திங்கள், டிசம்பர் 29, 2014

காஷ்மீர் : பாஜகவுக்கு 5 நிபந்தனைகள் விதித்தது மக்கள் ஜனநாயக கட்சி!

காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), பாஜகவுக்கு 5 நிபந்தனைகளை விதித் துள்ளது.
காஷ்மீருக்கு சிறந்து அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை நீக்கக்கூடாது, 6 ஆண்டுகளுக்கும் பிடிபி மூத்த தலைவர் முப்தி முகமது சையதுவே முதல்வராக நீடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 நிபந்தனைகளை பிடிபி கட்சி முன்வைத்துள்ளது.

மலேசியா, தாய்லாந்தில் கனமழைக்கு 24 பேர் பலி

மலேசியா மற்றும் தாய்லாந்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்.

மலேசியாவில் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் தங்களது வீட்டை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டனர். மேலும் அங்கு மழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, டிசம்பர் 27, 2014

பாபர் மசூதி வழக்கு: தந்தையின் வழியில் நீதிக்கான எனது போராட்டம் தொடரும் முஹம்மது உமர்

அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பாக, உத்தரப்பிரதேச மாநிலம் பரிதாபாத் கோர்ட்டில் கடந்த 1949-ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. 

மலேசியாவின் வடக்குப் பகுதியில் கனமழை: வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

மலேசியாவின் வடக்குப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதன், டிசம்பர் 24, 2014

இந்தியாவின் பலஸ்தீன ஆதரவு வாபஸ்? – மனித நேய மக்கள் கட்சி கண்டனம்

மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
விடுதலைப்பெற்ற காலத்திலிருந்து தொடர்ச்சியாக ஐ.நா. மன்றத்தில் பாலஸ்தீனத்திற்கு அளித்து வந்த ஆதரவை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மறு பரிசீலனை செய்யப்போவதாக செய்திகள் வந்துள்ளன.

மலம்புழா பண்ணையில் இருதலை பாம்புகள் திருட்டு

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணை சுற்றுலா மையமாகத்திகழ்கிறது. அணையின் அருகே பாம்பு வளர்ப்பு பண்ணை உள்ளது.

புதிய போர்க்குற்ற விசாரணை: தமிழர்களின் ஓட்டுக்களை கவர வாக்குறுதிகளை வாரி வழங்கும் ராஜபக்சே

இலங்கையில் புதிய போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று அதிபர் ராஜபக்சே வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கை அதிபர் பதவிக்கு வரும் ஜனவரி மாதம் 8-ம்தேதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து பொதுவேட்பாளராக போட்டியிடப்போவதாக ராஜபக்சே மந்திரிசபையில் சுகாதாரத்துறை மந்திரியாக பொறுப்பு வகித்த மைத்ரிபாலா சிறீசேனா (63) அறிவித்தார். இது ஆளும் கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறீசேனாவுக்கு ஆதரவு தெரிவித்த மேலும் 4 மந்திரிகளை தனது மந்திரிசபையில் இருந்து ராஜபக்சே நீக்கினார். பின்னர், அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை மந்திரியாக இருந்துவந்த ரிஷத் பதியுதீன், அவர் சார்ந்த அனைத்து சிலோன் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான அமிர் அலி ஆகியோரும் மைத்ரிபாலா சிறீசேனாவை ஆதரித்து பிரசாரம் செய்ய களமிறங்குகின்றனர். சிறுபான்மை மக்களின் ஆதரவு பெற்ற சிலோன் காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறது.

மைத்ரிபாலா சிறீசேனாவுக்கு ஆதரவு அதிகரித்தவண்ணம் உள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ள ராஜபக்சே, தமிழர்களின் வாக்குகளைப் பெற புதிய வாக்குறுதிகளை வழங்க ஆரம்பித்துள்ளார். 

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் கொன்று குவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஒரு புதிய வெளிப்படையான நீதி விசாரணை நடத்தப்படும் என்று ராஜபக்சே தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

போரின்போது எந்த உரிமைகளாவது மீறப்பட்டிருந்தால் அதுகுறித்த வெளிப்படையான உள்நாட்டு நீதித்துறை அமைப்பு மூலம் விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்படும் என்று குறிப்பிட்டுள்ள ராஜபக்சே, இதற்கு முன்பு தான் உத்தரவிட்ட விசாரணையில் இருந்து இது எந்த மாதிரி வேறுபட்டது என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை.

திங்கள், டிசம்பர் 22, 2014

மதமாற்றம் சம்பவம்: விசுவ இந்துபரிஷத் மீது பிரதமர் மோடி அதிருப்தி

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சமீபத்தில் 57 முஸ்லிம் குடும்பத்தினர் இந்துவாக மதமாற்றம் செய்யப்பட்டனர். கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோட்சே இந்தியாவின் முதல் தீவிரவாதி: சமாஜ்வாதி கட்சி செயலாளர் அசம் கான்


நாதுராம் கோட்சேயை புகழும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சமாஜ்வாதி கட்சி செயலாளர் அசம் கான் கடுமையாக தாக்கியுள்ளார்.

சனி, டிசம்பர் 20, 2014

புத்தாண்டுக் கொண்டாட்டம்: நட்சத்திர ஹோட்டல்களுக்கு கட்டுப்பாடு

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு காவல் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
2015 புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் செய்து வருகின்றன. நட்சத்திர ஹோட்டல்களை தவிர்த்து மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகிய இடங்களிலும் மக்கள் புத்தாண்டைக் கொண்டாடுவார்கள்.

ஜப்பானில் பனிப் புயல்: 11 பேர் பலி

ஜப்பானில் வீசி வரும் பனிப் புயலுக்கு 11 பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

புதன், டிசம்பர் 17, 2014

'குவாரியில் சமாதியாக்குவோம்': சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு கொலை மிரட்டல்!



மதுரை: கிரானைட் முறைகேடு குறித்து தொடர்ந்து விசாரணை செய்தால், கிரானைட் குவாரியில் போட்டு சமாதி ஆக்கி விடுவோம் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

திங்கள், டிசம்பர் 15, 2014

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: ஜெர்மனி அணி சாம்பியன்

சாம்பியன்ஸ் டிராபி ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 2–வது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது.

ஜப்பான் பாராளுமன்ற தேர்தல்: பிரதமர் சின்சோ அபே கட்சிக்கு வெற்றி வாய்ப்பு

ஜப்பான் பாராளுமன்றத்துக்கு நடத்தப்பட்ட திடீர் தேர்தலில் தற்போதைய பிரதமர் சின்சோ அபே கட்சி வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

திடீர் தேர்தல்
ஜப்பான் பிரதமராக கடந்த 2012–ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் சின்சோ அபே. இவருடைய பதவி காலம் முடிவடைவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. எனினும் அண்மையில் நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவற்காக இவர் கொண்டு வந்த பல்வேறு சீர்திருத்தங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து பாராளுமன்றத்தை கலைத்து விட்டு இடைத்தேர்தலை சந்திப்பதென கடந்த மாதம் சின்சோ அபே முடிவு செய்தார். அதன்படி 475 உறுப்பினர்களைக் கொண்ட ஜப்பான் பாராளுமன்ற கீழ் சபைக்கு நேற்று தேர்தல் நடத்தப்பட்டது.

மந்தமான வாக்குப்பதிவு

இதில் சின்சோ அபே தலைமையிலான விடுதலை ஜனநாயக கட்சி கூட்டணியும், பிரதான எதிர்கட்சியான ஜப்பான் ஜனநாயக கட்சி கூட்டணியும் அதிகாரத்தை கைப்பற்ற போட்டியிட்டன.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 4.30 மணிக்கு முடிந்தது. நாட்டின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தபோதிலும் சில இடங்களில் ஓட்டுப்பதிவு மந்தமாகவும் நடைபெற்றது.

300 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும்

எனினும் தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தவர்களிடம் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பின்படி சின்சோ அபேவின் விடுதலை ஜனநாயக கட்சி கூட்டணிக்கு 300–க்கும் அதிகமான தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
பொதுவாக ஜப்பானில் இதுவரை எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளின்படியே தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன என்பதால் அபேயின் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது.

ஞாயிறு, டிசம்பர் 14, 2014

தாய் விமான பணிப்பெண் முகத்தில் வெந்நீரை ஊற்றிய சீனப் பெண் பயணி

ஏர் ஏசியா நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு விமானம் கடந்த வியாழன் அன்று மாலை 174 பயணிகளுடன் தாய்லாந்திலிருந்து கிழக்கு சீனாவில் நான்ஜிங் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தது.

ஐ.எஸ்.எல். அரை இறுதிப் போட்டி: கேரளா 3-0 என சென்னையை வீழ்த்தியது

ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு லீக் போட்டி நடைபெற்று வந்தது. இதில் புள்ளிகள் அடிப்படையில் நான்கு அணிகள் அரை இறுதிக்கு போட்டிக்கு தகுதிப் பெற்றது.

இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு: 108 பேர் மாயம்

இந்தோனேசியாவில் பருவமழை காலங்களில் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். தற்போது அங்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பலத்த மழை பெய்து வருகிறது.

வெள்ளி, டிசம்பர் 12, 2014

கட்டாய மத மாற்றம்: 17-ம் தேதி பாராளுமன்றத்தில் விவாதம்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா, அலிகர் உள்ளிட்ட பல இடங்களில் சமீபத்தில் சில துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

புதன், டிசம்பர் 10, 2014

பா.ஜனதா ஆட்சி மீது மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்: ராகுல்காந்தி ஆவேசம்

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதீரன் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் மாநிலம் முழுவதும் யாத்திரை நடத்தினார்.

இதன் நிறைவு நாள் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக திருவனந்தபுரம் வந்தார். அங்கு புத்தரிகண்டம் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

இங்கிலாந்தில் ஸ்காட்லாந்து போலீஸ் தலைமையகம் ரூ. 3700 கோடிக்கு விற்பனை

இங்கிலாந்தின் ஒரு பகுதியாக ஸ்காட்லாந்து உள்ளது. இங்கு போலீஸ் தலைமை அலுவலகம் உள்ளது. உலகிலேயே திறமையான போலீசார் என்ற பெருமையை ஸ்காட்லாந்து போலீசார் பெற்றுள்ளனர்.

செவ்வாய், டிசம்பர் 09, 2014

ஞாயிறு, டிசம்பர் 07, 2014

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: புனேயை வீழ்த்தியது டெல்லி


இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டித் திருவிழாவில் நேற்றிரவு புனேயில் நடந்த 51-வது லீக்கில் டெல்லி டைனமோஸ்- புனே சிட்டி அணிகள் மோதின.

முசாபர்நகர் வன்முறை: 3 அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய பரிந்துரை

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தில் கடந்த 2013ம் ஆண்டு முசாபர்நகரில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அடையாளம் காண தவறியதற்காக 3 வருவாய் துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் ஒபாமா ஆட்சியில் இனவெறி தாக்குதல் அதிகரிப்பு

அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமா ஆட்சிக்கு வந்தபிறகு தான் இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து உள்ளது என்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.

வியாழன், நவம்பர் 20, 2014

டெல்லி: தொடரும் இனவெறி மணிப்பூர் மாணவர் படுகொலை..

டெல்லியில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி கல்வி பயின்று வந்த மணிப்பூரைச் சேர்ந்த மாணவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஹரியானா தாதா சாமியார் கைது, கலவரம்...

ஹரியாணா மாநிலம் பர்வாலாவில் சாமியார் ராம்பாலின் ஆசிரமம் உள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டில் ஆசிரமத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராம்பால் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

சனி, நவம்பர் 08, 2014

சென்னை உயர்நீதிமன்றம்......! ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 9-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் ஆண்டு விழா பேரணி நடத்த அந்த அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி, நவம்பர் 07, 2014

துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சி ஆரம்பம்..

துபாய்: உலகின் புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றான துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சி நேற்று நவம்பர் 6-ல் துவங்கியது. இக்கண்காட்சி ஏப்ரல் 11, 2015 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, அக்டோபர் 31, 2014

எல்லை பிரச்னை: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை..

எல்லையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடக்கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவுடன் மாட்டாமல் காலனிடம் மாட்டிய வாரன் ஆண்டர்சன்..

போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் தேடப்பட்டு வந்த யூனியன் கார்பைடு அதிபர் ஆண்டர்சன் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வியாழன், அக்டோபர் 30, 2014

ஹலால் பொருட்களை அதிகமாக இறக்குமதி செய்கின்றது ஜப்பான்..

மலேசியாவிலிருந்து சுகாதாரமான ஹலால் உணவு பொருட்கள் இறக்குமதி செய்யகூடிய நாடுகளில் தற்பொழுது ஜப்பானும் இணைந்துள்ளது.

தொழில் வளர்ச்சியில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய மற்ற நாடுகள்..

தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவும் நாடுகள் பட்டியலில் இந்தியா 142-வது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரண்டு இடம் குறைவு. சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.

சனி, ஆகஸ்ட் 30, 2014

நெல்லை மேயர் தேர்தலில் பிரபல அரசியல் கட்சிகள் 5 அணியாக போட்டி ?

நெல்லை மாநகராட்சிக்கு புதிய மேயரை தேர்ந்தெடுக்க வருகிற 18–ந்தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. சார்பாக நெல்லை மாநகர் மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் புவனேஸ்வரி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வியாழன், ஆகஸ்ட் 28, 2014

காஸாவில் போர் நிறுத்தம்! – ஃபலஸ்தீன் காஸா போராளிகளுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி!

50 தினங்கள் நீண்ட இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களுக்கு ஒய்வு.எகிப்தின் மத்தியஸ்தத்தில் ஹமாஸும், இஸ்ரேலும் நீண்டகால போர் நிறுத்தம் உடன்படிக்கையைச் செய்துகொண்டன.காஸாவுக்கு எதிராக 2006-ஆம்
ஆண்டு இஸ்ரேல் அறிவித்த தடையை நீக்கவேண்டும் என்ற ஹமாஸின் முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் அங்கீகரித்ததை தொடர்ந்து ஒப்பந்தம் அமலுக்குவந்துள்ளது.

கற்பழிப்பு வழக்குபதிவு: சதானந்த கவுடா மகன் திருமணம் நடைபெறுமா?

மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவின் திருமண நிச்சயதார்த்தம் நேற்றிரவு குடகு பகுதியில் உள்ள குஷால் நகரில் நடந்தது.

பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்தது அரியானா ஜான்ஹிட் காங்கிரஸ்

அரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி ஏற்படுத்தியிருந்த அரியானா ஜான்ஹிட் காங்கிரஸ் கட்சி இன்று பா.ஜ.க.கூட்டணியை முறித்துக்கொண்டது.

புதன், ஆகஸ்ட் 27, 2014

வெறும் 100 ரூபாயில் விமான டிக்கெட்: பயணிகளுக்கு ஏர் இந்தியாவின் அதிரடி சலுகை

ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததன் நினைவாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி ஏர் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏர் இந்தியா நாளை முதல் 5 நாட்களுக்கு சலுகை விலையில் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்கிறது.

பிரித்தாளும் அரசியல் மூலம் பா.ஜ.க வெல்ல முடியாது: நிதீஷ்குமார்!

பிரித்தாளும் அரசியல் மூலம் பாஜக வெற்றி பெற முடியாது என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நிதீஷ் குமார் கூறினார்.
பீகார் உள்ளிட்ட நான்கு மாநில இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நிதீஷ் குமார், பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரானின் ஆதரவுக்கு நன்றி: காலித் மிஷால்!

ஸ்ரேலுக்கு எதிரான முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை எட்டுவதற்கு ஈரான் ஆதரவு பெரிதும் உதவியதாக ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷால் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மது பார்களுக்கு அனுமதி மறுப்பு: நீதிமன்றம் பாராட்டு

கேரளாவில் படிப்படியாக மதுவை ஒழிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 418 பார்களுக்கான உரிமத்தை புதுப்பிக்க அம்மாநில அரசு மறுத்துவிட்டது.

செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014

கார் பார்க்கிங் செய்த போது மோதல்: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை கைது

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தனது காரை பார்க்கிங் செய்த போது மோதலில் ஈடுபட்டதால் அரியானா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இடைத்தேர்தலில் காங். கூட்டணி 10 தொகுதிகளில் வெற்றி: பா.ஜனதாவுக்கு பின்னடைவு

மக்களவைத் தேர்தல் முடிந்து 3 மாதம் ஆன நிலையில் பீகார் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில் கடநத 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கத்தின் மாநில அலுவலகம் திறப்பு விழாவில் பாப்புலர் ஃபரண்ட் மாநில செயலாளர் பங்கேற்பு!

எஸ்டிபிஐ கட்சியின் தொழிலாளர்கள் அமைப்பான எஸ்.டி.டி.யூ (SDTU- social democratic trade union) தொழிற்சங்கத்தின் மாநில தலைமை அலுவலகம் திறப்பு விழா இன்று (ஆகஸ்ட்-25) சென்னையில் நடைபெற்றது.

இஸ்ரேலுக்கு புதிய தலைவலி: லெபனானில் இருந்தும் ராக்கெட் வீச்சு

காஸாவில் உள்ள ஹமாஸ் போராளிகளை ஒடுக்குவதற்காக கடந்த 50 நாட்களாக சண்டையிட்டு வரும் இஸ்ரேல் நாட்டுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தும் விதமாக லெபனான் நாட்டில் இயங்கிவரும் போராளிக் குழுக்களும் இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.

செவ்வாய், ஆகஸ்ட் 19, 2014

மதத்தை பயன்படுத்தி அப்பாவி மக்களை முட்டாள்களாக்கவேண்டாம்: ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு திக் விஜய் சிங் கண்டனம்!


ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று பேசும் போது போது இந்தியா ஒரு இந்து நாடு இந்துத்துவம் இந்தியாவின் அடையாளம் என்று அறிவீனமாக பேசினார்.

செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014

சிலாங்கூரில் ஆட்சியை இழக்கிறது பி.கே.ஆர்?:6 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நீக்கம்

கடந்த சனிக்கிழமை பி.கே.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிலாங்கூர் மந்திரி புசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம், இன்று மாலை பி.கே.ஆர் மற்றும் ஜ.செ.க-வைச் சேர்ந்த 6 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை உடனடி பதவி நீக்கம் செய்தார்.

எகிப்தில் நுழைய மனித உரிமை கண்காணிப்பு இயக்குனருக்கு அனுமதி மறுப்பு

எகிப்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்தி வந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து இறக்கி அதிபர் பதவியைக் கைப்பற்றிய முகம்மது மோர்சி அங்கு ஏற்பட்ட எதிர்ப்புகளால்  பதவி இறக்கம் செய்யப்பட்டார்.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு இனக்கலவரங்கள் அதிகரிப்பு: சோனியா

மத்தியில் பா.ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு இனக்கலவரம் கடுமையாக அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய ஆப்பிரிக்காவில் முதல் முஸ்லிம் பிரதமர்

மத்திய ஆப்பிரிக்காவில் முதல் முஸ்லிம் பிரதமராக முஹம்மது காமவுனை அதிபர் காதரின் ஸாம்பா பன்ஸா (Picture: President Catherine Samba) நியமித்துள்ளார்.

திங்கள், ஆகஸ்ட் 11, 2014

பிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி!

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘Road to Freedom' என்ற ஆவணப்படத்தில் வீரசவார்க்காருக்கு முக்கிய பங்கினை அளிக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.சவார்க்கார் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை இதில் உட்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.