வெள்ளி, மார்ச் 15, 2013

5 உறுப்புகள் மாற்றப்பட்ட அரேபிய பெண்ணுக்கு குழந்தை !!

கத்தார் நாட்டைச் சேர்ந்த பாத்திமா அல் அன்சாரி(வயது 26) என்ற பெண்ணுக்கு 2007ம் ஆண்டு மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது, அவரது குடல் பகுதிக்கு செல்லும் முக்கிய நரம்பில் ரத்தம் உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்காக அமெரிக்காவின் மியாமி நகரத்தில் உள்ள ஜாக்சன் மெமோரியல் மருத்துவமனையில் 2007ம் ஆண்டு கல்லீரல், கணையம், வயிறு, சிறு மற்றும் பெருங்குடல் ஆகிய ஐந்து உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் அதே மருத்துவமனையில், அவருக்கு பெப்ரவரி 26ம் திகதி சிசேரியன் மூலம் பெண்குழந்தை பிறந்தது.
இந்தக் குழந்தை 2 கிலோ எடையுடன் முழு ஆரோக்கியத்துடன் இருபதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுவரை உலக அளவில் 600 பேர் ஐந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளனர்.
ஆனால் ஐந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒருவர் குழந்தை பெற்றது இதுவே முதல் முறையாகும். இது மருத்துவ துறைக்கு மிகச்சிறந்த செய்தி என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
1



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக