையிலிருந்து மட்டுமே செய்திகள் வெளிவரும் என்பது தெளிவாகிறது.

thoothu online

சிக்கிமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 18 பேர் பலி; 100 பேர் காயம்


கேங்டாக் : சிக்கிம் மாநிலத்தில் நேற்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி, ஏழு‌ பேர் பலியாகி உள்ளனர். பீகாரில் 2 பேரும், டார்ஜலிங்கில் 3 பேரும், சிலிகுரியில் ஒரு பேரும் பலியாகியுள்ளனர். நேபாளத்தில், நிலநடுக்கத்திற்கு ஐந்து பேர் பலியாகியுள்ளனர். கடும் மழையால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. சிலிகுரி - கேங்டாங் சாலையில் நான்கு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ள சிக்கிம் - நேபாள எல்லையை மையமாகக் கொண்டு நேற்று மாலை 6.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 என பதிவானது. இதைத் தொடர்ந்து, அந்த பகுதியில், அடுத்தடுத்து மூன்று முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் இடிந்து விழுந்தன; ஏராளமான வீடுகளில் விரிசல் ஏற்பட்டன. மக்கள் பீதியுடன், தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
சாலைகளில் விரிசல் ஏற்பட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பேகாங் பகுதியில் உள்ள, "இந்தோ திபெத்தியன் எல்லை போலீஸ்' படைக்குச் சொந்தமான இரண்டு கட்டடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள், தலைநகர் டில்லி, உ.பி., பீகார், அசாம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களிலும் உணரப்பட்டன. அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசத்திலும் உணரப்பட்டது.

 நிலநடுக்கத்தினால் சிக்கிமில் -7, பீகாரில் -2, மேற்கு வங்கத்தில் -5(சிலிகுரியில் ஒருவர், டார்ஜலிங்கில் 3 ) உட்பட 13 பேரும், அண்டை நாடான நேபாளத்தில் ஐந்து பேரும் பலியாகியுள்ளனர்; 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

 சிக்கிம் மாநிலம் வடக்கு பகுதியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 15 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் 150 கிராம மக்களை இந்தியா-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் கேங்டாக் அருகில் உள்ள மாங்கன் பகுதியில் அமைந்துள்ள இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிக்கிமின் பிகாங் பகுதியில் 400க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 300 எல்லைப்பாதுகாப்பு படையினர் சிலிகுரி மற்றும் கவுகாத்தி பகுதிகளில் மருத்துவர்களுடன் மீட்பு பணிக்கு விரைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 நிலநடுக்கம்ஏற்பட்டவுடன் பிரதமர் மன்மோகன் சிங், சிக்கிம் மாநில முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மாநிலத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என கூறினார். பின்னர் பேரிடர் மேலாண் அமைப்பு கூட்டத்தை உடனடியாக கூட பிரதமர் கேபினட் செயலாளருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த கூட்டம் கூடி அவசர ஆலோசனை நடத்தியது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கேபினட் செயலாளர் அஜித் சேத் கூறுகையில், சிக்கிம் மாநிலத்திற்கு இரண்டு விமானப்படை விமானத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 4 குழுவினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கோல்கட்டாவுக்கு 5 குழுவினர் அனுப்பியுள்ளதாகவும் கூறினார். மேலும் நிவாரண பணிகளில் ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் கூறினார். பிரதமர் மன்மோகன் சிங் தற்போது நடைபெறும் மீட்பு பணிகளை ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.

 நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான 5 விமானங்கள், கோல்கட்டா, பாலம் மற்றும் ஹின்டாங் ஆகிய பகுதிகளில் இருந்து சென்றுள்ளது. இதனிடையே சிலிகுரி - கேங்டாங் சாலையில் நான்கு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் மழையால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

நரேந்திர மோடியின் கடந்த கால வரலாறை மறக்க முடியாது - கருணாநிதி!


"மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கடந்த கால வரலாறுகளை மறந்து விட முடியாது" என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, "மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இருக்கும் உண்ணாவிரதத்தில் திமுகவுக்கு உடன்பாடு உண்டு என்றாலும் நரேந்திர மோடியின் கடந்த கால வரலாறுகளை மறந்து விட முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

2002 ம் ஆண்டில் குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 3000 க்கும் அதிகமான முஸ்லீம்கள் கொல்லப் பட்ட போது மத்தியில் நடைபெற்ற பாஜக ஆட்சியில் திமுகவும் அங்கம் வகித்தது குறிப்பிடத் தக்கது.

சிக்கிம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- வடக்கு, கிழக்கு இந்தியாவும் அதிர்ந்தது!

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தை மையமாக வைத்து இன்று மாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் சிக்கிம் மாநில மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

வட கிழக்கு மாநிலமான சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் சிக்கிம்-நேபாள எல்லைப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் அளவு 6.8 ரிக்டராக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் விரிசல் கண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிக்கி்ம் மாநிலம் முழுவதும் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் மாநிலமே இருளில் மூழ்கியுள்ளது. உயிரிழப்பு குறித்தோ, பிற சேதம் குறித்தோ விவரம் இதுவரை வெளியாகவில்லை.

இன்று மாலை 6.11 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் பெரும் பீதியுடன் வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர். பல இடங்களில் கட்டடங்கள் இடிந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

தரைக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட, கிழக்கு இந்தியாவில் நில அதிர்வுகள்

இதேபோல வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்துள்ளனர்.

டெல்லியின் பல பகுதிகளில் மக்கள் நில அதிர்வுகளை உணர்ந்தனர். டெல்லியின் தென் பகுதியில்தான் நிலஅதிர்வு அதிக அளவில் உணரப்ட்டது. சமீபத்தில்தான் டெல்லியை நிலநடுக்கம் தாக்கியது. அப்போது 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது என்பது நினைவிருக்கலாம்.

பீகார் மாநிலம் பாட்னா, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, உ.பி. மாநிலம் லக்னோ, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தி ஆகிய நகரங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

வடக்கே டெல்லி முதல் கிழக்கே கிழக்கு நேபாளம் வரை பல பகுதிகளை நிலநடுக்கம் ஆட்டிப் படைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மக்கள் நில அதிர்வை உணர்ந்துள்ளனர்.

சிக்கிமை மையமாகக் கொண்ட இந்த சக்தி வாய்ந்த பூகம்பத்தால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மாநிலங்களில் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

சனி, செப்டம்பர் 17, 2011

மத கலவர தடுப்புச்சட்டம் சிறுபான்மையினருக்கு ஆதரவானது! ஆர்.எஸ்.எஸ் கண்டனம்

கடலூர்: மத்திய அரசு அமல் படுத்த உள்ள மதக் கலவர தடுப்புச் சட்டம் இந்து சமுதாயத்திற்கு எதிராக உள்ளது என ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆர்.எஸ்.எஸ்  தென்னிந்திய தலைவர் வன்னியராஜன் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது: மத்திய அரசு, மதக்கலவர தடுப்புச் சட்டம் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இச்சட்டம் இந்து சமுதாயத்திற்கு எதிராகவும், சிறுபான்மைப் பிரிவு மக்களுக்கு ஆதரவாகவும் உள்ளது. ஒட்டுமொத்த சட்ட வரைவு, இந்து சமுதாயத்தை பிளவுபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்து மதத்தினரும் பிற மதத்தினருடன் பகைமையைத் தூண்டும் விதமாக இந்த சட்ட வரைவு உள்ளது. மத்திய அரசு, சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக சட்ட வரைவு செய்துள்ளது. இதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது; சட்டமாக்கக் கூடாது. சமுதாய நல்லிணக்க பேரவை சார்பில் சட்ட வரைவுக்கு கண்டனம் தெரிவிக்கிறது. கடலூர் மாவட்டத்தில், இந்து சமுதாய ஆன்மிக பெரியோர்கள் கொண்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது.
இந்து ஆலய பாதுகாப்புக் குழு 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வெள்ளையர் ஆட்சிக் காலத்தின் போது இந்து கோவில்களில் செல்வம் நிறைந்தவைகளாக இருந்ததால், இந்து கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் வைத்து பிரிட்டிஷார் கொள்ளையடித்தனர். அந்த சட்டத்தின்படியே இந்து கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளன.
கிறிஸ்தவ ஆலயம், பள்ளி வாசல், தர்காக்கள் அந்தந்த மத அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால், இந்து கோவில்கள் மட்டும் அரசு கட்டுப்பாட்டில் உள்ளன. ஆன்மிக பக்தி இல்லாதவர்களிடம் அறங்காவலர் பொறுப்பு வழங்கப்பட்டு வருவதால், கோவில் நிர்வாகத்தில் சீர்கேடு ஏற்படுகிறது.
அரசு கோவில் நிர்வாகத்தை இந்து சமுதாயத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இதுகுறித்து, தமிழக முதல்வரிடம் சட்டம் இயற்றிடக் கோருவோம். என்று வன்னியராஜன் கூறினார்.

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

அண்ணா பிறந்தநாளையொட்டி ஆயுள் கைதிகள் விடுதலை இல்லை!


அண்ணா பிறந்தநாளையொட்டி 10 ஆண்டு தண்டனை முடிந்த ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த ஆயுள் கைதிகள் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள். கடந்த 2008-ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 7 ஆண்டு தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆண்டு தண்டனை அனுபவித்தவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலையானார்கள். பாளை மத்திய சிறையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 273 பேர் விடுதலையானார்கள். இதில் 7 வருடம் தண்டனை முடித்தவர்கள் 256 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 17 பேரும் ஆவர்.

இந்த ஆண்டும் அண்ணா பிறந்தநாளையொட்டி நேற்று (15-ம்தேதி) 10 ஆண்டு தண்டனை முடிந்த ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முதலான அமைப்புகளும் இது தொடர்பாக அரசுக்குக் கோரிக்கைகள் விடுத்திருந்தன.

தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 10 ஆண்டு தண்டனை முடிந்த கைதிகள் 400 -க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களில் பாளை சிறையில் மட்டும் 40 கைதிகள் உள்ளனர். வழக்கமாக கைதிகள் விடுதலை குறித்து நள்ளிரவில் தான் அந்தந்தச் சிறைகளுக்கு தகவல்கள் வரும். இதை எதிர்பார்த்து பலர் காத்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு அரசிடமிருந்து எந்த உத்தரவும் வராததால் கைதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வியாழன், செப்டம்பர் 15, 2011

"சமூக நீதி மாநாடு" டெல்லியில் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானம்

புது டெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மற்றுமோர் மைல்கல்லாக வருகின்ற நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களுக்கு தேசிய அளவிலான "சமூக நீதி மாநாடு" (SOCIAL JUSTICE CONFERENCE) ஓன்றை நடத்த தீர்மானித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இம்மாநாட்டின் அமர்வுகள் முழுவதும் சமூகத்தின் நீதிக்கான போராட்டம் சம்பந்தமான கலந்தாலோசனைகள், கருத்தங்கங்கள் நடைபெற இருக்கின்றன. இறுதியாக நவம்பர் 27ஆம் தேதி அன்று மாபெரும் பொதுக்கூட்டத்துடன் இந்த மாநாடு நிறைவடையும். இன்ஷா அல்லாஹ் இந்த மாநாட்டிற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பிரசித்திப்பெற்ற ராம்லீலா மைதானத்தில் வைத்து இம்மாநாடு நடைபெறவுள்ளது என்பது கூடுதல் தகவலாகும். இம்மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் பிரச்சாரங்கள் நடைபெற உள்ளன.

தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் அவர்கள் கூறும்போது இம்மாநாட்டை நடத்துவதற்கான நோக்கம் மக்கள் மத்தியில் சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இந்தியாவில் வாழக்கூடிய எல்லாதரப்பு மக்களுக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், மேலும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை போராடி பெற வேண்டும் என்ற அடிப்படையில் இம்மாநாடு நடைபெறவுள்ளதாக அவர் கூறினார்.
"நீதியின் மூலம் தேசத்தை கட்டி எழுப்புவோம்" என்ற முழக்கத்தை அடிப்படையாக கொண்டு இம்மாநாடு அமையும் என்றார்.
மாநாட்டின் பணிகளை தொடங்குவதற்காக ஒருங்கிணைப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு முஹம்மது அலி ஜின்னா அவர்கள் பொது ஒருங்கிணைப்பாளராகவும் , முஹம்மது ஷாஃபி மற்றும் முஹம்மது ரோஷன் ஆகியோர் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கே.எம். ஷரீஃப் அவர்கள் தெரிவித்தார்.
தேசிய தலைவர் ஈ.எம். அப்துர் ரஹ்மான், முஹம்மது ஷஹாபுதீன், முஹம்மது காலித், மெளலானா உஸ்மான் பேக், மெளலானா கலீமுல்லாஹ் ரஷாதி, வழக்கறிஞர் கே.பி. முஹம்மது ஷரீஃப் மற்றும் சிலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.