செவ்வாய், மார்ச் 07, 2017

மீனவர் படுகொலை பொறுக்கி சாமி போட்ட கீழ்த்தரமான ட்வீட்

சென்னை: தமிழக மீனவ இளைஞர் பிரிட்ஜோ சிங்கள காடையர்களால் படுகொலை செய்யப்பட்டதைப்? பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழர் விரோத கருத்துகளை தொடர்ந்து கக்கி வருகிறார் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் பொறுக்கி  சுவாமி. ஒட்டுமொத்த தமிழகமே இச்சம்பவத்தால் கொந்தளித்து போய்கிடக்கிறது. ஆனால் இதைப்பற்றி கவலைப்படாத  பொறுக்கி புகழ் பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் திமிர்த்தனமாக கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், இலங்கையுடனான தமிழக மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். ஆனால் தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள குழுக்கள் தீர்வு காண்பதை விரும்பவில்லை. தமிழகத்தில் உள்ள பொறுக்கிகள் (இன உணர்வாளர்கள்), கட்டுமரங்களை எடுத்துக் கொண்டு இலங்கைக்கு போய் அந்நாட்டு கடற்படையுடன் சண்டை போடட்டும் என கிண்டலடித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக