புதன், மார்ச் 20, 2013

பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட மசோதா: மக்களவையில் நிறைவேற்றம் !

அமில வீச்சு உள்ளிட்ட பல்வேறு பாலியல் வன்கொடுமைக் குற்றங்களைத் தடுப்பதற்கான திருத்தப்பட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது.
மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இந்த மசோதாவை தாக்கல் செய்தார். கடந்த மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த மசோதாவில், மேலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமைக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. மேலும் பாலியல் குற்றங்களுக்காக விதிக்கப்படும் ஆயுள்தண்டனையை, குற்றம் புரிந்தவர் தமது வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டும் என்பதையும் இந்த மசோதா உறுதி செய்கிறது.
அமில வீச்சு, பெண்களை ரகசியமாகப் பின்தொடர்தல், தொல்லை தருதல் உள்ளிட்ட பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்க இந்த மசோதாவில் வழிவகுக்கப்பட்டுள்ளது. பெண்கள், சிறுமியர் ஆகியோரைப் பாதுகாப்பதற்கான சிறப்பு அம்சங்கள் திருத்தப்பட்ட இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக