செவ்வாய், மார்ச் 19, 2013

பிரிக்ஸ் நாடுகளிடம் உதவி கேட்கும் சிரியா !

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் ஆதரவு கோரி பிரிக்ஸ் நாடுகளிடம் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் உதவி கேட்கிறார். மார்ச் 26ம் திகதி தென் ஆபிரிக்காவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் அவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் கலந்துகொள்கிறது.
இந்நிலையில் தென் ஆபிரிக்காவுக்கு சிரியா ஜனாதிபதி ஆசாத்தின் ஆலோசகர் பொதைனா ஷாபான் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேகப் சுமாவிடம் கடிதம் ஒன்றை வழங்கினர்.
அக்கடிதம் குறித்து பொதைனா ஷாபான் கூறியதாவது: இன்று நான், சிரியா ஜனாதிபதி ஆசாத் சார்பாக சிரியாவில் நிலவும் சூழ்நிலை குறித்த ஒரு கடிதத்தை தென் ஆபிரிக்க ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளேன். இந்த கடிதத்தில், ஆசாத் சிரியாவில் நடைபெற்று வரும் வன்முறைகளை நிறுத்த பிரிக்ஸ் நாடுகளின் உதவியை கோரியுள்ளார்.
சிரியா அரசு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண தயாராக இருக்கிறது. பிரிக்ஸ் நாடுகள் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்த உதவ வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக