புதன், ஜனவரி 22, 2014

டெல்லி மாநில சட்டத்துறை மந்திரி சோம்நாத் பார்திக்கு எதிராக பாரதீய ஜனதா போராட்டம்


புதுடெல்லி,
மாநில அரசுக்கும், போலீஸ் துறைக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. டெல்லியில் உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக தகவல் வந்தது. அந்த வீட்டில் சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி, டெல்லி மாநில சட்டத்துறை மந்திரி சோம்நாத் பார்தி போலீசாருக்கு உத்தரவிட்டும், நடவடிக்கை எடுக்க போலீசார் மறுத்துவிட்டனர். சோம்நாத் பார்தி அப்பகுதியில் நள்ளிரவு சோதனை நடத்தினார். அப்போது ஆம் ஆத்மியினர் மோசமாக நடந்து கொண்டதாக உகாண்டா நாட்டு பெண் போலீசில் புகார் அளித்தார்.

இவ்விவகாரத்தில் சோம்நாத் பார்தி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் இவ்விவகாரத்திற்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது. பார்தியை விலக கோரி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது.
அதன்படி புதுடெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் சோம்நாத் பார்திக்கு எதிராக போராட்டம் நடந்தது. அதில் கட்சியின் மூத்த தலைவர்கள் விஜய் கெயல் மற்றும் இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக