புதன், மே 27, 2015

காவல் மற்றும் தீயணைப்பு துறைக்கு கட்டப்பட்ட கட்டிடங்கள்; ஜெ., திறந்து வைத்தார்

காவல் மற்றும் தீயணைப்புத்துறைக்கு ரூ.444 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.  இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

மதுரை மாநகர் ஆயுதப்படை வளாகத்தில் தரை மற்றும் 3 தளங்களுடன் 20 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 226 காவல் துறை குடியிருப்புகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலமாகத் திறந்துவைத்தார். 

ஞாயிறு, மே 24, 2015

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது சட்ட நடைமுறைகளுக்கு எதிரானது: இளங்கோவன் பேட்டி

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது சட்ட நடைமுறைகளுக்கு எதிரானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறியுள்ளார். 

வெளிநாட்டு இந்தியர்கள் பற்றி சர்ச்சை பேச்சு: பிரதமர் மோடி மீது சமூக ஆர்வலர் வழக்கு

பிரதமர் மோடி தென் கொரியாவில் சுற்றுப்பயணம் செய்த போது சியோலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது இந்தியாவின் வளர்ச்சி பற்றி குறிப்பிட்டு பேசும் போது, முன்பு வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் பிறந்ததற்காக வருத்தப்பட்டனர்.

திங்கள், மே 18, 2015

முஹம்மது முர்ஸிக்கும், யூசுஃப் அல் கர்ளாவிக்கும் மரண தண்டனை!

சதிப் புரட்சியின் மூலம் நீக்கம் செய்யப்பட்ட எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸிக்கு எகிப்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
முஹம்மது முர்ஸி மற்றும் 105 இஃக்வானுல் முஸ்லிமீன் தலைவர்களுக்கான தண்டனை தீர்ப்பை கெய்ரோ குற்றவியல் நீதிமன்றம் முஃப்தியிடம் ஒப்படைத்துள்ளது.

சனி, மே 16, 2015

மோடி அரசின் மோசமான நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தடை செய்யப்பட்ட குழந்தை உழைப்புக்குக் கதவைத் திறப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மோடி அரசின் மோசமான நடவடிக்கை என கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

வெள்ளி, மே 15, 2015

இந்தியாவின் வரைபடத்தை சீன தொலைக்காட்சி தவறாக வெளியிட்டதால் சர்ச்சை

பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் வரைபடத்தை சீனாவின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தவறாக வெளியிட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் இரண்டு நாள் மாநில பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் கட்சியின் ஆண்டறிக்கை, நிதி அறிக்கை தாக்கல் மற்றும் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மற்றும் தேசிய பொதுக் குழுவிற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகியன நடைபெற்றன.

திங்கள், மே 11, 2015

இன்று தேர்தல் நடத்தினாலும் டெல்லியில் ஆம் ஆத்மி அமோக வெற்றிபெறும்: கெஜ்ரிவால்

டெல்லி அரசை விமர்சித்து தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு எதிராக முதன்மை செயலாளரிடம் புகார் தெரிவிக்க வேண்டும். பின்னர் வழக்கு தொடர வேண்டும் என்று மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

நீர்மூழ்கி கப்பலில் இருந்து புறப்பட்டு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரியின் இலக்கை தாக்கும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வடகொரியா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இது கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிறு, மே 10, 2015

மாஸ்கோ அணிவகுப்பில் ஏவுகணை தாங்கிச் சென்ற டேங்க் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜிப்படையை வென்றதின் 70-ம் ஆண்டு நினைவு தின பேரணி நேற்று ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய மக்கள் கலந்து கொண்டு கண்கவர் பேரணியை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். : நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை (மே 11) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.  பிளஸ் 2 படிப்பில் உயிரியல்- இயற்பியல்- வேதியியல் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர்ப்பதற்கு விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்குகிறது.

சனி, மே 09, 2015

ஜெயலலிதா வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு: பெங்களூருவில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வரும் 11ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பிரிட்டனில் 2வது முறையாக ஆட்சியை பிடித்தார் டேவிட் கேமரூன்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் டேவிட் கேமரூன் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அதிக இடங்களை பிடித்து தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

அங்கு மொத்தமுள்ள 650 தொகுதிகளில், இதுவரை 540 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஞாயிறு, மே 03, 2015

45 முறை இடிந்து விழுந்த சென்னை விமான நிலைய கட்டுமானங்கள்! 11ல் வேல்முருகன் ஆர்ப்பாட்டம்!!


தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அறிக்கை:
’’சென்னை விமான நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டுமானத்தின் மேற்கூரைகள் அன்றாடம் இடிந்து விழுவதும் 'பொன்விழா'வை நோக்கி மேற்கூரை இடிந்து விழுந்துகிறது என்று ஊடகங்கள் ஏகடியம் செய்வதும் தொடர்கிற போதும் மத்திய அரசு இது குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நேபாள பேரழிவு நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,040 ஆக உயர்வு

நேபாள பேரழிவு நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,040 ஆக உயர்ந்து உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தை மையமாக கொண்டு கடந்த 25–ந்தேதி காலையில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளம் மட்டுமின்றி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களையும் உலுக்கியது.

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணை கற்பழிக்க முயற்சி மின்கம்பத்தில் கட்டி வைத்து சாமியாருக்கு செருப்படி


பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணை கற்பழிக்க முயற்சி மின்கம்பத்தில் கட்டி வைத்து சாமியாருக்கு தர்மஅடி கொடுக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு கதக் மாவட்டம் நரகுந்த் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரேவண்ணா சித்தேஷ்வரா மடத்தில் சாமியாராக இருந்து வருபவர் சித்தப்பாஸ்ரீ.