திங்கள், ஏப்ரல் 27, 2015
ஞாயிறு, ஏப்ரல் 26, 2015
பீகாரில், உ.பி.யில் அதிக பாதிப்பு: இந்தியாவில் 45 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்
நேபாளத்தை தொடர்ந்து இந்தியாவிலும் பல மாநிலங்களில் நேற்று நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதில், பீகார், உத்தரபிரதேசத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. மொத்தம் 45 பேர் நில அதிர்வு பாதிப்பால் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நேபாளத்தை தொடர்ந்து இந்தியாவில் டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
திங்கள், ஏப்ரல் 20, 2015
சனி, ஏப்ரல் 18, 2015
கனடாவில் நரேந்திர மோடி கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு !!!!
பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ளார் அதன் ஒருபகுதியாக 3 நாள் பயணமாக கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இறுதி நாளான இன்று வான்குவரில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவுக்கு சென்றார். முன்னதாக டொரண்டோவில் இருந்து வான்குவருக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பரும் உடன் சென்றார்.
மேகதாதுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு: தமிழகத்தை கண்டித்து கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு நடத்துகின்றன.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் விவசாயிகள், அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வெள்ளி, ஏப்ரல் 17, 2015
புதன், ஏப்ரல் 15, 2015
டென்னிஸ் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம்; சானியாவுக்கு வாழ்த்துகள் குவிகிறது
டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறிய இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
அமெரிக்காவின் சார்ல்ஸ்டன் நகரில் நடந்த பேமிளி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் போட்டியில், பெண்கள் இரட்டையர் இறுதிசுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா- சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ங்கிஸ் ஜோடி 6-0, 6-4 என்ற நேர் செட்டில் டெல்லாக்குவா (ஆஸ்திரேலியா)-தாரிஜா ஜூராக் (குரோஷியா) இணையை சாய்த்து மகுடம் சூடியது.
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் நீட்டிக்கப்படுமா? சுப்ரீம் கோர்ட்டில் 17-ந் தேதி விசாரணை
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிப்பது குறித்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 17-ந் தேதி நடைபெறுகிறது.
பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை எதிர்த்து, அ.தி.முக. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் பெற்றனர்.
பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை எதிர்த்து, அ.தி.முக. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் பெற்றனர்.
சனி, ஏப்ரல் 04, 2015
5 கொலை நடந்ததாக தவறான தகவல்: கமிஷனர் ஜார்ஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீசு
பாப்புலர் பிரண்டு ஆப் இந்தியா என்ற அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சேக் முகமது அன்சாரி. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17ந் தேதி எங்கள் அமைப்பின் நிறுவன நாள் கொண்டாடப்படுகிறது. அன்று ஒற்றுமை ஊர்வலம் நடத்துவது வழக்கம். கடந்த 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராமநாதபுரத்தில் இதுபோன்ற ஒற்றுமை ஊர்வலம் நடத்த முறையாக போலீசில் அனுமதி பெறப்பட்டது.
திண்டுக்கல் அருகே கோர விபத்து: அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் உள்பட 9 பேர் பலி
திண்டுக்கல் அருகே கார்-டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் உள்பட 9 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில் உள்ள அரபிக் கல்லூரியில், அதே பகுதியை சேர்ந்த பஜீருல்லாஹக் (வயது 32) என்பவர் போதகராகவும், பேராசிரியராகவும் இருந்து வந்தார். இவருடைய உறவினர்கள் கொடைக்கானலில் புதிதாக கட்டியுள்ள கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.
எதிர் தரப்பினர் மதிப்பது போல் அணு ஒப்பந்தத்தை நாங்களும் மதிப்போம்: ஈரான் அறிவிப்பு
ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை தடை செய்யும் நோக்கில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய P5+1 நாடுகள் கடந்த 8 நாட்களாக ஸ்விட்சர்லாந்தின் லாஸன் நகரில் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இதற்கான கெடுக்காலம் முடிவடைந்த பின்னரும் இந்த பேச்சுவார்த்தையில் இன்று ஓரளவுக்கு சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)