வெள்ளி, ஜனவரி 17, 2014

நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வேலையை காங்கிரஸ் ஒருபோதும் செய்ததில்லை; காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு


புதுடெல்லி,
அகில் இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றுவருகிறது.டெல்லியில் உள்ள தல்கதோரா ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பிரதமர் மன்மோகன் சிங்சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கல்நது கொண்டனர்.

ஊழலை ஒழிக்க நடவடிக்கை
இதில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கந்தி பேசியதாவது:-
காங்கிரஸ் செயல்வீரர்கள்  கூட்டத்தில் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அடி மட்டத்தொண்டர்கள் தான் கட்சியின் உண்மையான தலைவர்கள். மன்மோகன் சிங் தலைமையில்  பல்வேறு சலுகைகளை கடந்த 10 ஆண்டுகளில் பெற்றுள்ளோம். இந்த நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைக்காக நாம் அவருக்கு நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு  இளைஞர்களுக்கு சிறப்பாக  வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சி சுயநலம் இன்றி  நாட்டு மக்களுக்கு சேவை செய்து வருகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தை இயற்றியது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்  மிகப்பெரும் சாதனை. மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கில் தகவல் அரியும் உரிமை சட்டம் இயற்றப்பட்ட்து. உள்ளாட்சி கூட்டமைப்பில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான். ஆதார் அட்டை  மூலம் நேரடியாக மானியம் வழங்கி ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நமது அரசையே நாம் கேள்வி எழுப்பும் உரிமையை சட்டம் மூலம் நாம் வழங்கி இருக்கிறோம்.
திருப்பு முனை
மன்மோகன் சிங் தலைமையில் நல்லதொரு வளர்ச்சியை நாடு கண்டுள்ளது. சாமானிய மக்களுக்கு அதிகாரத்தை அளித்தது காங்கிரஸ் கட்சிதான். சாமானிய மக்களும்  அரசியலில் நுழைய வழிவகைப்படுத்த வேண்டும். சர்வாதிகாரத்தால் ஜனநாயத்தை ஒருபோதும் கொண்டு வர  முடியாது. கிராமப்புற வேலை வாய்ப்பு சட்டம் மக்களுக்கு நிதி ஆதாரத்தை தந்தது. கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி  சாதித்ததற்கு  இணை ஏதும் இல்லை.வரும் நாடாளுமன்ற  தேர்தல் நாட்டிற்கு திருப்புமுனையாக அமையும் .லோக்பால் சட்டத்தை நிறைவேற்றியது  காங்கிரஸ் கட்சிதான்.நேர்மையான அதிகாரிகளுக்கு காங்கிரஸ் உரிய பாதுகாப்பு அளிக்கும்.

தேர்தல் அறிக்கை
ஊழலை ஒழிக்க மேலும் பல சட்டங்களை அரசு இயற்றும்.நாட்டில் ஏற்படும் மாற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது.மக்களை பிளவுபடுத்த மதவாத அரசியலை காங்கிரஸ் ஒருபோதும்  கையில் எடுக்காது. சமுதாயத்தில் அனைத்து தரப்பினரையும் கலந்து பேசி தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும். 21 ஆம் நூற்றாண்டு கதவை இளைஞர்களுக்காக திறந்து வைக்க வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்  வறுமை கோட்டிற்கு கீழ் இருந்த 14 கோடி ஏழை மக்கள்  முன்னேற்றம் அடைந்துள்ளனர். அரசியலுக்கு பெண்கள் அதிக அளவில் வர  வேண்டும். மானிய விலை சிலிண்டர்  எண்ணிக்கையை  12 ஆக உயர்த்த வேண்டும். ஊழலுக்கு எதிரான 6 மசோதாக்கள் இன்னும் 3 மாதங்களில் நிறைவேற்றப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம்
உள்ளாட்சி அமைப்புகளில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான்.காங்கிரஸ் கட்சி ஒரு போதும் நாடாளுமன்ற அலுவல்களை சீர்குலைத்தது இல்லை.காங்கிரஸ் கட்சி என்பது வெறும் கட்சி மட்டும் அல்ல அது இந்த நாட்டின் உயிர்துடிப்பு. எதிர்கட்சிகள் நாட்டை தவறாக வழிநடத்துகின்றன.எதிர்கட்சிகளுக்கு விளம்பர யுக்திதான் தெரியும் மக்களின் உணர்வுகள் தெரியாதுநமது ஜனநாயகத்தில் தேர்தலுக்கு முன் பிரதமரை தேர்வு செய்ய இயலாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக