வியாழன், ஜூன் 04, 2015

மசூதி குறித்து சர்ச்சை பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கு கைது வாரண்ட்


subbramaniyan sami














கடந்த மார்ச் மாதம் அசாமிலுள்ள கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சுப்பிரமணியசாமி, "'மசூதிகளை எப்போது வேண்டுமானாலும் இடிக்கலாம் அவை மத வழிபாட்டுத் தாலங்கள் இல்லை" என்று பேசியிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்ததோடு, அசாமில் உள்ள கிரிஷக் முக்தி சங்ராம் சமிதி என்ற அமைப்பின் சார்பில், வகுப்பு மோதல்களை தூண்டும் வகையில் சுப்பிரமணியசாமியின் பேச்சு அமைந்துள்ளது. எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அசாமில் சுப்பிரமணியசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சுப்பிரமணியன் சாமிக்கு இதுகுறித்து நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் சுப்பிரமணிசாமிக்கு ஜாமீனில் வெளியில் வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்த அஸ்ஸாம் நீதிமன்றம், சுப்பிரமணியசாமியை கைது செய்து 30ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக