புதன், ஆகஸ்ட் 21, 2013

அயோத்தியில் ராமர் கோவில் யாத்திரைக்குத் தடை!- உ.பி அரசு

அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் மேற்கொள்ளவிருந்த யாத்திரைக்கு உ.பி அரசு தடை விதித்துள்ளது.

ராமர்கோவில் கட்டுவதற்க்கு ஆதரவு திரட்ட துறவிகள், மடாதிபதிகள் சகிதம் யாத்திரையை மேற்கொள்ளப் போவதாக வி.எச்.பி அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த யாத்திரைக்கு உ.பி. அரசு தடை விதித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக முஸ்லீம் தலைவர்களுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்துவதாக வி.எச்.பி தலைவர்களிடம் முலாயம்சிங் யாதவ் உறுதி அளித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்விவகாரம் உ.பி.யில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் முலாயம்சிங் யாதவ் இதனை மறுத்துள்ளதாகவும், இவ்விவகாரத்தில் முலாயம்சிங் தலையிட மாட்டார் என்றும் சமாஜ்வாடி கட்சியின் முக்கியத் தலைவரும், முலாயமுக்கு நெருக்கமானவரும், அமைச்சருமான அஸம் கான் கூறியிருந்தார். இந்நிலையில், வி.எச்.பி.யின் ராமர் கோவில் யாத்திரைக்கு உ.பி. அரசு தடை விதித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக