செவ்வாய், ஏப்ரல் 30, 2013
திங்கள், ஏப்ரல் 29, 2013
கண்ணூர் சம்பவம்:குஜராத் மாடலில் அப்ரூவர்களை தேடும் கேரள போலீஸ்!
கண்ணூர்(கேரளா): கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நாராத் என்ற பகுதியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத பயிற்சி மேற்கொள்வதாக கூறி கைதுச் செய்ததுடன், அங்குள்ள கட்டிடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறி நாட்டு வெடிக்குண்டுகளையும், வாட்களையும் செட்டப் செய்து ஊடகங்களுக்கு காட்சிக்கு வைத்தது கேரள போலீஸ்.
ஞாயிறு, ஏப்ரல் 28, 2013
சனி, ஏப்ரல் 27, 2013
வெள்ளி, ஏப்ரல் 26, 2013
பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்களில் போலீஸ் பயங்கரவாதம்:வெட்ட வெளிச்சமான ஓரவஞ்சனை!
கோழிக்கோடு: கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நாராத் என்ற பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகத்தில் ‘ஆரோக்கியமான தேசம்!ஆரோக்கியமான சமூகம்!’ என்ற பிரச்சாரத்திற்கான பயிற்சி முகாமில் கலந்துகொண்டவர்களை ஆயுத பயிற்சி மேற்கொள்கின்றார்கள் என்று அவதூறாக சித்தரித்து அவர்கள் மீது UAPA(சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின் படி வழக்கு தொடர்ந்து கைதுச் செய்தது கேரள மாநில
வியாழன், ஏப்ரல் 25, 2013
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா மரணம்!
புதுடெல்லி:உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா (வயது80), டெல்லியில் நேற்று(திங்கள்கிழமை) மரணமடைந்தார். கல்லீரல் செயலிழப்பு காரணமாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை குர்காவ்னில் உள்ள மேதாந்தா மெடிசிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 9.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஹஜ் பயணம் - 2701 பேர் குலுக்கல் முறையில் தேர்வு!
சென்னை: தமிழ் நாட்டிலிருந்து இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் ஹஜ் கமிட்டி மூலம் 2, 701 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். மேலும் 936 பேர் சிறப்பு தகுதியில் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான குலுக்கல் 23.04.2013 செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்னை இராயப்பேட்டை புதுக்கல்லூரி வளாகத்திலுள்ள ஆணைக்கார்அப்துல் சுக்கூர் கலையரங் கில் நடைபெற்றது.
அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு: ஹிந்துத்துவா தீவிரவாதி குற்ற ஒப்புதல் வாக்குமூலம்!
புதுடெல்லி: 2007-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பை நடத்தியது தாங்கள்தாம் என்பதை ஹிந்துத்துவா தீவிரவாதி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளான். கடந்த மாதம் டெல்லியில் வைத்து கைதுச் செய்யப்பட்ட குஜராத்தைச் சார்ந்த பவேஷ் பட்டேல் ஜெய்ப்பூரில் மாஜிஸ்ட்ரேட் நீதிபதி முன்பாக குண்டுவைத்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.
புதன், ஏப்ரல் 24, 2013
ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம்! முன்னாள் விமானப்படை தளபதி வங்கிக் கணக்கு முடக்கம்!
ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதில் தரகர்கள் மூலமாக 3600 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாக தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
பிரான்ஸ் தூதரகம் மீது தாக்குதல்!
லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலியில் பிரான்ஸ் தூதரகம் மீது கார் குண்டு மூலம் தாக்குதல்நடத்தப்பட்டது. இதில் இருவர் காயமடைந்தனர். லிபியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் பென்காசி நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு மீண்டும் லிபியாவில் வெளிநாட்டு தூதரகம் மீது தாக்குதல் நடந்துள்ளது. தலைநகர் திரிபோலியில் கர்காரஷ் பகுதியில் 2 மாடி கட்டிடத்தில் பிரான்ஸ் தூதரகம் செயல்படுகிறது. இந்த அலுவலகம் மீது நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்தினர்.
செவ்வாய், ஏப்ரல் 23, 2013
திங்கள், ஏப்ரல் 22, 2013
வடகொரியா மேலும் 2 ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது!: அலறும் தென்கொரியா!
கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடலோரப் பகுதியில் வடகொரியா மேலும் இரண்டு ஏவுகணைகளை நிலை நிறுத்தியுள்ளதாக தென்கொரியா கூறியுள்ளது. ஏற்கனவே நிலை நிறுத்தி வைத்துள்ள அணு ஆயுத ஏவுகணையை, வடகொரியாவின் நிறுவனர் கிம் ஈ சுங்கின் பிறந்த நாளான ஏப்ரல் 15ம் திகதி அன்று வட கொரியா ஏவும் என்று தென்கொரியாவால் எதிர்பார்க்கப்பட்ட தாக்குதல் பொய்த்துப் போனது.
சிரியா: அதிபர் படையின் தாக்குதலில் 80 பேர் பலி!
சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும், போராளிகள் படைக்கும் இடையே கடந்த இரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் சண்டையில் 70,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்நிலையில் ஜியாடெட் அல் பத்ல் என்ற நகரை சுற்றி வளைத்து அதிபர் படை தாக்குதல் நடத்தினர். கடந்த 5 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த மோதலில் போராளிகளின் படை மிகப்பெரும் சேதத்தை சந்தித்தது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட போராளிகள் 80 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)