திங்கள், ஆகஸ்ட் 26, 2013

மியான்மரில் மீண்டும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது தாக்குதல்!

மியான்மரில் மீண்டும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதும், அவர்களின் வீடுகள், கடைகள் மீதும் புத்த வன்முறைக் குழுக்கள் தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த ஓராண்டாக நடந்துவரும் இனக்கலவரத்தில் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சுமார் 1 1/2 லட்சம் பேர் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி அகதிகள் முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சகெய்ங் மாகாணத்தின் கண்ட்பாலு நகர் அருகே உள்ள, டான் கோனே கிராமத்தில் வசிக்கும் புத்தமத பெண்ணை ஒரு முஸ்லிம் வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக வதந்தி பரவியது. இதனையடுத்து, டான் கோனே கிராமத்தில் உள்ள முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகளை சுமார் 1000 பேர் கொண்ட புத்த வன்முறைக் கும்பல் வெறித்தனமாக தாக்கி, எரித்து தீக்கரையாக்கியது.
இவர்களின் கோரத் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு தேடி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த ஒரு வாலிபரை வெளியே அனுப்பும்படி கூறி போலீஸ் நிலையத்தையும் அந்த கும்பல் முற்றுகையிட்டு தாக்கியது.
வன்முறைக் கும்பல் ஈட்டி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கியது. மேலும் அவர்கள் மியான்மரின் தேசிய கீதத்தை பாடிக்கொண்டே ரோஹிங்கியா இனத்தவர்களின் சொத்துக்களை சேதப்படுத்தினர். எனினும் இந்த கலவரத்தில் உயிர்ச்சேதம் குறித்து தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
முன்னதாக மியான்மர் இனக்கலவரம் குறித்து விசாரணை நடத்த வந்த ஐ.நா சிறப்புத் தூதர் வாகனம் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியது. அப்போது பாதுகாப்புக்கு வந்த போலீஸாரால் அதனை தடுக்க முடியவில்லை. பின்னர் இதனை குறிப்பிட்டுக் காட்டிய  ஐ.நா தூதர் இதே நிலைமைதான் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் ஏற்ப்பட்டிருக்கும் என்றார்.
Info: NewIndia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக