வெள்ளி, மார்ச் 29, 2013

உலக கால்பந்து சம்மேளனம் பாலஸ்தீன கால்பந்து விளையாட்டுப் பயிற்சித்திட்டத்திற்கு உதவி !

சுவிட்சர்லாண்டு நாட்டின் ஜுரிச் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, உலக கால்பந்து சம்மேளனம் இயங்கிவருகின்றது. இது ஏற்கனேவே பாலஸ்தீன நாட்டின் அல் ராம் என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் கால்பந்து சங்க தலைமைக் கட்டிடத்திற்கு பொருளுதவி செய்துகொண்டிருக்கின்றது. அந்த நாட்டில் கால்பந்து விளையாட்டினை மேலும் மேம்படுத்தும் வகையில், 4.5 கோடி டாலர் அளிப்பதாக, வியாழன் அன்று, இந்த சம்மேளனம் அறிவித்துள்ளது.
 
இதன் மூலம் கால்பந்து அகாடமி ஒன்று வெஸ்ட் பாங்க் பகுதியில் உள்ள அல் பைரே என்ற இடத்தில் ஏற்படுத்தப்படும். இரண்டு புதிய ஆடுகளங்களில் ஒன்று அதே பகுதியில் உள்ள துல்காராமிலும், மற்றொன்று ஜெருசலேம் அருகில் உள்ள அல் ராமிலும் ஏற்படத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

பாலஸ்தீனம், பொருளாதார நெருக்கடிகளாலும், இனப்பிரச்சினைகளாலும், அது தொடர்பாக அடிக்கடி எழும் மோதல்களாலும் , சிதறுண்டு கிடக்கும்போது, இந்தப் புதிய முயற்சி உலகநாடுகளின் பார்வையில் இந்நாடு குறித்த புதிய கோணத்தைத் தோற்றுவிக்க 

உதவும்.

1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக