புதன், ஜூலை 31, 2013
தந்தையே! நீங்கள் தான் எகிப்து தேசத்தின் சிறந்த தலைவர் - முஹம்மத் மூர்சியின் மகன் உமர் மூர்சி பெருமிதம்!
எகிப்த்: இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முஹம்மத் மூர்சியின் மகன் உமர் மூர்சி அவர்கள் http://edition.cnn.com என்ற இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, சட்டத்திற்குப் புறம்பாக அதிபர் பதவியில் இருந்து வெளியற்றப்பட்ட என் தந்தை, மீண்டும் மக்களால் திரும்பவும் பதவியில் கொண்டு வரப்படுவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றார்.
எச்சரிக்கையை மீறி ராணுவம் தலைமையகம் நோக்கி இஃவானுல் முஸ்லிமீன் பேரணி!
கெய்ரோ: பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸியை மீண்டும் அதிகாரத்தில் கொண்டுவரவும், ராணுவம் தனது அடக்குமுறையை நிறுத்த கோரியும் ராணுவம் தலைமையகம் நோக்கி இஃவானுல் முஸ்லிமீன் நடத்திய பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ராணுவத்தின் தொடர் மிரட்டலையும் மீறி இப்பேரணி நடந்தது.
செவ்வாய், ஜூலை 30, 2013
பயங்கர வெடி பொருட்களுடன் தீவிரவாதி கைது! -அத்வானி வருகைக்கு எதிராக சதி திட்டமா?
சேத்துப்பட்டு: திருவண்ணாமலை அருகே சேத்துப்பட்டு என்ற ஊரில் பயங்கர வெடிமருந்துகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முந்தினம் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் போளூர் மண்டல வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சேத்துப்பட்டு அடுத்த கொளக்கரைவாடி பகுதியில் பைக்கில் வந்த இருவரை மடக்கிப் பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
இஷ்ரத் ஜஹான் வழக்கு: நீண்டநாள் தலைமறைவு குற்றவாளி திடீரென மருத்துவமனையில் அனுமதி!
புதுடெல்லி: போலி என்கவுண்டர் முறையில் அப்பாவி மாணவி இஷ்ரத் ஜஹானை கொலை செய்த குற்றவாளி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். கடந்த 2004-ஆம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உட்பட நான்கு அப்பாவிகள் குஜராத்தில் காவல்துறை அதிகாரிகளால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
எகிப்து: மிரட்டிய ராணுவம்! நிராகரித்த மக்கள்!
கெய்ரோ: கெய்ரோவில் மக்கள் எழுச்சிப்போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்றும் இல்லையெனில் பலம் பிரயோகித்து நீக்கம் செய்வோம் என்றும் ராணுவ சர்வாதிகார அரசு விடுத்த மிரட்டலை ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நிராகரித்துவிட்டனர். ஜனநாயாகரீதியில் முதன்முறையாக தேர்ந்தெடுக்கபப்ட்ட முஹம்மது முர்ஸியிடம் மீண்டும் அதிபர் பதவியை ஒப்படைக்கும் வரை நகரத்தை விட்டு வெளியேறமாட்டோம் என்றும் முந்தைய பிரகடனத்தில் மாற்றமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜராத்: உணர்ச்சியை தூண்டும் துண்டுபிரசுரங்களை ஹிந்துத்துவா அமைப்புகள் விநியோகித்தன! - ஸாகியா ஜாஃப்ரி!
அஹ்மதாபாத்: கோத்ரா ரெயில் தீ விபத்தில் பலியானவர்களின் உடல்களை அஹ்மதாபாத்தில் காட்சிக்கு வைக்கும் முன்பாக ஹிந்துத்துவா அமைப்புகள் விநியோகித்த துவேஷம் உருவாக்கும் துண்டுபிரசுரங்களை குறித்து அன்றைய குஜராத் உள்துறை விவகார கூடுதல் முதன்மை செயலாளர் அசோக் நாராயண் முதல்வர் மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதிலும், அதனை மோடி பொருட்டாக எடுக்கவில்லை என்று ஸாகியா ஜாஃப்ரி குற்றம் சாட்டியுள்ளார்.
"மணிப்பூரின் இரும்பு மங்கை" ஐரோம் சர்மிளா 80 புத்தகங்களை நூலகத்திற்கு இலவசமாக வழங்கினார்!
மணிப்பூர் மாநிலம் தலைநகர் இம்பால் விமான நிலையம் அருகே கடந்த 2000ம் ஆண்டு, பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த 10 அப்பாவி பொதுமக்களை அசாம் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். அப்பாவி மக்களை விசாரணை இன்றி சுட்டுக் கொல்லும் வகையில் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள ராணுவ சிறப்பு அதிகார ஆயுதப் படைச்சட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 12 ஆண்டுகளாக மணிப்பூரின் இரும்பு மங்கை என்றழைக்கப்படும் இரோம் ஷர்மிளா தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.
திங்கள், ஜூலை 29, 2013
இந்து முன்னணி பார்ப்பனர்கள் கூறுவது போல திப்பு சுல்தான் தேசத்துரோகியே!!
"உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு சம்மதிப்பதும் பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண், பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விட கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்க ள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்துச் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்"
இந்து தலைவர்கள் மீதான தாக்குதல் தனிப்பட்ட விரோதங்களால் நிகழ்ந்தவை!-டி.ஜி.பி விளக்கம்!
சென்னை: பாஜக மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் கொலை வழக்கு மற்றும் இந்து இயக்கத் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக போலீஸôர் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பல வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார். எந்தவொரு இயக்கத்தின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்தினாலும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எகிப்தில் மீண்டும் கூட்டுப்படுகொலை! ராணுவத்தின் காட்டுமிராண்டித்தம்!
கெய்ரோ: எகிப்தில் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காக அமைதியாக போராடும் மக்கள் மீது மீண்டும் ராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவம் நடத்திய மிருகத்தனமான துப்பாக்கிச்சூட்டில் 120 பேர் கொல்லப்பட்டதாக இஃவானுல் முஸ்லிமீனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வெள்ளி, ஜூலை 26, 2013
வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளிக்கும் ஆர்.எஸ். எஸ்.! -திக் விஜய் சிங் குற்றச்சாட்டு!
நீமச்: வெடிகுண்டு தயாரிக்க ஆர்.எஸ். எஸ். பயிற்சி அளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ள குற்றச்சாட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அவ்வப்போது சமயம் கிடைக்கும்போதெல்லாம் கடுமையாக விமர்சித்து வருபவர் திக்விஜய் சிங். இந்நிலையில் நீமச்சில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், மேற்கூறிய திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறினார்.
ஃபுர்ஜ் கலீஃபாவை விட உயரமான கட்டிடத்தை கட்ட தொடங்கியது சீனா!
துபாயில் உள்ள பர்ஜ் கலிபா என்னும் 828 மீற்றர் உயரமுடைய வணிக வளாகமே தற்போது உலகிலேயே உயரமான கட்டிடம் என்ற பெருமையைப் பெற்று விளங்குகின்றது. இதனைக் கட்டி முடிப்பதற்கு ஐந்து ஆண்டுக் காலம் ஆனநிலையில், இதனை முறியடிக்கும் விதமாக தற்போது சீனாவில் 838 மீற்றர் உயரமுள்ள கட்டிடம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதன் கட்டுமான வேலைகள் கடந்த 20ம் திகதி தொடங்கியது.
இந்தியாவில் ஏழ்மை குறைவதாக அரசு கூறுவது உண்மையா?
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஏழ்மை வேகமாக குறைந்து வருவதாக இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் குறிப்புணர்த்துகின்றன. இந்தியாவில் ஏழைகள் என்று வரையறுக்கப்படும் மக்கள் தற்போது நாட்டின் ஜனத்தொகையில் 22 சதவீதம் பேரே என இந்த விவரங்கள் காட்டுகின்றன. இந்தியாவில் பொருளாதாரம் வளர்ந்து வருவதும், சமூக நலத் திட்டங்களில் அரசாங்கம் பெருந்தொகைகளை செலவு செய்வதும் இந்த மாற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இராமநாதபுரம்: பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய பாசிஸ்டுகள்!
இராமநாதபுரம்: கடந்த 22.07.13 திங்கள் கிழமை பா.ஜ.க. சார்பாக கடையடைப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இராமநாதபுரத்தில் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் புகுந்து சில சமூக விரோதிகள் பள்ளிவாசலை சேதப்படுத்தியும் அங்கு இருந்த தொழுகைக்காக பயன்படுத்தும் தொப்பி, விரிப்பு, குர்ஆன் போன்றவற்றை எரித்தும் சிறுநீர் கழித்தும் மதவெறியோடு செயல்பட்டுள்ளார்கள்.
கோவை: மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி தீவிரவாதி கைது!
கோவை: ஓரிரு தினங்களுக்கு முன் கோவையில் மசூதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறுவாடையூர், கல்லூரை சேர்ந்த மதியழகன் (வயது 24) என்ற இந்து முண்ணனி பயங்கரவாதி என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பாரதிய ஜனதா சார்பில் கடந்த 22- ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது கோவை துடியலூர் என்ஜிஓ காலனியில் உள்ள மசூதி ஒன்றின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசினர்.
வியாழன், ஜூலை 25, 2013
தீவிரவாத வழக்குகளில் முஸ்லிம்கள் சிக்க வைக்கப்படுவதாக ஹிந்துக்களும் நம்புகின்றனர்! - ஆய்வு தகவல்!
CNN IBN - The Hindu இணைந்து இந்திய வாக்காளர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவுகள் முஸ்லிம்களுக்கு நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது. "தீவிரவாத வழக்குகளில் முஸ்லிம்கள் வேண்டுமென்றே சிக்க வைக்கப்படுகின்றனரா?" என்ற கேள்விக்கு பெரும்பான்மை இந்திய வாக்காளர்கள் (41%) 'ஆம் அல்லது இருக்கலாம்' என்று பதிலளித்துள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஹிந்துக்கள் ஆவர். அதாவது, இப்படியாக ஒப்புக்கொண்டவர்களில் 40% ஹிந்துக்களும், 56% முஸ்லிம்களும் ஆவர்.
மதிய உணவில் விஷம், புத்தகயா குண்டுவெடிப்பின் பின்னணியில் பா.ஜ.க -ஆர்.ஜே.டி சதி!-முதல்வர் நிதிஷ் குமார் அதிர்ச்சிகர குற்றச்சாட்டு!
பாட்னா: பீகாரில் சத்துணவு சாப்பிட்டு 23 குழந்தைகள் இறந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக மாநில முதல்வர் நிதீஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். பீகாரின் சாப்ரா மாவட்டம், சரன் நகரில் கடந்த வாரம் பள்ளிக்கூடத்தில் விஷம் கலந்த சத்துணவு சாப்பிட்டு 23 குழந்தைகள் இறந்தனர். இச்சம்பவத்துக்கு காரணமான யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. தலைமறைவான பள்ளி முதல்வரைக் கைது செய்வதற்கு சாப்ரா நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
புதன், ஜூலை 24, 2013
பா.ஜ.க பந்த்: இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டனம்!
சென்னை: சேலத்தில் பா.ஜ.க வின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று (22.7.2013) தமிழகத்தில் முழு கடையடைப்புக்கு அக்கட்சி அழைப்பு விடுத்தது. பா.ஜ.க. நடத்திய இந்த பந்த் தொல்வியை தழுவியது என்றாலும் பல இடங்களில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் மீதும், வணிக நிர்வனங்கள் மீதும் பா.ஜ.க வினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மோடிக்கு அமெரிக்க விசா! - 65 எம்.பிக்கள் எதிர்ப்புக் கடிதம்!
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இனப்படுகொலைகளை மேற்கொண்ட குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு அமெரிக்க அரசு உள்நுழைவு அனுமதி (விசா) மறுத்துவருவது அறிந்ததே. தற்சமயம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான ராஜ்நாத்சிங், நரேந்திரமோடிக்கு அமெரிக்க விசா பெறுவதற்கு மிகவும் முனைப்பு காட்டி வருகிறார்.
செவ்வாய், ஜூலை 23, 2013
தமிழகத்தில் சங்க்பார் தலைவர்களின் மரணம்! - விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தும்!
சென்னை: தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் வி.ரமேஷ் கொலைச் சம்பவம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை விரைந்து விசாரிப்பதற்காக சிறப்புப் புலனாய்வுப் பிரிவை அமைக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பனின் கொலைச் சம்பவத்தையும் இந்த சிறப்புப் பிரிவினர் விசாரணைக்கு எடுத்துக்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்துத்துவாவின் அடிப்படையில் நாட்டை வலுப்படுத்த போகிறதாம் ஆர்.எஸ்.எஸ்!
பாட்னா: இந்துத்துவத்தின் அடிப்படையில் வலுவான நாட்டை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நோக்கம் என்று அதன் தலைவர் மோகன் பாகவத் கூறியிருக்கிறார். பீகார் மாநிலம் பாட்னாவில் சிராவண பெளர்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத் கூறியது: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) குறிக்கோள்கள், செயல்பாடுகள் குறித்து அறியாததால் அந்த இயக்கத்தைப் பற்றி பல காரணங்களுக்காக பல தவறான கருத்துகள் நிலவிவருகிறது. சமூகத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வந்து, இந்தியாவை வலுவுள்ள நாடாக உருவாக்கும் பெரும் கடமையில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டிருக்கிறது. இந்துத்துவ அடிப்படையில் வலுவான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செயல்பாடுகளின் நோக்கம். இந்துத்துவம்தான் இந்தியாவின் அடிப்படையும் அடையாளமுமாகும். இந்துத்துவத்தை ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கோட்பாடாக எண்ணுவது தவறு.
பந்த் என்னும் பெயரில் பா.ஜ.க வினர் வன்முறையாட்டம்! பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!
சென்னை: பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் (52) சேலத்தில் சில மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பாஜக சார்பாக இன்று (22.07.2013 ) தமிழகம் முழுவதும் முழு கடை அடைப்பிற்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது. பாஜக சார்பில் நடைபெற்ற இந்த பந்தில் தமிழகம் முழுவதும் பெரும்பான்யான பகுதிகளில் வன்முறை வெடித்தது. பாஜகவின் வன்முறை நடவடிக்கைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
வெள்ளி, ஜூலை 19, 2013
வங்காளதேசம்: ஜமாஅத்தே இஸ்லாமி தலைவருக்கு மரணத்தண்டனை: சர்ச்சைக்குரிய சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பு!
டாக்கா: வங்காளதேசத்தில் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியான ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த தலைவருக்கு அரசு உருவாக்கிய சர்ச்சைக்குரிய சர்வதேச தீர்ப்பாயம் மரணத் தண்டனை விதித்துள்ளது. ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளரான 65 வயதுடைய அலி அஹ்ஸன் முஹம்மது முஜாஹிதை, கடத்தல், கொலை உள்ளிட்ட ஐந்து வழக்குகளில் குற்றவாளி என்று கூறி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வியாழன், ஜூலை 18, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)