திங்கள், மார்ச் 25, 2013

டெல்லி போலீசின் ‘தீவிரவாதி கைது நாடகம்’ அம்பலமானது!

புதுடெல்லி: டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு நேற்று முன் தினம் நடத்திய ‘தீவிரவாதி கைது’ நாடகம் தோல்வியை தழுவியது. டெல்லி ஹோலி பண்டிகையொட்டியோ அல்லது அதற்கு பிறகோ மிகப்பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டதாக ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் லியாக்கத் ஷாவை கைது செய்ததை ஊடகங்களுக்கு தெரிவித்த டெல்லி போலீஸின் போலி நாடகம் ஜம்மு கஷ்மீர் போலீஸ் மூலம் தோல்வியை தழுவியுள்ளது.

ஹிஸ்ப் போன்ற அமைப்புகளிலிருந்து வெளியேறி போலீஸ் அல்லது ராணுவத்தின் முன்னால் சரணடையும் போராளிகளுக்கு ஊக்கமளிக்கும் கஷ்மீர் அரசின் ’சரண்டர் அண்ட் ரிஹாபிலேஷசன் பாலிசி’ அடிப்படையில் லியாகத் இந்தியாவுக்கு வந்துள்ளார். போராளிகளின் பின்னணி மற்றும் விபரங்களை பரிசோதித்த பிறகே சரணடைய அனுமதி வழங்கப்படும்.இதனடிப்படையில் அதிகாரிகளுக்கு தெரிந்தே லியாகத் டெல்லிக்கு வந்துள்ளார்.
பாகிஸ்தானில் ஹிஸ்ப் போராளியான லியாகத் சரணடைய தயாராக உள்ளார் என்று கூறி அவரது மனைவியும் குப்வாராவைச் சார்ந்தவருமான அமீனா பேகாம் 2011-ஆம் ஆண்டு கஷ்மீர் அரசுக்கு மனு ஒன்றை அளித்திருந்தார். இதனடிப்படையிலேயே லியாகத்திற்கு சரணடைவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது.லியாகத்தும் அவரது 2-வது மனைவி அக்தர் நிஸாவும், மகனும் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்துள்ளனர். சரணடைபவர்களுக்கு இந்தியாவுக்கு வருவதற்கான வழியை நிச்சயித்து அளிப்பது கஷ்மீர் அரசாகும்.
நேபாளம் எல்லையில் இருந்து லியாகத்தை போலீஸ் கைதுச் செய்து கொண்டு சென்றதாக அவரது மனைவி அக்தர்நிஸா கூறுகிறார்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் வைத்து ஹிஸ்ப் கமாண்டரை கைதுச் செய்ததாகவும், சவுத் டெல்லி வணிக வளாகம், சாந்தினி சவுக் ஆகிய இடங்களில் நடத்தவிருந்த குண்டுவெடிப்பு சதித்திட்டத்தை முறியடித்ததாகவும் டெல்லி போலீசின் ஸ்பெஷல் பிரிவு துணை கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா கூறினார். லியாகத் அளித்த தகவலின் அடிப்படையில் ஜும்ஆ மஸ்ஜிதுக்கு அருகில் உள்ள லாட்ஜில் போலீஸ் ரெய்டு நடத்தி ஆயுதங்களை கைப்பற்றினார்களாம்.லியாகத்திற்கு உதவுவதற்காகவே தீவிரவாதிகள் இங்கு தங்கியிருந்தார்கள் என்று போலீஸ் கூறுகிறது.
இந்நிலையில்தான் கஷ்மீர் போலீஸ் அதிகாரியே, டெல்லி போலீஸின் நாடகத்தை வெட்ட வெளிச்சமாக்கினார்.இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் கஷ்மீர் அரசு தொடர்பு கொண்டது.ரிஹாபிலிஷேசன் பாலிசியின்படி சரணடைய முன்வருபவர்கள் பின்வாங்குவார்கள் என்றும் மீண்டும் கஷ்மீர் பள்ளத்தாக்கில் இரத்தக்களரி உருவாகும் எனவும் கஷ்மீர் அரசு உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது.கஷ்மீர் சட்டப்பேரவையிலும் நேற்று இது தொடர்பாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
ஒருவேளை, நேபாளில் வைத்து லியாகத்துடன் போலீஸ் கைதுச் செய்த அர்ஷத் மீரை, வரும் தினங்களில் மேலும் ஒரு தீவிரவாதியை கைதுச் செய்துள்ளோம் என்று கூறி மீண்டும் ஒரு நாடகத்தை டெல்லி போலீஸ் அரங்கேற்ற திட்டமிட்டிருக்கும்.ஜம்மு கஷ்மீர் போலீஸின் எதிர்பாராத தலையீடு டெல்லி போலீஸின் நாடகத்திற்கு தடை போட்டுள்ளது.
மிகப்பெரிய வெடிப்பொருட்களுடன் தீவிரவாதிகளை எவ்வாறு முன்பும் இதுபோல டெல்லி போலீஸ் கைதுச் செய்துள்ளது என்பதற்கான காட்சியை லியாகத்தின் கைது சம்பவம் தெரிவிக்கிறது.
டெல்லி ஸ்பெஷல் போலீஸ் பிரிவு போலி தீவிரவாத கதைகளை உருவாக்குவது குறித்து நீதிமன்றங்கள் கண்டித்த பிறகும், ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகள் என்று கூறி நீதிமன்றங்கள் விடுதலைச் செய்தபிறகும் ஸ்பெஷல் பிரிவின் போலி என்கவுண்டர் நாடகங்களையும், போலி தீவிரவாத கைது நடவடிக்கைகளையும் தடுக்க இதுவரை மத்திய உள்துறை அமைச்சகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
1
நன்றி தூது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக