வியாழன், ஆகஸ்ட் 01, 2013

சிறுபான்மையினரை பாதுகாக்கவேண்டியது மதசார்பற்ற பெரும்பான்மையினரின் கடமை! - திக்விஜய் சிங்!

மதசார்பற்ற கொள்கையை நம்பும் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து வகுப்புவாதத்தை தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் கே.எம்.சி.சி சார்பாக நடந்த ஷிஹாப் தங்கல் நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார் திக் விஜய் சிங்.
அப்பொழுது அவர் கூறியது: சிறுபான்மையினருக்காக குரல் கொடுப்பவர்களை அவமதிக்க சோஷியல் நெட்வர்க் மீடியாக்களில் சங்க்பரிவாரம் முயற்சி மேற்கொண்டுள்ளது. முஸ்லிம்களுக்காக வாதிடுவதால் சோசியல் நெட்வர்க் மீடியாக்களில் அதிகம் வெறுக்கப்பட்டவன் நான் ஆவேன்.
மதசார்பற்ற கொள்கையை நம்பும் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் வகுப்புவாதத்தை ஒன்றிணைந்து தோற்கடிக்கவேண்டும். இதில் இளைய சமூகத்திற்கு பெரும் பங்குண்டு.
இந்தியா அனைவருக்கும் சொந்தமானது. ஒரு சமுதாயத்தை அப்புறப்படுத்தி விட்டு முன்னேற முடியாது. சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டிய மதசார்பற்ற பெரும்பான்மையினரின் கடமையாகும். இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சரும் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவருமான இ.அஹ்மத் தலைமை வகித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக