வெள்ளி, ஆகஸ்ட் 02, 2013

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதார தடை!

அணு உலை பிரச்சினை காரணமாக ஈரான் நாட்டுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்தது. இதன்படி ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா, சீனா உள்பட 8 நாடுகள் குறைத்து வருகின்றன. சமீபத்தில் ஈரானில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஹாசன் ரவுஹானி வெற்றி பெற்றார். அவர் வருகிற ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்க இருக்கிறார்.
இதற்கிடையில் ஈரானுக்கு எதிராக தற்போது அமெரிக்கா புதிய பொருளாதார தடையை விதித்தது. இதற்கான சட்டமூலத்தை பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டு 400-20 என்ற வாக்கெடுப்பில் நிறைவேறியது.
இதன்படி அமெரிக்கா இனி ஈரானுடன் சுரங்கம், கட்டுமானம் துறைகளில் ஒத்துழைப்பு வழங்காததுடன், 2015-ம் ஆண்டிற்குள் கச்சா எண்ணெய் இறக்குமதியை உலக அளவில் தடை செய்யப்படும். இந்த புதிய பொருளாதார தடையால் ஈரானுக்கு மேலும் நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக