வியாழன், ஆகஸ்ட் 01, 2013

மாலேகான் குண்டுவெடிப்பு: ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி அஸிமானந்தாவை விடுவித்த என்.ஐ.ஏ!

புதுடெல்லி: மாலேகான் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டுள்ளதை வெளிப்படுத்திய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி சுவாமி அஸிமானந்தாவை குற்றப்பத்திரத்தில் இருந்து விடுவித்துள்ளது தேசிய புலனாய்வு ஏஜன்சி. மாலேகான் குண்டுவெடிப்பில் அஸிமானந்தாவுக்கு பங்கில்லை என்று என்.ஐ.ஏ கருதுகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிறகே அஸிமானந்தாவுக்கு தெரியவந்தது என்று என்.ஐ.ஏ கூறுகிறது.


ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி, குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டுள்ளதாக தன்னிடம் தெரிவித்தான் என்று அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். அதேவேளையில், 2007-ஆம் ஆண்டு அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு உள்பட சுனில் ஜோஷி சதித்திட்டம் தீட்டிய அனைத்து குண்டுவெடிப்புகளிலும் அஸிமானந்தாவுக்கு தீவிரபங்கிருப்பதாக என்.ஐ.ஏ கூறுகிறது. 2010-ஆம் ஆண்டு அஜ்மீர் தர்கா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அஸிமான்ந்தா கைதுச் செய்யப்பட்டார். 

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் அஸிமானந்தா அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம், 2006-ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் சதித்திட்டம் போட்டு நிறைவேற்றியுள்ளது தெரியவந்தது. ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ்குமார், குண்டுவெடிப்பை நிகழ்த்த நடந்தசதித்திட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததாக அஸிமானந்தா வாக்குமூலம் அளித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக