வெள்ளி, ஜனவரி 17, 2014

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: தோல்வியை ஒப்புக்கொண்டதை காட்டுகிறது பாரதீய ஜனதா


புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டதை காட்டுகிறது என்று பாரதீய ஜனதாவின் செய்தி தொடர்பாளர்  பிரகாஷ் ஜவடெகர் தெரிவித்துள்ளார்.மேலும், ஐக்கியமுற்போக்கு கூட்டணி தற்போது செயல்படாத சொத்து ஆகி விட்டது.எனவே தேசிய ஜனநாயக கூட்டணி வரும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

நரேந்திர மோடி குறித்து மணி சங்கர் அய்யர் பேசியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, மணி சங்கர் அய்யர்  சாதாரண  மக்களை அவமானபடுத்திவிட்டார் என்று தெரிவித்தார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர், மோடியை பற்றி பேசும் போது, 21-ஆம் நூற்றாண்டில் மோடி ஒரு போதும் பிரதமர் ஆக முடியாது. அவர் விரும்பினால் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில்  டீ விற்பனை செய்ய ஒரு ஸ்டால் அமைத்து தருகிறோம் என்று பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக