புதன், ஜனவரி 29, 2014

வேட்பாளர் செலவுத்தொகை உச்சவரம்பு உயருகிறது; தேர்தல் கமிஷன் முடிவு



















பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர் செலவுத்தொகை உச்சவரம்பு, கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, இந்த உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனுக்கு வேண்டுகோள் விடுத்தன.

ஆம் ஆத்மி எங்களுக்கு பணம் குறித்தான தகவலை தரவில்லை; கோர்ட்டில் மத்திய அரசு பதில்



புதுடெல்லி,
புதுடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சி சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது 20 கோடி நன்கொடை பெற்றதாகவும், மேலும் பணம் தேவையில்லை என்றும் அறிவித்ததாக தகவல் வெளியாகியது. இதனை அடுத்து ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஆம் ஆத்மி மறுத்தது. மேலும், அரசியல் பலிவாங்கும் நடவடிக்கையாக இவ்வாறு புகார் எழுப்பப்படுகிறது என்று குற்றம் சாட்டியது.

டெல்லி மேல்-சபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது; தமிழ்நாட்டில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு ஆகிறார்கள்: அ.தி.மு.க - 4, தி.மு.க - 1 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 1



சென்னை,
டெல்லி மேல்–சபையில் தமிழகத்தை சேர்ந்த 6 உறுப்பினர்களின் (ராஜ்ய சபா எம்.பி.) பதவிக்காலம் ஏப்ரல் மாதம் நிறைவு பெறுகிறது.
அந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் பிப்ரவரி 7–ந்தேதி நடைபெறும் என்று மத்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது.
டெல்லி மேல்–சபை எம்.பி.க்களை மாநில சட்டசபை உறுப்பினர்கள் ஒட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும். இதன்படி இந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக அ.மு.பி.ஜமாலுதீன் (தமிழக சட்டசபை செயலாளர்), தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியாக அ.வீரராஜேந்திரன் (சட்டசபை துணைச்செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

”ஆம் ஆத்மியினர் என்னை மிரட்டுகின்றனர்” அரசுக்கு எதிராக பெண்கள் ஆணைய தலைவர் பகீர் புகார்



புதுடெல்லி,
ஆம் ஆத்மியினர் என்னை மிரட்டுகின்றன் என்று டெல்லி அரசுக்கு எதிராக பெண்கள் ஆணைய தலைவர் பர்கா சிங் புகார் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி அரசின் சட்ட மந்திரி சோம்நாத் பார்தி தெற்கு டெல்லியில் ஆப்ரிக்க பெண்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறி நள்ளிரவு தனது ஆதரவாளர்களுடன் அவர்கள் வசிக்கும் பகுதியில் சோதனையில் ஈடுபட்டார்.  அப்போது அவரது ஆதரவாளர்கள் எங்களிடம் மோசமாக நடந்து கொண்டனர் என்று ஆப்பிரிக்க பெண்கள் குற்றம் சாட்டினர்.

புதன், ஜனவரி 22, 2014

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர், ரபெல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்


மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரபெல் நடால் மற்றும் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். காலிறுதி ஆட்டத்தில் ரபெல் நாடல், பல்கேரிய வீரர் டிமித்ரோவை எதிர்க்கொண்டார். இந்த ஆட்டத்தில் நாடல் 3-6, 7-6 (7-3), 7-6 (9-7), 6–2 என்ற செட் கணக்கில் டிமித்ரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

சிறுசேமிப்பில் முதலீடு உயர்ந்துள்ளதால் கடனிற்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு



புதுடெல்லி
 சிறுசேமிப்பு      திட்டங்களில்                                    பொதுமக்களின் முதலீடுமிகவும் உயர்ந்துள்ளதால், வங்கிகள் வழங்கும் கடனிற்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.

டெல்லி மாநில சட்டத்துறை மந்திரி சோம்நாத் பார்திக்கு எதிராக பாரதீய ஜனதா போராட்டம்


புதுடெல்லி,
மாநில அரசுக்கும், போலீஸ் துறைக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. டெல்லியில் உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக தகவல் வந்தது. அந்த வீட்டில் சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி, டெல்லி மாநில சட்டத்துறை மந்திரி சோம்நாத் பார்தி போலீசாருக்கு உத்தரவிட்டும், நடவடிக்கை எடுக்க போலீசார் மறுத்துவிட்டனர். சோம்நாத் பார்தி அப்பகுதியில் நள்ளிரவு சோதனை நடத்தினார். அப்போது ஆம் ஆத்மியினர் மோசமாக நடந்து கொண்டதாக உகாண்டா நாட்டு பெண் போலீசில் புகார் அளித்தார்.

சோம்நாத் பார்திக்கு டெல்லி பெண்கள் ஆணையம் சம்மன்; குற்றம் கண்டுபிடிக்கப்பட்டல் நடவடிக்கை ஆம் ஆத்மி


புதுடெல்லி,
டெல்லி மாநில சட்டமந்திரி சோம்நாத் பார்தி டெல்லியில் வெளிநாட்டினர் அதிகமாக வாழும் பகுதியில் சோதனை மேற்கொண்டார். அப்போது அவரது ஆதரவாளர்கள் உகாண்டா நாட்டு பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உகாண்டா நாட்டு பெண் புகார் கொடுத்துள்ளார்.  உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக புகார் கூறப்பட்டது. சோம்நாத் பார்திக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்திய அரசியலின் ‘குத்தாட்ட நாயகி’ ஆம் ஆத்மி கட்சி பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்


புதுடெல்லி,
டெல்லியில் டென்மார்க் நாட்டு பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரத்திலும், வரதட்சணைக்கொடுமை செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரோடு கொளுத்திய பிரச்சினையிலும், டெல்லியில் உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக  எழுந்த புகார் தொடர்பான பிரச்சனையிலும் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மாநில அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால் “பைத்தியக்கார முதல்-முந்திரி” உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே தாக்கு


புதுடெல்லி,
டெல்லியில் டென்மார்க் நாட்டு பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரத்திலும், வரதட்சணைக் கொடுமை செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரோடு கொளுத்திய பிரச்சினையிலும், டெல்லியில் உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக  எழுந்த புகார் தொடர்பான பிரச்சனையிலும் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மாநில அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

வெள்ளி, ஜனவரி 17, 2014

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: தோல்வியை ஒப்புக்கொண்டதை காட்டுகிறது பாரதீய ஜனதா


புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டதை காட்டுகிறது என்று பாரதீய ஜனதாவின் செய்தி தொடர்பாளர்  பிரகாஷ் ஜவடெகர் தெரிவித்துள்ளார்.மேலும், ஐக்கியமுற்போக்கு கூட்டணி தற்போது செயல்படாத சொத்து ஆகி விட்டது.எனவே தேசிய ஜனநாயக கூட்டணி வரும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள அமெரிக்க பள்ளியை, தூதரகம் இயக்கவில்லை: அமெரிக்கா


வாஷிங்டன்,
டெல்லியில் இயங்கி வரும் அமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்று, விசா மோசடியில் ஈடுபட்டதாகவும், விதிகளை மீறி இயக்கப்படுவதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில், இந்த பள்ளியை அமெரிக்க தூதரகம் இயக்கவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.

கறுப்புப்பணம் பதுக்கியோர் பற்றி சுப்ரீம் கோர்ட்டில் ஜேத்மலானி வழக்கு


புதுடெல்லி,
அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்கள் பெருமளவு வரி ஏய்ப்பு செய்து, கறுப்புப்பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்குகளில் போட்டு வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்தக் கறுப்புப்பணத்தை மீட்டு கொண்டு வர வேண்டும் என்ற குரலும் வலுத்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய முன்னாள் சட்ட மந்திரியும், மூத்த வக்கீலுமான ராம்ஜேத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அமெரிக்காவில் மத சுதந்திரம் பாதுகாக்கப்படும் ஒபாமா உறுதி


வாஷிங்டன்,
அமெரிக்காவில் ஜனவரி 16–ந்தேதி மத சுதந்திர தினமாக கடைப்பிடிக்கப்படும் என ஜனாதிபதி ஒபாமா நேற்று அறிவித்தார்.இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வேலையை காங்கிரஸ் ஒருபோதும் செய்ததில்லை; காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு


புதுடெல்லி,
அகில் இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றுவருகிறது.டெல்லியில் உள்ள தல்கதோரா ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பிரதமர் மன்மோகன் சிங்சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கல்நது கொண்டனர்.

பாராளுமன்ற தேர்தலுக்கு, காங்கிரஸ் கட்சியின் பிரசார குழு தலைவர் ஆகிறார், ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவு ரத்து


புதுடெல்லி,
பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
பிரதமர் வேட்பாளர்
தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டு உள்ளார்.மீண்டும் பிரதமராக விரும்பவில்லை என்று மன்மோகன்சிங் கூறிவிட்டதால், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக யார் முன்நிறுத்தப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், கட்சி எந்த பொறுப்பை வழங்கினாலும், ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

புதன், ஜனவரி 15, 2014

சிறந்த கால்பந்து வீரராகத் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு...

உலகின் சிறந்த கால்பந்து வீரரைத் தேர்வுசெய்து ஆண்டுதோறும் கால்பந்து சம்மேளனம் கௌரவித்து வருகின்றது. சென்ற ஆண்டின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில் லயனல் மெஸ்சி(அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ(போர்சுகல்), பிராங்க் ரிபெரி(பிரான்ஸ்) ஆகியோர் இருந்தனர். இவர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சென்ற ஆண்டின் சிறந்த வீரராக ஏக மனதாக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிங்கப்பூரில் நடந்த கலவரம் குறித்து பொது விசாரணை...

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா என்ற பகுதி இந்தியர்கள் உட்பட பெரும்பான்மையான தெற்காசிய தொழிலாளிகள் வசித்து வரும் இடமாகும். அங்கு கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி நடந்த சாலை விபத்து ஒன்றில் ஒரு இந்தியத் தொழிலாளி மரணமடைய நேரிட்டது. இதனால் அந்தப் பகுதியில் வசித்துவந்த 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று திரண்டு கலவரத்தில் ஈடுபட்டனர். கடந்த 40 ஆண்டுகளில் அங்கு நடைபெற்றிராத அளவிற்கு பெரிய வன்முறையாக அது மாறியது. இதனைத் தொடர்ந்து 56 இந்தியர்களும், ஒரு வங்காளதேசத்தவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

செவ்வாய், ஜனவரி 07, 2014

அமெரிக்க எதிர்ப்புக்கு பணியாமல் 88 கைதிகளை விடுவிக்க ஆப்கான் தீர்ப்பாயம் உறுதி


காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் பக்ராம் விமானப்படை தளத்தில் 88 பயங்கர கைதிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை சிறையில் இருந்து விடுவிக்க ஆப்கான் முடிவு செய்துள்ளது. ஆனால், இவர்கள் அபாயகரமானவர்கள், வெளிநாட்டு படையினரை கொன்றதில் இவர்களுக்கு பங்கு உண்டு, இவர்களை தொடர்ந்து சிறைக்காவலில்தான் வைத்திருக்க வேண்டும் என்று கூறி, விடுவிக்க அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

டெல்லி குடிநீர் வாரியத்தின் 800 அதிகாரிகள் ‘திடீர்’ இடமாற்றம் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை


புதுடெல்லி, –
டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி குடிநீர் வாரிய தலைவராகவும் இருக்கிறார். அவர் பதவி ஏற்ற அன்றே குடிநீர் வாரிய தலைமை செயல் அதிகாரி தேபஸ்ரீ முகர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், குடிநீர் வாரிய பணிகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக, அதன் அதிகாரிகள் 800–க்கும் மேற்பட்டோரை இடமாற்றம் செய்ய அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று இரவு அவர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.
மேலும், லஞ்சம் வாங்கிய டெல்லி குடிநீர் வாரிய ஊழியர்கள் வினோத் குமார், பட்வாரி சுனில்குமார், அது பிரகாஷ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் லஞ்சம் வாங்குவதை, தனியார் டெலிவிஷன் சேனல் ரகசியமாக படம் பிடித்து அம்பலப்படுத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து ஆண்டுதோறும் கூடுதலாக 65 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு



புதுடெல்லி,
காவிரி தண்ணீரை பகிர்ந்துகொள்வதில் தமிழகத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் மனு
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 2007–ம் ஆண்டில் தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. அதன்படி, ஆண்டு தோறும் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீரை காவிரியிலிருந்து திறந்துவிட வேண்டுமென கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.பாசன நிலம் குறித்த தவறான கணக்கீட்டின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக சுட்டிக்காட்டி, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது–

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழர், தூக்கு தண்டனைக்கு தப்பினார்; சட்ட திருத்தத்தால் பலன் பெற்றார்


சிங்கப்பூர்,
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தமிழர் தூக்கு தண்டனைக்கு தப்பினார். சட்ட திருத்தத்தால் இவர் பலன் பெற்றுள்ளார்.
இந்தியர்
சிங்கப்பூரில் வசித்து வருபவர் தமிழ் வாலிபர் பிரகாசம் (29). இவரது தந்தை சுபாஷ்கரன்.
கடந்த 2008–ம் ஆண்டு நவம்பர் மாதம் 186.62 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கடத்தியபோது பிரகாசம் பிடிபட்டார்.
இவர் மீது சிங்கப்பூர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரகாசத்துக்கு மரண தண்டனை (தூக்குதண்டனை) விதித்து கடந்த 2012–ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பு அளித்தது. ஆனால் அவரது தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது.

புதன், ஜனவரி 01, 2014

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுகுழு நெல்லையில் கூடியது

கருப்பு சட்டம் UAPA வை திரும்ப பெற வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுகுழுவில் தீர்மானம்! கடந்த டிச 29, 30 ஆகிய தேதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுக்குழு நெல்லையில் கூடியது. இந்த பொது குழுவிற்கு மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். மாநிலம் முழுவதுமுள்ள பொது குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள், தேசிய செயலாளர் மு.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் , தேசிய செயற்குழு உறுப்பினர் மு.முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் இந்த பொது குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பாப்புலர் ஃப்ரண்டின் ஒரு வருட செயல்பாடுகள் குறித்து மீளாய்வு மற்றும் விவாதங்கள் செய்யப்பட்டது. பொது குழு டிச.30 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் முடிவுற்றது.

தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது : ஜவாஹிருல்லாஹ் பேட்டி !


வரும் மக்களவை தேர்தலில், தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாது என 'மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்' ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டம் சங்கரன்பந்தலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். வரும் மக்களவைத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் இடம்பெறுவது என்பது குறித்து ஜனவரி 10 ந்தேதி சென்னையில் நடைபெற உள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும்.

ப.சிதம்பரத்திற்கு எதிராக இளையாங்குடியில் கண்டன போஸ்டர்.. பரபரப்பு

இளையாங்குடி: சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் நடந்த யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை திறப்பு விழாவில் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக மனித நேய மக்கள் கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இளையாங்குடி நகர் முழுவதும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் திடீரென்று இளையான்குடி பகுதிகளில் முஸ்லிம்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை கடன் தர மறுப்பதாகவும், ப.சிதம்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

அதிமுக இணையதளத்தை முடக்கிய இந்து இளைஞர் கைது

அதிமுக இணைய தளத்தை முடக்கிய சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார். பொழுதுபோக்குக்காக செய்ததாக விசாரணையில் கூறியிருக்கிறார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.aiadmkallindia.org. கடந்த 1-ம் தேதி இந்த இணைய தளத்துக்குள் புகுந்த ஒருவர் அதை செயல்படவிடாமல் முடக்கி விட்டார். மேலும், சில வாசகங்களையும் அதில் பதிவு செய்திருந்தார். 'இஸ்லாம் ஜிந்தாபாத், லாங் லிவ் முஸ்லிம்ஸ், பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற வாசகங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பாகிஸ்தான் கொடியுடன் மனித மண்டை ஓட்டின் உருவமும் அதில் இருந்தன. நாங்கள் பாகிஸ்தான் ஹாக்கர்ஸ் க்ரூ. எங்களுக்கு நீதியும், அமைதியும் தேவை என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தனர். 

SDPI ஆதரவாளர்கள் கிம்மா தலைவர் டத்தோ சையத் இப்ராஹிம் அவர்களுடன் சந்திப்பு

மேடான் பூனுசில் உள்ள கிம்மா அலுவலகத்தில் பிற்பகல் 1.40 மணியளவில் SDPI ன் தமிழக தலைவர் தெஹ்லான் பாகவி வருகையை ஒட்டி

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி – பிரசாந்த் பூஷண்!

திருநெல்வேலி: தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி திகழும் என்று அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும், வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் தெரிவித்தார்.திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளுக்கு எதிராக இடிந்தகரையில் கடந்த 2 ஆண்டுகளாக மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இப்போராட்டத்துக்கு தொடக்கத்தில் இருந்தே ஆதரவு தெரிவித்து வரும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஞாயிற்றுக்கிழமை இடிந்தகரைக்கு வந்தார்.

மின் கட்டணம் 50% குறைப்பு: டெல்லி அமைச்சரவை ஒப்புதல்

டெல்லியில் மின் கட்டணத்தை 50 சதவீதமாக குறைப்பதற்கு அம்மாநில அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒப்புதல் அளித்தது.அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.டெல்லி தலைமைச்செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மின் கட்டணத்தைக் குறைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.டெல்லிவாசிகளில் மாதத்துக்கு 400 யூனிட் வரையிலான மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு மின் கட்டணத்தில் 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.டெல்லி அரசின் இந்த மானியத்தின் மதிப்பு, 3 மாதங்களுக்கு ரூ.200 கோடி ஆகும். இந்த மின் கட்டணக் குறைப்பால் 28 லட்சம் பேர் பயனடைவார்கள்.முன்னதாக, டெல்லியில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஜனவரி 1-ம் தேதி முதல் தினமும் 667 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என்று தனது வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றும் வகையில், ஆம் ஆத்மி அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.அதன் தொடர்ச்சியாக, மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, மின் கட்டணத்தைப் பாதியாகக் குறைத்துள்ளது ஆம் ஆத்மி அரசு.