வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

கொடைக்கானல் மலையில் ஆதிவாசிகள் போல் தீவிரவாதிகள் ஊடுருவல்!

கொடைக்கானல் மலையில் ஆதிவாசிகள் போல் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வந்த தகவலையொட்டி தேடும் பணி தீவிரம் அடைந்து உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி, பெரும்பள்ளம் இடையே பொய்யாவழி வனப்பகுதியில் கடந்த 19.4.2008– ம் ஆண்டு தீவிரவாதிகள் ஆயுத பயிற்சி மேற்கொள்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.


இதனையடுத்து தொடர்ந்து பொய்யாவழி வனப்பகுதியில் சுற்றிவளைத்த போலீசார் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் நவீன்பிரசாத் என்ற தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

அப்போது அவனுடன் தங்கியிருந்த 2 பெண்கள் உள்பட 9 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து கேரளா, கொடைக்கானல், தேனி, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மூலையார், வடகரைபாறை, கல்லக்கிணறு, குப்பம்மாள்பட்டி, பெரியூர், கடசிக்காடு, செம்பரான்குளம், உள்ளிட்ட வனப்பகுதிகளில் போலீஸ் குழு அமைத்து தீவிரதேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 
இந்த பகுதியில் ஆதிவாசிகளின் போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து காவல்துறையினர் ஆதிவாசி மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு சென்று கணக்கெடுத்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து வந்தனர்.

தற்போது மாவட்ட நிர்வாகம் போலீசாருக்கு எந்தவித உற்சாகமும் கொடுக்கவில்லை. இதனால் தேடுதல் வேட்டை தொய்வு ஏற்பட்டுள்ளன. இதனால் அடையாளம் தெரியாத வெளிநபர்கள் வந்து செல்கின்றனர்.

இதை தொடர்ந்து தாண்டிக்குடி வனப் பகுதியில் உள்ள தடியன்குடிசை, கானல்காடு, காமனூர், மருதாநதி பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வத்தலக்குண்டு வனசரகர் கண்ணன் தலைமையில் வனவர்கள் கருணாநிதி, ராஜேஷ் வனகாப்பாளர்கள் சரவணன், ஜெயசந்தர், பாண்டி, செல்வநாயகம் மற்றும் வனகாவலர்கள் ரோந்து பணி சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக