சனி, மார்ச் 16, 2013

! பெட்ரோல் விலை ரூ.2 குறைப்பு !

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. எனினும், டீசல் விலையில் மாற்றமில்லை. உள்ளூர் வரி, வாட் வரி நீங்கலாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்புக்கு பின்பு, அதற்கேற்ப விதிக்கப்படும் வாட் வரியும் குறைவதால், சென்னையில் மொத்தம் ரூ. 2.54 குறைக்கப்பட்டு லிட்டருக்கு ரூ. 71.41 என்ற சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய விலை லிட்டருக்கு ரூ. 73.95-ஆக இருந்தது.


அதே போல தில்லியில் ரூ. 2.40 குறைக்கப்பட்டு லிட்டருக்கு ரூ. 68.34-க்கு விற்கப்படுகிறது (முந்தைய விலை ரூ. 70.74), கொல்கத்தாவில் ரூ. 2.50 குறைப்பட்டு ரூ. 75.84-க்கு விற்கப்படுகிறது (முந்தைய விலை ரூ. 78.34), மும்பையில் ரூ. 2.52 குறைக்கப்பட்டு ரூ. 75.14-க்கு விற்கப்படுகிறது (முந்தைய விலை ரூ. 77.66). கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தொடர்ந்து இருமுறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட நிலையில், இப்போது குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இப்போதைய விலை குறைப்புத் தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : 

"சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு ரூ. 112.73 அமெரிக்க டாலராக (சுமார் ரூ. 6109.71) இருந்தது. அது, இப்போது 107.41 அமெரிக்க டாலராக (சுமார் ரூ. 5785.7) குறைந்துள்ளது. 

இதையடுத்து உள்நாட்டில் பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக