சனி, செப்டம்பர் 03, 2011

சிரியாவிலிருந்து கச்சா எண்ணெய்ஐரோப்பிய யூனியன் தடை

3-9-11.

டமாஸ்கஸ்: சிரியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. இதன் மூலம், சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸ், துருக்கி எல்லை அருகில் உள்ள நகரங்கள் என, நாடு முழுவதும் அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நேற்றும் தொடர்ந்தன. மக்கள் மீது பாதுகாப்பு படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், டமாஸ்கஸ் புறநகர்ப் பகுதியில் நான்கு பேரும், டைர் அல் ஜோர் நகரில் மூன்று பேரும் பலியாயினர்.இந்நிலையில், போலந்து நாட்டின் சாபாட் நகரில் நேற்று கூடிய ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில், சிரியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த "லிபியாவின் நண்பர்கள்' கூட்டத்தில் பேசிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், சிரியா மீது மேலும் பல பொருளாதாரத் தடைகள் விதிக்கும்படி வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக