வெள்ளி, மார்ச் 29, 2013

எஸ்.டி.பி.ஐ. தமிழ்நாடு துணைத் தலைவர் ரபீக் ஜித்தா சுற்றுப்பயணம் – தமிழ் வாழ் மக்களை சந்தித்தார்!

ஜித்தா:வளர்ந்து வரும் பிரபல சமூதாய இயக்கமும், மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து போராடிவரும் அரசியல் கட்சியுமான எஸ்.டி.பி.ஐ.யின் தமிழ்நாடு துணைத் தலைவர் ரபீக் முஹம்மது அவர்கள் ஜித்தாஹ் சென்றடைந்தார். அங்கு அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ஷரபிய்யாஹ்வில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரபீக், “அரசியல் நமக்கு ஏன்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

  அவர் கூறியதாவது, இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களை கண்டித்து இந்திய பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றுவது வரவேற்கத்தக்கது என்றாலும், இந்தியாவில் கலவரங்களால் பல்வேறு மக்கள் மடிந்துவருவதை குறித்து மத்திய அரசும், பாராளுமன்றமும் கண்டுகொள்ளாமல் இருப்பது அரசியல் வாதிகளும் இரட்டை போக்கினை காண்பிப்பதாக உள்ளது என்றார். இந்தியாவில் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் எதிர்நோக்கி வரும் சவால்களையும், சிக்கல்களையும் பற்றி விவரித்த அவர், இதை சீர்படுத்தவும், தாழ்த்தப்பட்டவர்களை மேம்படுத்தவும் தான் எஸ்.டி.பி.ஐ. “பாஸிடிவ் பொலிடிக்ஸ்” என்ற தத்துவத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இன்று தமிழகத்தில் சாராய புழக்கம் அதிகமாக காணப்படுகிறது, ஐ.ஏ.எஸ். படித்துள்ள கலெக்டர்களை அரசு சாராய வியாபாரிகளாக மாற்றியுள்ள அவலம் தமிழகத்தில் நீடிப்பதாக ரபீக் குற்றம்சாட்டினர்.
இந்தியா ஃ டர்னிட்டி ஃபோராம் (IFF) ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில், அதன் நிர்வாகிகள் உட்பட ஏராளமான தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.
விஸ்வரூபம் படத்திற்கு தடை, மது ஒழிப்பு போராட்டம், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு, இலங்கை அரசிற்கெதிராக ஆர்பாட்டம் என பல  சமூதாய பிரச்சனைகளை எஸ்.டி.பி.ஐ. முன்னின்று நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக