ஞாயிறு, மார்ச் 31, 2013
சனி, மார்ச் 30, 2013
இலங்கையில் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம் நிறுவனங்கள் மீது தாக்குதல் : பாப்புலர் ஃஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்!
- இலங்கையில் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம் நிறுவனங்கள் மீது தாக்குதல் : பாப்புலர் ஃஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்
இலங்கையில் ஆளும் சிங்கள பௌத்த அரசாங்கம் தமிழர்களை தொடர்ந்து முஸ்லீம்களை வேரறுக்க வேண்டும் எனும் நோக்கில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கெதிராக பள்ளிவாசல் இடிப்பு , ஹலால் முத்திரை நீக்குதல் , முஸ்லிம்களின் கலாச்சார உரிமைகளை மறுக்கும் நோக்கில் ஹிஜாபை தடை செய்தல் பர்தா மற்றும் தொப்பி அணிந்து வரும் முஸ்லீம்களை அச்சுறுத்துதல் என பல்வேறு அச்சுறுத்தும் வேலைகளை செய்து வருகிறது .
அதன் தொடர்ச்சியாக இலங்கை கொலும்புவில் உள்ள பெபிலியானாவில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான Fashion Bug நிறுவனத்திற்குள் நேற்றிரவு அத்துமீறி நுழைந்து பௌத்தபிக்குகளும், பாசிஸ வெறியர்களும் நிறுவனத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததோடு, அங்கிருந்த ஊழியர்களையும் தாறுமாறாக தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர்.
பௌத்த பிக்குகளால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதல் சம்பவங்கள் குறித்த நிறுவனத்தின் CCTV கமெராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனையறிந்த போலிஸார், Fashion Bug நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு CCTV இல் பதிவான வீடியோ காட்சிகளை எந்தவொரு ஊடகத்திற்கும் வழங்க வேண்டாமெனவும், இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாமெனவும் அச்சுறுத்தியுள்ளதாகவும் , பௌத்த பிக்குகள் மிகவும் கீழ்த்தரமான முறையில் ஊழியர்களை தாக்கும் காட்சிகளும் சேதம்விளைவிக்கும் காட்சிகளும் மிகவும் தெளிவாகவே பதிவாகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லீம்களை துடைத்தெறிய வேண்டும் எனும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு அநியாயங்களை செய்து வரும் பாசிஸ சிந்தனை கொண்ட பௌத்த பயங்கரவாதிகளையும் , இன அழிப்பில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசாங்கத்தையும் வன்மையாக கண்டிப்பதோடு மத்திய அரசு உடனே தலையிட்டு முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது .
இப்படிக்கு
ஏ.எஸ்.இஸ்மாயீல்
மாநில தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு - 29.03.2013
வெள்ளி, மார்ச் 29, 2013
உலக கால்பந்து சம்மேளனம் பாலஸ்தீன கால்பந்து விளையாட்டுப் பயிற்சித்திட்டத்திற்கு உதவி !
சுவிட்சர்லாண்டு நாட்டின் ஜுரிச் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, உலக கால்பந்து சம்மேளனம் இயங்கிவருகின்றது. இது ஏற்கனேவே பாலஸ்தீன நாட்டின் அல் ராம் என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் கால்பந்து சங்க தலைமைக் கட்டிடத்திற்கு பொருளுதவி செய்துகொண்டிருக்கின்றது. அந்த நாட்டில் கால்பந்து விளையாட்டினை மேலும் மேம்படுத்தும் வகையில், 4.5 கோடி டாலர் அளிப்பதாக, வியாழன் அன்று, இந்த சம்மேளனம் அறிவித்துள்ளது.
எஸ்.டி.பி.ஐ. தமிழ்நாடு துணைத் தலைவர் ரபீக் ஜித்தா சுற்றுப்பயணம் – தமிழ் வாழ் மக்களை சந்தித்தார்!
ஜித்தா:வளர்ந்து வரும் பிரபல சமூதாய இயக்கமும், மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து போராடிவரும் அரசியல் கட்சியுமான எஸ்.டி.பி.ஐ.யின் தமிழ்நாடு துணைத் தலைவர் ரபீக் முஹம்மது அவர்கள் ஜித்தாஹ் சென்றடைந்தார். அங்கு அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ஷரபிய்யாஹ்வில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரபீக், “அரசியல் நமக்கு ஏன்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
வியாழன், மார்ச் 28, 2013
மறுவாழ்வு கோரி கஷ்மீர் திரும்பியவர்கள் போராட்டம்!
ஸ்ரீநகர்: அரசின் சரணடைதல் கொள்கையின் படி பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் கஷ்மீரில் இருந்து திரும்ப வந்த குடும்பங்கள், ஸ்ரீநகரில் போராட்டம் நடத்தினர். பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சரணடைந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது போல தங்களுக்கு உடனடியாக வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தீவிரவாதி கைது நாடகம்: டெல்லி ஸ்பெஷல் பிரிவுக்கு மேலும் பின்னடைவு!
கஷ்மீர் அரசின் ‘சரண்ட அண்ட் ரிஹாபிலிஷேசன் பாலிசி’யின் படி அனுமதி கிடைத்து சரணடையவந்த முன்னாள் ஹிஸ்ப் கமாண்டர் லியாகத் அலி ஷாவை டெல்லியை தகர்க்க வந்த தீவிரவாதி என்று கைது செய்து போலி நாடகமாடிய டெல்லி ஸ்பெஷல் பிரிவின் பொய்களை உறூதிச்செய்யும் விதமாக இதுக்குறித்து எவ்வித தகவல்களையும் அளிக்கவில்லை என்று இண்டலிஜன்ஸ் பீரோ(ஐ.பி) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பேட்டையில் கலவரத்தை உண்டாக்க நினைக்கும் ஹிந்து முன்னணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம் !
நெல்லை மாவட்டம் பல வருடங்களுக்கு பிறகு பேட்டை நவாப் வாலாஜா வக்ப் செய்யப்பட்ட சொத்துகளின் ஒரு பகுதி(100 கோடிக்கு மேல் உள்ள சொத்து மேலும் பல ஆயிரம் கோடி சொத்துகள் நிலுவையில் உள்ளது) முஸ்லிம்களின் கையில் நீதிமன்றம் உத்தரவு படி கிடைத்துள்ளது. இதனால் வெறுப்புக்கு உள்ளான ரவுடி கும்பல் ஹிந்து முன்னணியை ஏவி விட்டு
புதன், மார்ச் 27, 2013
தலிபான் போராளிகள் தாக்குதலில் ஒரு பிரிட்டிஷ் வீரர் பலி: 9பேர் காயம் !
ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்டு பகுதியில், பணியில் இருந்த ரோந்துப் படையினரின் மீது, திங்கள் அன்று இரவு , தாலிபான் போராளிகள் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டுகள் அடங்கிய லாரியுடனும், ஆயுதங்களுடனும் வந்த போராளிகள் நடத்திய தாக்குதலில், ஒரு பிரிட்டிஷ் வீரர் பலியானதோடு 9 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களில் ஆப்கானிஸ்தான் படையினரும் அடங்குவர்.. செவ்வாயன்று மீண்டும் ஜலாலாபாதின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தை, 8 பேர் அடங்கிய தற்கொலைப் படையினர் தாக்கியதில் 5 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
செவ்வாய், மார்ச் 26, 2013
முஸ்லிம்கள் கைது செய்யப்பட்ட தீவிரவாத வழக்குகளில் விரைவில் தீர்வு காண சிறப்பு நீதிமன்றங்கள்!
புதுடெல்லி: முஸ்லிம் இளைஞர்கள் கைதுச்செய்யப்பட்டுள்ள தீவிரவாத வழக்குகளை விரைவில் முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறியுள்ளார். நிரபராதிகளை தீவிரவாத வழக்குகளில் சிக்கவைக்கும் புலனாய்வு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஷிண்டே உறுதியளித்துள்ளார்.
மதுரையில் பாப்புலர் ப்ரண்ட் சார்பாக ஜமாத் நிர்வாகிகளுக்கான சந்திப்பு நிகழ்ச்சி !
மதுரை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மார்ச் - 24 அன்று மதுரை மாவட்டத்தில் டவுன் ஹால் ரோடு பள்ளிவாசல் அருகில் உள்ள மதுரை மீனாட்சி மஹாலில் ஜமாத்தர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயலாளர் S. இல்யாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் S.P. முஹம்மது நஸ்ருதீன் வரவேற்புரையாற்றினார்.
திங்கள், மார்ச் 25, 2013
எஸ்.டி.பி.ஐ நடத்திய தூதரகம் நோக்கிய பேரணி! – இத்தாலி இணையதளத்தில்!
புதுடெல்லி:இந்திய மீனவர்களை சுட்டுக் கொலைச் செய்த இத்தாலி கடற்படையினரை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவர கோரி இத்தாலி தூதரகத்தை நோக்கி சோசியல்டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா நடத்திய பேரணியின் படம் அந்நாட்டின் செய்தி நிறுவனமான அன்ஸாவில் வெளியாகியுள்ளது. கடற்படையினரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்புவதாக கூறும் செய்தியுடன் எஸ்.டி.பி.ஐ நடத்திய பேரணியின் படமும் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை மறைத்த சி.பி.ஐ!
புதுடெல்லி: சிவசேனா ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான கலவரத்தைத் தொடர்ந்து நடந்த மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்ற வாதத்தை பலப்படுத்த சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலில் இருந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளை வேண்டுமென்றே தவிர்த்துள்ளது.
டெல்லி போலீசின் ‘தீவிரவாதி கைது நாடகம்’ அம்பலமானது!
புதுடெல்லி: டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு நேற்று முன் தினம் நடத்திய ‘தீவிரவாதி கைது’ நாடகம் தோல்வியை தழுவியது. டெல்லி ஹோலி பண்டிகையொட்டியோ அல்லது அதற்கு பிறகோ மிகப்பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டதாக ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் லியாக்கத் ஷாவை கைது செய்ததை ஊடகங்களுக்கு தெரிவித்த டெல்லி போலீஸின் போலி நாடகம் ஜம்மு கஷ்மீர் போலீஸ் மூலம் தோல்வியை தழுவியுள்ளது.
சனி, மார்ச் 23, 2013
! அவதூறு செய்திகளை வெளியிட்ட 2 ஆங்கில நாளேடுகளுக்கு "பாப்புலர் ஃபிரண்ட்" நோட்டீஸ்!
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை பற்றி அவதூறாக
செய்தி வெளியிட்ட பிரபல ஆங்கில நாளேடான "டெக்கான் குரோனிக்கல்" உள்ளிட்ட 2
ஆங்கில நாளேடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. "டெக்கான்
குரோனிக்கல்" பத்திரிகை, ஹைதராபாத், கொச்சின் மற்றும் பெங்களூரு
பதிப்புகளிலும் "ஏசியன் ஏஜ்" என்ற இன்னொரு ஆங்கில நாளேட்டிலும் "பாப்புலர்
ஃபிரண்ட்"ஐ சம்மந்தப்படுத்தி, செய்தி ஒன்று வெளியானது.
அதில், அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட
"கோக்ரஜார்" பாதுகாப்பு முகாம்களிலிருந்து 200 குழந்தைகளை கடத்தி வந்து,
அவர்களை கர்நாடகாவிலும் கேரளாவிலுமுள்ள மதரசாக்களில் சேர்த்ததாக
சொல்லப்பட்டிருந்தது.
மியான்மரில் மீண்டும் புத்தர்கள் வெறிச்செயல் 3 பள்ளிவாசல்கள் இடிப்பு !!
யங்கூன்: மத்திய மியான்மரில் மீக்திலா நகரத்தில் நேற்று முன் தினம் வெடித்த இனக்கலவரத்தில் ஒரு புத்த சன்னியாசி உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இப்பகுதியில் 3 முஸ்லிம் மஸ்ஜிதுகளை வன்முறையாளர்கள் தீக்கிரயாக்கியுள்ளனர். அங்கு தெருக்களில் சடலங்கள் கிடக்கக் காணப்பட்டதாக ஒரு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
வெள்ளி, மார்ச் 22, 2013
இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி - இந்தியா ஆதரவு!
ஜெனிவா : இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 25 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளன. 13 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தும் வாக்களித்துள்ள நிலையில் 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது.
இதயம் கவர்ந்து முர்ஸி நாடு திரும்பினார்!
புதுடெல்லி: ஜமால் அப்துல் நாஸரின் நினைவுகளை மறக்காத இந்திய தலைவர்களின் உள்ளங்களை 3 தின சுற்றுப்பயணத்தின் போது கவர்ந்த எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி நாடு திரும்பினார். ஃபலஸ்தீன் பிரச்சனைக்கு தீர்வு காண எகிப்து மத்தியஸ்தம் வகிப்பதற்கு அங்கீகாரம் அளித்த இந்தியா, எகிப்தின் முதல் ஜனநாயக அதிபர் என்ற அடைமொழியிட்டு பாராட்டி முர்ஸியை வழியனுப்பி வைத்தது.
வியாழன், மார்ச் 21, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)