சனி, ஜூன் 27, 2015

விசாரணைக்கு சென்று திரும்பிய வாலிபர் மர்மச்சாவு: ஆம்பூரில் பதட்டம் நீடிப்பு


வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் ஜமில் அகமது(வயது25). இவர் கடந்த 19–ந்தேதி ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வேலூ அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கிருந்து சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

ஹாக்கி உலக லீக் அரையிறுதி: இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது

ஹாக்கி உலக லீக் அரையிறுதிப் போட்டி பெல்ஜியத்தில் உள்ள அந்த்வெர்ப் நகரில் நடைபெற்று வருகிறது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி  பாகிஸ்தானை எதிர்கொண்டது. இப்போட்டி 2-2 என சமநிலையில் முடிந்து. இதன்மூலம் இந்தியா ஏ பிரிவில் 7 புள்ளிளுடன் முதல் இடத்தில் உள்ளது.

கே.எப்.சி. உணவுகளில் கேடுவிளைவிக்கும் பாக்டீரியா இருப்பதாக பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

தாங்கள் மேற்கொண்ட சோதனையில் கே.எப்.சி. உணவுகளில் கேடுவிளைவிக்கும் பாக்டீரியா இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது ஆந்திராவை சேர்ந்த அரசு சாரா நிறுவனம்.

செவ்வாய், ஜூன் 23, 2015

கத்தி முனையில் தாயை மடக்கி நகைகளை கொள்ளயடிக்கவந்த கும்பலை திணறடித்த 7 வயது சிறுவனுக்கு வீரதீர விருது

மத்திய இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் பகுதியை சேர்ந்த முஹம்மது அலி என்ற ஏழு வயது சிறுவன் சம்பவத்தன்று தனது வீட்டின் மாடிப்பகுதியில் உள்ள அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நள்ளிரவு நேரத்தில் முன்வாசல் கதவு உடைத்து திறக்கப்படும் ஓசை கேட்டு, கீழே இறங்கி வந்தவன், அந்த காட்சியை கண்டு திடுக்கிட்டான். 

திங்கள், ஜூன் 22, 2015

வாலிபரை சுட்டுக்கொன்ற வழக்கு: கைதான சப்–இன்ஸ்பெக்டர் மதுரை சிறையில் அடைப்பு

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் செய்யது முகம்மது மீது சப்–இன்ஸ்பெக்டர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டார். இதில் செய்யது முகமது அதே இடத்தில் சுருண்டு விழுந்து பலியானார்.

சனி, ஜூன் 20, 2015

கடற்கொள்ளையர்கள் கடத்திய மலேசிய எண்ணெய் கப்பல் மீட்பு: கடற்படை அதிரடி நடவடிக்கை

மலேசிய கடற்படை சுற்றி வளைத்ததால் தாங்கள் கடத்திய எண்ணெய் கப்பலை விடுவித்துவிட்டு கடற்கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

மலேசிய அரசுக்கு சொந்தமான ‘ஓர்கிம் ஹார்மனி’ என்ற கப்பல் கடந்த 11-ந்தேதி மலேசியாவின் தான்ஜூங் சேதிலி துறைமுகத்தில் இருந்து 50 ஆயிரம் பீப்பாய் எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

வியாழன், ஜூன் 18, 2015

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் பிரேசில்-செர்பியா

20-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (20 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரைஇறுதி ஆட்டங்கள் நடந்தன. முதலாவது அரை இறுதியில் பிரேசில்-செனகல் அணிகள் மோதின.

துருக்கி முன்னாள் அதிபர் சுலேமான் டெமிரெல் மரணம்

துருக்கி நாட்டின் முன்னாள் அதிபர் சுலேமான் டெமிரெல்(90)  மரணம் அடைந்தார்.

தனது 40-வது வயதில் அரசியலுக்குள் நுழைந்த இவர் துருக்கி நீதி கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதன், ஜூன் 10, 2015

வியாழன், ஜூன் 04, 2015

இஸ்லாமிய பெண் பயணியிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க விமான நிறுவனம்

இஸ்லாமிய பெண் பயணி ஒருவர் விமானப் பயணத்தின் போது மோசமாக நடத்தப்பட்ட சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்மந்தப்பட்ட விமான நிறுவனம் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. 

அமெரிக்காவில் வசித்து வரும் இஸ்லாமிய பெண் தஹேரா அகமத், கடந்த வாரம் சிகாகோவிலிருந்து வாஷிங்டன் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் பயணித்தார்.

ஓ.பி.எஸ். தம்பி ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் !

பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்துவந்தார் தாழ்த்தப் பட்ட இளைஞர் நாகமுத்து. 

இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, இந்த கோவிலை ஓ.பன்னீர்செல்வம் தம்பி ராஜாவும் அவரது குடும்பத்தினரும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.  அப்போது நாகமுத்துவை இனிமேல் கோவிலுக்கு வரக்கூடாது என்றும்,   சாதி பெயரைச்சொல்லி திட்டியும்   மிரட்டியும் வந்தனர்.

மசூதி குறித்து சர்ச்சை பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கு கைது வாரண்ட்


subbramaniyan sami














கடந்த மார்ச் மாதம் அசாமிலுள்ள கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சுப்பிரமணியசாமி, "'மசூதிகளை எப்போது வேண்டுமானாலும் இடிக்கலாம் அவை மத வழிபாட்டுத் தாலங்கள் இல்லை" என்று பேசியிருந்தார்.