வியாழன், மார்ச் 28, 2013

மக்களை ஏமாற்றும் களவாணிகள்!

மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. நாட்டை கொள்ளையடிப்பதில் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள்  இல்லைதான்.

போர்பக்ஸ் பீரங்கி பெற ஊழல் தொடங்கி பல்வேறு ஊழல்களில் ஊறி திளைத்தவர்கள்தான் காங்கிரஸ் கயவாளிகள். அதுபோல் கார்கில் போரில் மரணித்த ராணுவ வீரர்களை அடக்கம் செய்ய வாங்கிய சவபெட்டியில் கூட ஊழல் செய்த மதவெறி கட்சியினர்தான் பாரதிய ஜனதாவினர்.

இந்த இரண்டு களவானிகளும் சேர்ந்து அடித்த கொள்ளைத்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் பொழுது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆரம்பித்து அவர்கள் கொள்ளையை தொடங்கி வைத்தார்கள். பின் வந்த காங்கிரஸ் கொள்ளையை தொடர்ந்து திறம்பட நடத்தினார்கள். 

இந்த இரண்டு கொள்ளையர்களுக்கு இடையே ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களை ஒன்று செய்யாதீர்கள். அதுபோல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம். பேருக்கு மக்களை ஏமாற்ற பரம விரோதிகள் போன்று சில பரபரப்பு நாடகங்களை ஒருவரை ஒருவர் மாற்றி, மற்றவர் அரங்கேற்றி மக்களை மடையர்கள் ஆக்குவோம் என்பதே இவர்களின் கொள்கை.

மதசார்பற்ற கட்சி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் ஹிந்துத்துவா பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் முன்னின்று நடத்திய மதகலவரங்கள் மீது இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுத்ததில்லை. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மரணித்து போன பால்தாக்ரே, மோடி உமாபாரதி போன்றோர்கள் முன்னின்று நடத்திய மதக்கலவரங்கள் பற்பல, இவர்கள் இதுவரை சட்டத்தின் பிடியில் சிக்கவைக்கப்பட வில்லை. 

இவர்கள் குற்றவாளிகள் என்பது பகிரங்கமாக உலகம் அறிந்த உண்மை. இருந்தும் இவர்களை தண்டிப்பது யார்? இவர்கள் செய்த அனைத்து குற்ற காரியங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காது அவர்கள் சுதந்திரமாக வெளியே உலாவர காங்கிரஸ் உறுதுணையாக இருக்கிறது. பேருக்கு தன்னை மதசார்பற்ற கட்சி என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ், பாரதிய ஜனதாவின் அனைத்து மதவாத செயல்களுக்கும் துணைநிற்கிறது.   
  
இதனால்தான், இவர்கள் மூன்றாம் அணி ஒன்று அமைவதை ஏற்கமறுக்கிறார்கள். எனவே, இருவரும் ஒரே குரலில் மூன்றாம் அணி சாத்தியம் இல்லை என்று ஒத்தக்கருத்தில் ஒலிக்கிறார்கள். இந்த மதவாத, ஊழல் நொடி வீசும் நாற்றம் பிடித்த தேசிய கட்சிகளை மக்கள் தூக்கி எறிந்து விட்டு மாநில, மொழி வாரியான கட்சிகளை தேர்ந்தெடுத்து, மத்தியில் தேசிய கட்சிகள் அல்லாத ஒரு புதிய கூட்டணி ஆட்சி அமைய வழி காண வேண்டும். இப்படிப்பட்ட ஒரு கூட்டணி ஆட்சி நடந்தால்தான் அரசியல் சுதந்திரம் நிலவும். அதன்மூலம் இந்த சுரண்டல் பெரிச்சாளிகளின் உண்மை சுயரூபங்கள் முழுமையாக வெளி உலகத்திற்கு தெரியவரும். 

நன்றி : சிந்திக்கவும்                                                                                                                1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக