புதன், ஜனவரி 29, 2014

”ஆம் ஆத்மியினர் என்னை மிரட்டுகின்றனர்” அரசுக்கு எதிராக பெண்கள் ஆணைய தலைவர் பகீர் புகார்



புதுடெல்லி,
ஆம் ஆத்மியினர் என்னை மிரட்டுகின்றன் என்று டெல்லி அரசுக்கு எதிராக பெண்கள் ஆணைய தலைவர் பர்கா சிங் புகார் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி அரசின் சட்ட மந்திரி சோம்நாத் பார்தி தெற்கு டெல்லியில் ஆப்ரிக்க பெண்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறி நள்ளிரவு தனது ஆதரவாளர்களுடன் அவர்கள் வசிக்கும் பகுதியில் சோதனையில் ஈடுபட்டார்.  அப்போது அவரது ஆதரவாளர்கள் எங்களிடம் மோசமாக நடந்து கொண்டனர் என்று ஆப்பிரிக்க பெண்கள் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக மகளிர் ஆணையம் விசாரித்து வருகிறது. மேலும், சோம்நாத் பார்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பர்கா சிங் வலியுறுத்தினார். சோம்நாத் பார்திக்கு சம்மன் அனுப்பட்டது.
இந்நிலையில் ஆம் ஆத்மியை சேர்ந்தவர்கள் தன்னை ஆணைய தலைவர் பதவியில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டுகின்றனர் என்று பர்கா சிங் கூறியுள்ளார்.
பர்கா சிங் ”அவர்கள்(ஆம் ஆத்மி) பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது குறித்து பேசுகின்றனர். ஒரு மகளிர் ஆணைத்தியின் தலைவியான எனக்கே இத்தகைய கொடூரம் நிகழும்போது, எப்படி மற்ற பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்? எனக்கு அவர்கள் தொந்தரவு கொடுக்கின்றனர்”
“நான் என்ன செய்தேன்? என்னிடம் புகார் தெரிவிக்க வந்த பெண்ணுக்கு உதவி செய்ய முயற்சித்தேன். நான் என்னுடையை பணியினை செய்தேன். நாம் சோம்நாத் பார்திக்கு நான் சம்மன் அனுப்பியதால் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்” என்று கூறியுள்ளார்.
மேலும், பெண்கள் ஆணைய தலைவர் பதவியில் இருந்து என்னை துணை கவர்னர் மட்டுமே நீக்க முடியும். இதனால் பயப்படமாட்டேன். கவர்னரை சந்திப்பேன். சோம்நாத் பார்தியை கைது செய்ய வலியுறுத்துவேன் என்று பர்கா சிங் கூறியுள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக