திங்கள், மார்ச் 18, 2013

வீரர்களை திருப்பி அனுப்ப மறுப்பு இத்தாலி தூதர் கைதாகிறார் !

மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இத் தாலி தூதர் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. கேரள கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் 2 பேரை இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். கைதான அவர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக, இத்தாலி செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி
அளித்தது. அவர்களை திருப்பி அனுப்ப மாட்டோம் என்று அந்நாடு அறிவித்தது.இது தொடர்பான வழக்கில் இந்தியாவை விட்டு வெளியேற இத்தாலி தூதர் மஞ்சினிக்கு உச்ச நீதிமன்றம் 18ம் தேதி வரை தடை விதித்தது. 

 வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது, உத்தரவாதம் அளித்ததை மீறியதற்காக, மஞ்சினியை கைது செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிடலாம் என்று தெரிகிறது.இதனிடையே, இத்தாலி கடற்படை வீரர்களுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே,  அளித்த பேட்டியில் ‘‘உச்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை இத்தாலி தூதர் மீறியுள்ளார். 

அவரை கைது செய்து சிறைக்கு அனுப்புவது உள் ளிட்ட  நடவடிக்கை களை உச்சநீதிமன்றம் எடுக்கலாம்’’ என்றார்.மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி, ‘‘நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழிக்கேற்ப இத்தாலி அரசு செயல்பட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக