திங்கள், மார்ச் 18, 2013

பால் சமத்துவத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இந்தியா!

புதுடெல்லி: பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ள இந்தியா, பால் சமத்துவத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளை விட மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. யு.என்.டி.பியின் 2013-ஆம் ஆண்டு மனித உரிமை குறியீடு இதனை தெரிவிக்கிறது.

186 நாடுகளில் 50 நாடுகள் மட்டுமே இந்தியாவை விட பின் தங்கியுள்ளன. நீண்டகாலமாக அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் சீர்குலைந்துள்ள ஈராக் 141-வது இடத்தைப் பிடித்துள்ளது. பன்முக வறுமை குறியீட்டின் பட்டியலிலும் இந்தியா 157-வது இடத்தைப் பிடித்துள்ளது. 54 சதவீத மக்கள் வறுமையில் வாடும் இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷை விட பின் தங்கிய நிலையில் உள்ளது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக