சனி, செப்டம்பர் 03, 2011

சீனாவை வளைக்கசர்தாரி கனவு

பீஜிங்: "சீனா - பாகிஸ்தான் நட்புறவு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். இரு நாட்டு மக்களும் பாஸ்போர்ட்டுகள் இன்றி இரு நாடுகளுக்குள்ளும் தங்குத் தடையில்லாமல் செல்லும் வகையில் இரு நாட்டு எல்லைகளும் திறந்து விடப்பட வேண்டும்' என, பாக்., அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
சீனாவில் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சர்தாரி நேற்று தனது பயணத்தை முடித்து பாகிஸ்தானுக்குப் புறப்பட்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், "சீனர்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானியர்கள் சீனாவுக்கும் பாஸ்போர்ட்டுகள் இல்லாமல் பயணிக்க வேண்டும் என்பது எனது கனவு. இருதரப்பு உறவும் பின்னிப் பிணைந்தவை. சமீபத்தில் ஷிங்ஜியாங்கில் நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்கள் எங்களை அச்சுறுத்தியுள்ளது' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக