வெள்ளி, மார்ச் 29, 2013

தமிழகத்தின் தைரியமான முதல்வர் யார்?

ஈழத்தமிழர் விசயமாக பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தின் தைரியமான முதல்வர் யார்? கருணாநிதியா? அல்லது  ஜெயலலிதாவா? என்று கேட்டால் ஜெயா என்று தைரியமாக சொல்லி விடலாம். 
முதல்வர் ஜெயலலிதா: தமிழக  மாவாட்டங்கள் மற்றும் பஸ்களுக்கு இருந்த ஜாதி பெயரை தூக்கியது, சங்கராசாரியார் கைது, விஸ்வரூபம் தடை, இலங்கை கிரிகெட் அணியை தமிழகத்தில் ஆட தடை, இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை கொண்டு வரவேண்டும் என்கிற தீர்மானம் போன்றவைகளை சொல்லலாம்.
xமுதல்வர் கருணாநிதி: தமிழ் இனத்தலைவர் என்று தன்னை சொல்லிக் கொண்ட கருணாநிதி 2009ம் ஆண்டு நடந்த இறுதி போரில், போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்காமல், கனிமொழியை விடுதலை செய்வதிலேயே கவனம் செலுத்தி, போலி உண்ணாவிரதமும், கடித யுத்தமும் நடத்தினார். இதுபோதாதென்றுஇலங்கை இனப்படுகொலையை நிறுத்த சொல்லி தமிழகம் முழுவதும் நடந்த மக்கள் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார்.  
பாராட்டு: ஜெயலலிதாவை பாராட்டியே ஆகவேண்டும். ஆரம்ப காலம் முதல் ஈழ விடுதலை போராட்டத்தை எதிர்த்து வந்த ஜெயலலிதா, மிகபெரிய இனப்படுகொலை நடந்தேறியதும் தனது ஈழ எதிர்ப்பு நிலைய மாற்றி (ஓட்டுக்காக இருந்தாலும் தப்பில்லை) பகிரங்கமாக தமிழக சட்ட சபையில் இந்தியாவை எதிர்த்து ஒரு தீர்மானத்தை நிறைவெற்றி இருப்பது ஜெயாவின் தைரியத்தை காட்டுகிறது. நிச்சயமாக கருணாநிதி ஆட்சியில் இருந்தால் இது  நடந்திருக்காது. 
தீர்மானம்: இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை கோரியும், தனி ஈழம் தேவையா என்பது குறித்து இலங்கைத் தமிழர்களிடையேயும், புலம்பெயர் தமிழர்களிடையேயும் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த ஐ.நா மன்ற பாதுகாப்புக் கவுன்சிலை வலியுறுத்தியும், இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும், தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் போன்ற விடயங்களை வலியிறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

நன்றி : சிந்திக்கவும்                                                                                                                    1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக